திரையரங்குகள் அதிர்கின்றன 'சிவாஜி’ படத்தில் ரஜினி சுண்டும் நாணயம் '3டி’யில் சுழலும்போதும் ரஜினியின் பஞ்ச் வசனங்கள் எதிரொலிக்கும்போதும். நிச்சயமாக '3டி’ திரை அனுபவம் ஓர் அட்டகாசமான அனுபவம்தான். ஆனால், கண்ணுக்கு '3டி’ படங்கள் உகந்தவைதானா?

''சரியான தருணத்தில் எழுப்பப்படும் முக்கியமான ஒரு கேள்வி இது'' என்றவாறே தொடங்கினார் கண் சிகிச்சை நிபுணர் வெங்கட்ராமன் அரவிந்தன். 'நம்முடைய கண்களில் ஒரு மணி நேரத்துக்கு வலது கண் பார்வை அதிகமாக இருக்கும் என்றால், அடுத்த ஒரு மணி நேரத்துக்கு இடது கண் பார்வை அதிகமாக இருக்கும். இது நம்மை அறியாமலேயே மூளையின் உத்தரவுப்படி கண்களில் நடக்கும் நிகழ்வு. ஆனால், '3டி’ படங்களை இரண்டு கண்களும் சேர்ந்து பார்க்கும்போதுதான் நமக்கு

முப்பரிமாணத் தோற்றம் கிடைக்கும். ஒரு கண் செங்குத்தாக வரும் பிம்பத்தையும் மற்றொரு கண் சாய்வான பிம்பத்தையும் ஒரே சமயத்தில் பார்க்கும்போதுதான் அது '3டி’யாக நமக்குத் தெரிகிறது.

இப்படி இரண்டு மூன்று மணி நேரங்கள் இரண்டு கண்களும் தொடர்ந்து வெவ்வேறு பிம்பங்களைப் பார்ப்பதால், கண்களுக்குப் பாதிப்பு ஏற்படும். ஒரு சிலருக்குக் கண்களில் அழுத்தம் ஏற்பட்டுத் தலைவலி, வாந்தி வருவது போன்ற உணர்வுகூட ஏற்படலாம். பலரும் திரையரங்கில் கேட்கும் அதிகபடியான சப்தத்தினால்தான் தலைவலி ஏற்படுகிறது என்று நினைப்பது உண்டு. கண்கள் தசைப் பகுதிக்கு அதிகம் அழுத்தம் தருவதால், ஏற்படும் உணர்வே இது.

தவிர, கண்களில் தொற்றுநோய் பாதிப்பு உள்ளவர் அணிந்த கண்ணாடியை மற்றவர்கள் அனியும்போது, நோய்த்தொற்று மற்றவர்களுக்கும் பரவ வாய்ப்பு உண்டு. முக்கியமாக 'ஹெர்பஸ்’(HERPES),அடினோ (ADENO) வைரஸ் ஒருவருக்கு இருக்கும் எனில், அவர் அணிந்த கண்ணாடியை வேறு ஒருவர் அணியும்போது எளிதாக அந்தக் கிருமிகள் அடுத்தவர் கண்களையும் பாதிக்கும்.

அதிலும் கண்களில் லென்ஸ் போட்டு இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். இவர்கள்

எப்போதும் கண்களைச் சுத்தமாக வைத்துக்கொள்வது முக்கியம். '3டி’ கண்ணாடியில் சிறிய தூசிகள் இருந்து அது கண்ணுக்கும் லென்சுக்கும் நடுவில் மாட்டிக்கொண்டால், கருவிழிகளில் கீறலை ஏற்படுத்தலாம். '3டி’ படங்களைப் பார்ப்பவர்கள், முதலில் கண்ணாடிச் சுத்தத்துக்கு கவனம் அளிக்கும் திரையரங்குகளைத் தேர்ந்தெடுப்பது அவசியம்'' என்றார்.

திரையரங்குகள் எந்த அளவுக்கு கண்ணாடி சுத்தத்துக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன? சென்னை தேவி திரையரங்கின் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவரான கே.என்.கே.வெங்கடேஷ்வரனிடம் பேசினோம். 'எங்கள் திரையரங்கில் எப்போது முதன்முதலாக '3டி’ படம் வெளியிட்டோமோ, அப்போதே கண்ணாடிகளை 'கேஸ் ஸ்டெர்லைசேஷன்’ செய்ய ஓர் தனி ஆய்வகமே அமைத்துவிட்டோம். ஒவ்வொரு காட்சியும் முடிந்ததும், கண்ணாடிகளை இந்த இடத்துக்குக் கொண்டுவந்து சுத்தமான துணியால் துடைத்து, யுவி சேம்பரில் ஐந்து விநாடிகள் வைத்து சுத்தப்படுத்திய பின்னரே அடுத்த காட்சிக்குப் பயன்படுத்துவோம். ஆனால், பெரும்பாலான திரையரங்குகளில் இப்படிப்பட்ட வசதி இல்லை என்பதே உண்மை'' என்றார் வெளிப்படையாக.

சரி, ரசிகர்களாகிய நாம் எப்படி நம்மைப் பாதுகாத்துக்கொள்வது?

படத்துக்குப் போகும்போது, கையோடு வெட் டிஷ்யூ பேப்பர் ஒன்றை எடுத்துச் செல்லலாம். வெட் டிஷ்யூவில் ஆல்கஹால் இருப்பதால், கண்ணாடியை அதனால், துடைக்கும்போது கிருமிகள் இறந்துவிடும். நீங்கள் கண்ணாடி அணிபவராக இருந்தால், உங்கள் கண்ணாடியில் மேல்தான் '3டி’ கண்ணாடியை அணிய வேண்டும். கண்ணாடி அணிந்த பின் கண்களை வெறும் கைகளால் கசக்கக் கூடாது. படம் பார்க்கும்போது தலை வலிப்பது போன்ற உணர்வு ஏற்பட்டால், கண்ணாடியைக் கழற்றிவைத்து, கண்களுக்குச் சற்று நேரம் ஓய்வு கொடுங்கள். படம் பார்த்து வந்த பின் குளிர்ந்த நீரில் கண்களை நன்றாகக் கழுவுங்கள். பின் நல்ல ஓய்வு தேவை.

அப்புறம் என்ன? சுத்தமான 3டி கண்ணாடி போட்டுக்கிட்டு அதிர அதிரப் படம் பாருங்க!

- நா.சிபிச்சக்கரவர்த்தி

ரா.மூகாம்பிகை,

படங்கள்: காயத்ரி அகல்யா, பி.கார்த்திக்