Published:Updated:

அனுபவம் பேசட்டும்!

அனுபவம் பேசட்டும்!

அனுபவம் பேசட்டும்!

அனுபவம் பேசட்டும்!

Published:Updated:

நண்பேன்டா..!

அனுபவம் பேசட்டும்!

என் நண்பனின் மனைவிக்குப் பிரசவ நேரம். அந்த சமயம் அவன் வீட்டுக்கு சென்றபோது, நண்பனின் வீட்டில் வேறு சில நண்பர்கள் சிலர் தங்கி இருப்பதைப் பார்த்தேன். அதற்கான காரணத்தை என் நண்பன் சொன்னபோது அசந்துபோனேன். 'சுகப்பிரசவம் நடக்க வாய்ப்புக் குறைவு என்றும், சிசேரியன் செய்வதற்கான வாய்ப்பு அதிகம் என்றும் மருத்துவர் சொல்லி இருக்கிறார். என் மனைவியின் ரத்தம் மிகவும் அரிய வகையைச் சேர்ந்தது. அறுவைசிகிச்சையின்போது அந்த வகை ரத்தத்துக்காக அலைந்து திரியாமல் இருப்பதற்காக, அதே வகை ரத்தம் உடைய நண்பர்களைத் தேடிப் பிடித்துத் தங்கவைத்திருக்கிறேன்’ என்றான் என் நண்பன். அதேபோல பிரசவத்தின்போது நண்பனின் மனைவிக்குச் சிக்கலான அறுவைசிகிச்சை நடந்ததால், ரத்தம் தேவைப்பட, உடன் இருந்த மற்ற நண்பர்கள் ரத்தம் கொடுத்துத் தக்க சமயத்தில் உதவி இருக்கின்றனர். மனைவி மீது அன்பு மட்டும் இருந்தால் போதாது. பிரசவ நேரத்தில் என்ன மாதிரி எல்லாம் பிரச்னைகள் வரக்கூடும் என்பதை மருத்துவரிடம் கலந்து ஆலோசித்து முன்கூட்டியே திட்டமிட்டு, கடைசி நேர டென்ஷனைத் தவிர்த்த நண்பனின் பக்குவம் எல்லோருக்கும் வரவேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- நாகநாதன், கரூர்.

காலோடு வந்த பிரச்னை, செருப்போடு போச்சு!

எனது வலது கால் பாதத்துக்கு அருகில் அடிக்கடி வீங்கி வலித்தபடியே இருந்தது. சிலர் இதைக் 'குதிகால் வாதம்’ என்றனர். வேறு சிலரோ, 'தேவை இல்லாத எலும்பு வளர்ச்சியால்தான் இந்த வலியும் வீக்கமும்’ என்றார்கள். 'அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே தீரும்’ என்றும் ஆளாளுக்கு ஒரு யோசனை சொன்னார்கள். அப்போதுதான் ஒரு மருத்துவரைப் பார்த்தேன். அவர் எனது காலையும்... என் செருப்பையும் ஆராய்ந்தார். உடம்பின் எடை முழுவதும் குதிகாலில் இறங்கி, நடப்பதால்தான் இந்த வலி என்று சொல்லி செருப்பை மாற்ற ஆலோசனை சொன்னார். அதன்படியே செய்தேன். இப்போது குதிகால் வலி இல்லவே இல்லை.

அனுபவம் பேசட்டும்!

உடல்ரீதியான பாதிப்புகள் ஏற்படும்போது நண்பர்கள் உறவினர்களின் கருத்துக்களால் குழம்பாமல், ஒரு நல்ல மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுவதே நல்லது என்பதை நான் உணர்ந்த தருணம் அது. அறுவைசிகிச்சை அளவுக்குப் பயந்துகொண்டு இருந்த ஒரு பிரச்னைக்கு செருப்பை மாற்றச் சொல்லித் தீர்வு கொடுத்த அந்த மருத்துவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

- கோமதி, பெருமாள்புரம், நெல்லை.

அனுபவம் பேசட்டும்!

வியாதி உனக்கு... மருந்து எனக்கு!

என்னுடன் கல்லூரியில் படிக்கும் நண்பனுக்கு உடம்பு சரியில்லை என அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். எனக்கும் அவ்வப்பொழுது தலைவலி வரும் என்பதால், அவனுடன் நானும் டாக்டரிடம் பரிசோதனை செய்துகொண்டேன். டாக்டர் முதலில் அவனையும் அதன் பிறகு என்னையும் பரிசோதனைசெய்து மருந்துகள் எழுதிக் கொடுத்தார். நாங்களும் மருந்துகளை வாங்கிக்கொண்டு கிளம்பிவிட்டோம். இரண்டு நாட்கள் கழித்த பின் இருவருக்கும் முன்பைவிட உடல்நிலை மிகவும் மோசமானது. மறுபடியும் மருத்துவமனைக்குப் போய்ப் பரிசோதனை செய்த பொழுதுதான் மருந்துகள் மாறியிருப்பது தெரியவந்தது. கடைக்காரர் பெயர் கேட்டபொழுது உடல் நிலை சரியில்லாத நண்பன் ஏதோ ஞாபகத்தில் அவன் பெயருக்குப் பதிலாக என் பெயரைச் சொல்லி இருக்கிறான். அதனால்தான் மருந்துகள் மாறிவிட்டன. இதை அறிந்த மருத்துவர் இருவரையும் மிகவும் கண்டித்தார். இரண்டு நாள் சம்பந்தமே இல்லாத மருந்துகளைச் சாப்பிட்டதை நினைத்தால், இப்போதும் கதி கலங்குகிறது.

கிருஷ்ணா ஆதி, திருச்சி

அனுபவம் பேசட்டும்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism