Published:Updated:

மக்காச் சோளத்தை மறக்கலாமா?

மக்காச் சோளத்தை மறக்கலாமா?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

##~##

டற்கரைப் பக்கம் போனால் மட்டுமே மக்காச் சோளக் கதிரை சுவைப்பவர்கள் நாம். மற்றபடி மக்காச் சோளத்துக்கும் நமக்கும் பெரிய பந்தம் ஏதும் இல்லாததுபோல் அதனை மறந்துவிடுவோம். ஆனால், ''மக்காச்சோளத்தை மறக்கவே கூடாது. அதில் உள்ள சத்துக்கள் அளவிட முடியாதது!'' என்கிறார் கும்பகோணத்தைச் சேர்ந்த மூத்த சித்த மருத்துவர் சம்பங்கி. 

''மக்காச்சோளத்தில் இருக்கும் சத்துக்கள் மூளையில் இருக்கும் செல்களின் செயல்பாட்டைத் துரிதப்படுத்தும். உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தரும்.

தயமின், பான்டோதெனிக் அமிலம், போலேட், ரிபோஃபிளேவின், பைரிடாக்சின் ஆகிய சத்துக்கள் இதில்

மக்காச் சோளத்தை மறக்கலாமா?

அடங்கி உள்ளன. தாது உப்புக்களான துத்தநாகம், மக்னீசியம், தாமிரம், இரும்பு ஆகியவைகளும் மக்காச் சோளத்தில் உள்ளன.

பச்சைக் கருதைச் சாப்பிட்டால் பற்கள் வலிமை அடையும், பல் தொடர்பான பிரச்னைகள் வராமல் தடுக்கும்.

நோயினால் பாதிப்பு அடைந்தவருக்கு சோள உணவுகள் ஏற்றவை.

மக்காச் சோளத்தை இடித்து, காயவைத்து, மாவாக அரைத்து, கஞ்சியாக செய்தும் சாப்பிடலாம். இது சீதபேதிக்கு நல்ல மருந்தாகும். அதேபோல, களியாகச் செய்தும் சாப்பிடலாம். கதிரை வறுத்தும் சாப்பிடலாம். சூப் செய்தும் பருகலாம். மக்காச் சோளக் கதிரை மூடி இருக்கும் இதழ்களை எடுத்து, தண்ணீரில் கொதிக்க வைத்து கஷாயம் வைத்து குடித்தால் நீர்ச்சுருக்கு, நீர் அடைப்பு, சிறுநீரக வீக்கம், சிறுநீர் பிரியாமை, கல் அடைப்பு போன்ற பிரச்னைகளுக்கு நிவாரணம் கிடைக்கும்.

சோளத்தை முதல்நாளே உரலில் இடித்து சட்டியில் நொதிக்க வைத்து, பின் மறுநாள் காலை கேழ்வரகு மாவுடன் சேர்த்துக் காய்ச்சிக் கூழ் செய்து குடிக்கலாம். தண்ணீர் அல்லது மோருடன் இதைக் கலந்தும் குடிக்கலாம்'' எனப் பட்டியல் போடுகிறார்  டாக்டர் சம்பங்கி.

மக்காச் சோளத்தை மறக்கலாமா?

உணவியல் நிபுணர் சோஃபியா, ''மக்காச் சோளத்தில் கார்போஹைட்ரேட், புரதச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் தாது உப்புக்கள் ஆகியவை உள்ளன. உடலுக்கு அதிக அளவில் வலுவையும் ஆற்றலையும் தரும். இதில் இருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கலுக்கு நிவாரணம் தரும். சோளத்தில் சிறிதளவு சுக்ரோஸ் உள்ளது. அதுவே சோளத்திற்கு சிறிது இனிப்புத் தன்மையைத் தருகிறது. அதனால் சர்க்கரை நோயாளிகள் சோளத்தை அளவுக்கு அதிகமாகச் சாப்பிடக் கூடாது. சிலருக்குக் கோதுமை உணவுகள் ஒவ்வாமையை ஏற்படுத்தும். இந்தப் பிரச்னை இருப்பவர்களுக்கு மக்காச்சோளம் ஒரு சிறந்த மாற்று உணவு'' என்றார்.

 எப்படி சாப்பிடக்கூடாது?

'கார்ன் ஃப்ளேக்ஸ்’ என்ற பெயரில் பளபளப்பான அட்டைப்பெட்டிகளில் விற்கப்படும் சோளம் என்பது 300 டிகிரிவரை சூடுபடுத்தப்பட்டுத் தயாரிக்கப்படுகிறது. இவ்வளவு சூட்டுக்கு உட்படுத்தப்பட்ட சோளத்தில் சத்து இழப்பு எந்த அளவுக்கு நேர்ந்திருக்கும் என்பதை எவராலும் புரிந்து கொள்ள முடியும். அதனால் வயல்வெளியில் விளையும் சோளத்தின் மீது மிளகாய்ப்பொடி சேர்க்காமல் சூடு காட்டி அப்படியே சாப்பிடுவதுதான் சிறந்தது. அல்லது சோளத்தை மாவாக அரைத்தும் பயன்படுத்தலாம்.

மக்காச் சோளத்தை மறக்கலாமா?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு