Published:Updated:

உறைதல் நின்று போனால்..?

உண்மைக் கதையும் உன்னத வழிகளும்!

உறைதல் நின்று போனால்..?

உண்மைக் கதையும் உன்னத வழிகளும்!

Published:Updated:
##~##

'ரத்த சொந்தம்’, 'ரத்த பாசம்’ என்று உறவு சம்மந்தப்பட்ட விஷயங்களுக்கு, ரத்தத்தை உதாரணமாகச் சொல்வது வழக்கம். அத்தகைய ரத்தத்தைப் பற்றிய அடிப்படை விஷயங்களை எல்லோரும் தெரிந்துவைத்திருக்க வேண்டியது எத்தனை அவசியம் என்பதற்கு நமது வாசகி சுஹைனாவின் கணவர் மஜ்ஹர் அலி சந்தித்த பிரச்னையே உதாரணம். 

நம் ரத்தத்தில், சிவப்பு அணு, வெள்ளை அணு மற்றும் ரத்தத்தட்டுஅணுக்கள் (Platelets) என்று மூன்று கூறுகள் உள்ளன. சிவப்பு அணு ஆக்சிஜன் கடத்தும் வேலையைச் செய்கிறது. வெள்ளை அணுக்கள், நோய்த்தொற்று ஏற்படும்போது, வெளிக் கிருமிகள் தாக்காமல், அரண் அமைத்து பாதுகாக்கின்றன. ரத்தத்தட்டுஅணுக்கள்  ரத்தம் உறையாமல் காக்கும் என்கிறார் டாக்டர் விகடன் வாசகி சுஹைனா மஜ்ஹர். அவரது கணவர் மஜ்ஹர் அலிக்கு ப்ளேட்லெட்ஸ் குறைவினால் ஏற்பட்ட விபரீதத்தை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உறைதல் நின்று போனால்..?

''ஒரு நாள் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த என் கணவர் தலையில் கைவைத்தபடி அமர்ந்துவிட்டார்.

உறைதல் நின்று போனால்..?

பேச்சுக் குழற ஆரம்பித்தது. பதறியடித்து உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். போகும் வழியில் கை, கால்கள் இழுக்க, வாந்தி எடுத்தார்.

'உடலின் வலது பக்க இயக்கத்துக்குக் காரணமான இடது புற மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டிருக்கிறது. இதற்கு 'லெஃப்ட் கேங்லியாஹெமடோமா’ என்று பெயர். ரத்தக் கசிவு நிற்பதற்கு உரிய மருந்துகள் கொடுத்திருக்கிறோம். நிற்காவிட்டால் மூளையில் சர்ஜரி செய்ய வேண்டும். 48 மணி நேரம் கழித்துதான் எதுவும் சொல்ல முடியும்.’ என்று டாக்டர் சொல்ல நான் அதிர்ச்சியில் உறைந்துபோனேன். நான்கு நாட்கள் ஐ.சி.யூ-வில் வைத்திருந்துவிட்டு, தனி அறைக்கு மாற்றப்பட்டார். ஆனால், பேசும் திறனை முற்றிலுமாக இழந்திருந்தார். அதோடு, வலது கை இயக்கமும் 80 சதவீதம் பாதிப்புக்குள்ளாகி விட்டது. மூளையில் இருந்த ரத்தக் கட்டியைக் கரைக்க மருந்துகள் கொடுத்தார்கள். மீண்டும் ஸ்கேன் எடுத்துப் பார்த்தபோது, உறைந்திருந்த ரத்தம் கரைந்து இருந்தது. ஆனால், 'ரத்தத்தில் ரத்தத்தட்டுஅணுக்கள்  எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது. எனவே, ஹெமடாலஜிஸ்ட்டை போய்ப் பாருங்கள்’ என்றார்கள். உடனே பார்த்தோம்.

ரத்தத்தட்டுஅணுக்கள்  நம் உடலில் சாதாரணமாக இரண்டரை லட்சம் என்ற அளவில் இருக்கும். ஆனால், என் கணவருக்கோ, 50 ஆயிரம்தான் இருந்தது. அதற்கான சிகிச்சையை ஆரம்பித்தார்கள். தினமும் லேபில் போய், ரத்தத்தட்டுஅணுக்கள்  பரிசோதனை செய்யப்பட்டு, போன் மூலம் டாக்டருக்கு தகவல் சொல்லி ஆலோசனை கேட்பது எங்கள் அன்றாட நிகழ்வானது.

படிப்படியாக ரத்தத்தட்டுஅணுக்கள்  எண்ணிக்கை அதிகமாகி ஒரு லட்சத்தைத் தொட்டது. அந்த சமயம்

உறைதல் நின்று போனால்..?

ஹெமடாலஜிஸ்ட், ஒரு சிலருக்கு ரத்தத்தட்டுஅணுக்கள்  பிறவியிலேயே குறைவாக இருக்கும். அதனால் பாதிப்பு இல்லை என்றால், பரவாயில்லை. அதற்கான மருந்தை (ஸ்டீராய்டு) அதிக நாள் எடுத்தால், சர்க்கரை நோய் வரும், அதனால் மருந்தை நிறுத்திவிடலாம் என்றார்.

அடுத்த கட்ட  சிகிச்சையிலும் சில சிக்கல்கள் இருந்தன. மறுபடியும் எல்லா டெஸ்ட்டும் எடுத்தார்கள். ரத்தத்தட்டுஅணுக்கள் குறைவாக இருந்தும், ரத்தக் கசிவு நேரம் மற்றும் உறையும் நேரம் சரியாக இருந்ததால், சிகிச்சையைத் தொடங்கினார்கள். கதிர்வீச்சு முறையில் அறுவைசிகிச்சை நல்லபடியாக முடிந்து, நான்கு நாட்களில் வீடு திரும்பினார். பேச்சும், வலது கை இயக்கமும் முற்றிலும் பழைய நிலைக்கே திரும்பின. எல்லா மருந்துகளையும் நிறுத்தியாகிவிட்டது. இது நடந்து 10 வருடங்கள் ஓடிவிட்டன. இன்று வரை காப்பாற்றிக் கொண்டிருப்பது எங்களுடைய தளராத நம்பிக்கை!'' என்கிறார் அந்த நினைவு மாறாமல்.

டாக்டர் ஜமீலா ரோஸிடம் (பேதாலஜிஸ்ட் -Pathologist). மருத்துவரீதியாக ரத்தத்தட்டுஅணுக்கள்  பற்றிய கேள்விகளை முனவைத்தோம்.

உறைதல் நின்று போனால்..?

ரத்தத்தில் ரத்தத்தட்டுஅணுக்கள் குறையக் காரணம் என்ன?

•  இடியோபதிக் (Idiopathic),   அதாவது காரணம் சொல்ல முடியாத காரணங்களால் ஏற்படுவது.

•  மருந்து மாத்திரைகள் (Drugs)

ஆன்டி மலேரியல், ஆன்டி பேக்டீரியல் மருந்துகள் மற்றும் கீமோதெரபி ஆகியவற்றாலும் ரத்தத்தட்டுஅணுக்கள்  குறைந்துபோகலாம்.

• தொற்று (Infections)

சில வைரல் கிருமிகள் ரத்தத்தட்டுஅணுக்கள்  வளர்ச்சியைச் சிதைத்துவிடும். உதாரணம், டெங்கு காய்ச்சல்.

•  ரத்தப் புற்றுநோய் (Blood cancer)

ரத்தப் புற்றுநோய் வந்தவர்களுக்கு ரத்தத்தட்டுஅணுக்கள்  மிகவும் குறைவாகிவிடும். காரணம் அசாதாரணமான செல்கள் ரத்தத்தட்டுஅணுக்கள் வளரவிடாமல் தடுக்கும். அதனால் உடலில் ரத்தத்தட்டுஅணுக்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிடும்.

சாதாரணமாக ரத்தத்தட்டுஅணுக்கள் எண்ணிக்கை ஒரு கன மில்லி லிட்டருக்கு 1.5 - 4 லட்சம் இருக்க வேண்டும். ரத்தத்தட்டுஅணுக்கள் பரிசோதனைக்கு  நரம்பில் இருந்து இரண்டு மில்லி ரத்தம் எடுத்துச் சோதித்துப் பார்ப்பார்கள்.

உறைதல் நின்று போனால்..?

ரத்தத்தட்டுஅணுக்கள்  எண்ணிக்கை குறையும்போது உடம்பில் என்ன அறிகுறிகள் தென்படும்?

•  ரத்தக் கசிவு ஏற்படும். மிக மெல்லிய அளவில் ஆரம்பிக்கும் இந்தக் கசிவினால் உடலில் சிவப்பு நிறத்தில் திட்டுத் திட்டாகத் தென்படும். இதன் பெயர் 'பெர்பூரா’. இதுதான் அதன் வெளிப்படையான அறிகுறி.

•  உள்உறுப்புகளில் ரத்தக் கசிவு ஏற்படும். அறுவை சிகிச்சையின்போது கட்டுப்படுத்தமுடியாத அளவு ரத்தப்போக்கு ஏற்படவும் ரத்தத்தட்டுஅணுக்களின் எண்ணிக்கைக் குறைபாடே காரணம்.

•  சில சமயம் ஈறுகளில் இருந்து ரத்தம் கசிவதற்கும் பல் எடுக்கும்போது ரத்தம் உறையாமல் தொடர்ந்து வந்துகொண்டு இருப்பதற்கும் ரத்தத்தட்டுஅணுக்கள் குறைவாக இருப்பதே காரணம்.

உறைதல் நின்று போனால்..?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism