Published:Updated:

குளிர்விக்கும் குற்றாலம்!

குளிர்விக்கும் குற்றாலம்!

குளிர்விக்கும் குற்றாலம்!

குளிர்விக்கும் குற்றாலம்!

Published:Updated:
குளிர்விக்கும் குற்றாலம்!
##~##

மெரிக்க, ஐரோப்பிய நாடுகள் மருத்துவச் சுற்றுலாவை ஏதோ ஒரு புதிய கண்டுபிடிப்புபோல இப்போதுதான் கொண்டாடத் தொடங்கி இருக்கின்றன. நமக்கோ அது காலம் காலமாகத் தொடரும் மரபு. எளிய உதாரணம்... குற்றாலம்! 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நெல்லை மாவட்டத்துக்கு இயற்கை அளித்திருக்கும் கொடை பொதிகை மலை. இங்கு அரிய மூலிகைகள் நிறைய இருக்கின்றன. சித்த வைத்தியத்தின் மூலவர் எனப் போற்றப்படும் அகத்தியர் இங்குதான் வசித்தார் என்பது நம்பிக்கை.

குற்றாலத்தில் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, சிற்றருவி, புலி அருவி ஆகிய அருவிகளுக்குச் செல்ல அனுமதி உண்டு. பழத்தோட்ட அருவி, செண்பகாதேவி அருவி, தேனருவி, புது அருவி ஆகிய அருவிகள் வனத் துறையின் கட்டுப்பாட்டில் இருப்பவை. அனுமதி பெற்றால், இங்கும் செல்லலாம். இது தவிர, குற்றாலத்தில் இருந்து எட்டு கி.மீ. தூரத்தில், குண்ணாறு நீர்த் தேக்கம் இருக்கிறது. அருகிலேயே நெய்யாறு அருவியும் இருக்கிறது. ஆகையால், குற்றாலச் சுற்றுலாவின் நோக்கமே குளியல்தான். இந்தக் குளியலோடு கூடுதல் போனஸாக இங்கே கிடைப்பது மசாஜ்!

குளிர்விக்கும் குற்றாலம்!

இங்கே பேரருவி அருகே மசாஜுக்கு என ஒரு குறிப்பிட்ட இடத்தைக் குற்றாலம் பேரூராட்சி நிர்வாகம் ஒதுக்கி இருக்கிறது. தலைக்கு மட்டுமான ஆயில் மசாஜ் ரூ.200 என்பதில் தொடங்கி   உடல்

குளிர்விக்கும் குற்றாலம்!

முழுவதற்குமான ஆயில் அல்லது பவுடர் மசாஜ் ரூ. 1200 என்பது வரை நோக்கம் போல் வசூலிக்கிறார்கள். ஆனால், ஐந்தருவியில் மசாஜ் கட்டணம் முறைப்படுத்தப்பட்டு இருக்கிறது. சுற்றுலாத் துறையின் சார்பில் டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு மசாஜ் செய்வதால் கட்டணம் அதிகம் இல்லை. இங்கு சாதாரண ஆயில் மசாஜ் (தலைக்கு மட்டும்) செய்வதற்கு வெறும் 30 ரூபாய் மட்டுமே. உடல் முழுவதுக்குமான ஸ்பெஷல் மசாஜுக்கு ரூ. 100 வாங்குகிறார்கள். இதேபோல, ஆயுர்வேத முறையில் மசாஜ் செய்வதற்கு ரூ. 200 வசூலிக்கிறார்கள்.

மசாஜ் தொழிலில் ஈடுபட்டு இருக்கும் பேச்சிப்பாண்டி என்பவரிடம் பேசினோம்.

''எங்க தாத்தா காலத்தில் இருந்தே எங்களுக்கு இதுதான் தொழில். இங்கே உள்ள பலரும் மசாஜ் தொழில் செய்யறவங்கதான். உடல் அசதி மட்டும் இல்லாம மூட்டுவலி, முதுகு வலி, கால் வலினு வலியோட வர்றவங்க யாரா இருந்தாலும் குற்றாலம் மசாஜ் குணம் கொடுக்கும். அதுதான் குற்றாலம் ஸ்பெஷல்'' என்றவர் தொழிலில் மும்முரமானார்.

ஆர்வத்தோடு அவரைப் பார்த்தோம். மசாஜ் செய்ய உட்கார்ந்த ஒருவரின் கை, கால்களின் விரல்கள், முதுகுப்பகுதி, கழுத்து ஆகிய இடங்களில் சொடுக்கு எடுத்தார். அத்துடன், காது மடல், மூக்குப் பகுதி, உதடு ஆகிய இடங்களிலும் சொடுக்கு எடுத்து ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். மசாஜ் செய்த சிவகங்கையைச் சேர்ந்த சுரேஷ் என்பவரிடம் பேசியபோது, ''எந்த எதிர்பார்ப்பும் இல்லாம சும்மா மசாஜ் செஞ்சுக்கலாம்னுதான் வந்தேன். ஆனா, மசாஜுக்கு அப்புறம் என்னுடைய உடம்பே பஞ்சு மாதிரி லேசாகிருச்சு!'' என்றார் மகிழ்ச்சியுடன்.

குளிர்விக்கும் குற்றாலம்!

குற்றாலக் குளியலும் மசாஜும் எந்த அளவுக்கு மருத்துவரீதியாகப் பலன் அளிக்கக் கூடியன?  உலகத் தமிழ் மருத்துவக் கழகத்தின் தலைவரும் சித்த மருத்துவருமான பாவநாசன் மைக்கேல் ஜெயராஜிடம் பேசினோம்.

''பொதிகை மலை  வழி வர்ற தண்ணீருக்கு மருத்துவக் குணம் உண்டு. அதனால்தான், இந்த அருவிகள்ல எவ்வளவு நேரம் குளிச்சாலும் சளிப் பிடிக்குறது இல்லை. மசாஜைப் பொறுத்தவரை உடலில் மூலிகை தைலத்தைத் தடவுவதால் அதன் மருத்துவக் குணம் நமக்குப் பலனைக் கொடுக்கும். அதேசமயம் சில இடங்கள்ல முறையான பயிற்சி எடுக்காதவங்களும் மசாஜ் செய்றாங்க. சுற்றுலாவுக்கு வர்றவங்க சிலர் குடிச்சுட்டு வந்து மசாஜ் எடுத்துக்குறாங்க. இது இரண்டுமே நல்லது இல்லை. இந்த விஷயத்தில் மட்டும் கவனமா இருந்தா, குற்றாலம் மசாஜ் ஒரு ஆனந்த அனுபவம்தான்'' என்றார் அக்கறையுடன். அப்புறம் என்ன... வருகிற சீஸனுக்குப் புறப்பட வேண்டியதுதானே?

- ஆண்டனிராஜ், படங்கள்: எல்.ராஜேந்திரன்

 ஆன்மீகத்திலும் மூலிகை

குற்றாலத்தில் பிரபலமான குற்றாலநாதர் கோவில் அமைந்துள்ளது. ஆன்மீகப் பயணமாக வருபவர்கள் இந்தக் கோயிலுக்குச் சென்று வழிபடலாம். தவிர, கோயிலுக்குச் சொந்தமான சித்திரசபை மண்டபத்துக்கு வந்தால், அங்குள்ள அழகிய ஓவியங்களைக் கண்டு மகிழலாம். இந்த ஓவியங்கள் மூலிகை வர்ணங்களால் தீட்டப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

 இயேசு காவியம் படைத்த இடம்!

கண்ணதாசனுக்குக் குற்றாலத்தின் மீது பெரிய ஈர்ப்பு உண்டு. 'இயேசு காவிய’த்தை எழுத அவர் தேர்ந்தெடுத்த இடம் குற்றாலம்தான். ஐந்தருவிக்கு அருகே உள்ள தேம்பாவனி தோட்டத்தில்,  அமர்ந்துதான் இயேசு காவியத்தை அவர் எழுதினாராம்!

 போக்குவரத்து வசதி

குற்றாலத்துக்குச் சென்னையில் இருந்து வருபவர்கள் பொதிகை எக்ஸ்பிரஸ் (12661) ரயிலைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இரவு 8.05 சென்னையில் புறப்படும் இந்த ரயில் மறுநாள் காலை 7.30 மணிக்கு தென்காசியை வந்தடையும். அங்கிருந்து குற்றாலம் 3 கி.மீ. தூரம் மட்டுமே. அடிக்கடி பஸ் உண்டு. ஆட்டோவில் செல்வது என்றால், 50 ரூபாய் கேட்பார்கள். தங்குவதற்கு ஏராளமான விடுதிகள் உண்டு. வாடகை 500 ரூபாய் முதல்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism