Published:Updated:

ஆண்கள்

ஆண்கள்

ஆண்கள்

ஆண்கள்

Published:Updated:

ஒரு நாளைக்கு ஒரு சிகரெட்... சரியா?

ஆண்கள்

'மலச்சிக்கலுக்கு மட்டும்' என்று காரணங்காட்டி தினசரி காலை சிகரெட்டோடு டாய்லெட் ரூம் செல்பவர்கள் சிலருண்டு... குளிருக்கு, மூக்கடைப்புக்கு என்று சிகரெட் பற்ற வைப்பார்கள் வேறு சிலர்... தினமும் ஒன்றோ, இரண்டோ புகைப்பதால் எதுவும் தீங்கு வந்துவிடாது என்பது அவர்களது வாதம். மருத்துவ ரீதியாக இது உண்மைதானா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டாக்டர் வெங்கடேஸ்வர பாபு, நுரையீரல் நோய் சிறப்பு மருத்துவர், புதுச்சேரி:

"ஒரு துளி என்றாலும் விஷம், விஷம்தான். உங்கள் கணவரைப்போல, 'ஜஸ்ட் எப்பவாச்சும்' என்ற சால்ஜாப்புடன் புகைப்பவர்களை பல குடும்பங்களிலும் கண்டுகொள்ளாமல்தான் இருக்கிறார்கள். தினம் பாக்கெட் கணக்காக புகைப்பவருக்கு வரும் பிரச்னைகள், தினம் ஒன்றிரண்டு என பல ஆண்டுகள் தொடர்ந்து புகைப்பவருக்கும் பொருந்தும்.

மலச்சிக்கல் என்றால், உரிய மருத்துவ சிகிச்சை பெற வேண்டுமேயழிய, புகை எந்த வகையிலும் நிவாரணம் தராது. அதேபோல குளிர், சளி என்று ஏற்கெனவே திணறிக் கொண்டிருக்கும் நுரையீரலை, சிகரெட் புகை மேலும் பாதிக்கவே செய்யும்.

காலையில் எழுந்ததும் சிகரெட் புகைக்க காரணம் தேடுவதால், உங்கள் கணவரும் புகை பாதிப்பின் பிடியில் இருக்கிறார் என்றே சொல்லவேண்டும். நிகோட்டின் மட்டுமல்ல, ஒரு சிகரெட்டை புகைக்கும்போது சுமார் நாலாயிரம் வேதிப்பொருட்களை புகையோடு நுரையீரல் எதிர்கொள்கிறது. கூடவே, சிகரெட்டால் கேன்சர்தான் வரும் என்பதில்லை. அதற்கு நிகரான பல்வேறு உடல் நல பாதிப்புகளும் ஏற்படலாம்.

முக்கியமாக 'சி.ஓ.பி.டி.'(COPD-Chronic Obstructive Pulmonary Disease) எனப்படும் 'நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்' ஏற்படும். உலகளவில் மக்களை பலிகொள்ளும் காரணிகளில் இந்த நோயும் ஒன்றாக இருக்கிறது. இந்தப் பாதிப்பு கண்டவர்களுக்கு நுரையீரல் பாதிப்பால் மூச்சுத் திணறல், இருமல், சளி நீடித்து இருக்கும். உணவில் சுவையை இழப்பது, இருதய பாதிப்பு, சைனஸ் அறை மற்றும் குரல் நாண் பாதிப்பு, பாத ரத்தக் குழாய்கள் சேதம் என அடுத்தடுத்து அபாயகரங்கள் காத்திருக்கின்றன.

உங்கள் கணவரை பீடிக்கும் புகை பாதிப்புகள், நீங்கள் மற்றும் குழந்தைகள் என்று அருகில் இருப்பவர்களையும் தாக்கும் (passive smoking). எனவே, உடனடியாக உங்கள் மருத்துவரின் உதவியோடு தேவையான ஆலோசனைகளைப் பெறுங்கள்." 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism