Published:Updated:

முன்னோடிகள்

முன்னோடிகள்

முன்னோடிகள்

முன்னோடிகள்

Published:Updated:
முன்னோடிகள்
##~##

மருத்துவத் துறையில் 'பிளாஸ்டிக் சர்ஜரி’ என்று சொல்லப்படும் ஒட்டுறுப்பு அறுவைசிகிச்சை இன்றைக்கு எல்லாம் சர்வ சாதாரணம். ஆனால், பல நூற்றாண்டுகளுக்கு முன் அதைப் பற்றிக் கற்பனை செய்து பாருங்கள். அதுவும் இந்தியாவில்... ஆனால், அந்த அற்புதம் இங்கேதான் நிகழ்ந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 இந்த அறுவைசிகிச்சையை அறிமுகப்படுத்தி, அதன் சூட்சுமத்தை அனைவருக்கும் பயிற்றுவித்தவர் சுஷ்ருதா. கங்கைக் கரை நகரான வாரணாசியில் வாழ்ந்தவர். வாழ்ந்த காலம் துல்லியமாகத் தெரியவில்லை. சுஷ்ருதா எழுதிய சிகிச்சை குறிப்புகள் 'சுஷ்ருதா சம்ஹிதா’ என்ற நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு மாணவனும் ஆறு ஆண்டு மருத்துவம் பயில வேண்டும் என்று நிர்ணயம் செய்திருந்த சுஷ்ருதாவின் குறிப்புகளில் அறுவைசிகிச்சையை எப்படிச் செய்வது என்று மட்டும் அல்லாமல், மாணவர்களுக்கு அதை எவ்வாறு கற்பிப்பது என்றும் விளக்கப்பட்டு இருக்கிறது. ஏறத்தாழ 120 அறுவைசிகிச்சை உபகரணங்கள்பற்றியும், 300 அறுவைசிகிச்சை முறைகள்பற்றியும் அவற்றில் விளக்கப்பட்டு உள்ளன. வெட்டி எடுத்தல் (Excision), தழும்பாக்குதல் (Scarification), குத்துதல் (Puncturing), ஆராய்தல் (Exploration), வெளியே எடுத்தல் (Extraction), கழிவுகளை வெளியே எடுத்தல் (Evacuation),  தையல் போடுதல் (Suturing), வலி நீக்கம் செய்தல்(Anesthesia) என்று அறுவைசிகிச்சையினை எட்டு விதமாக வகைப்படுத்துகிறார் சுஷ்ருதா. பிளாஸ்டிக் சர்ஜரிபற்றியும் கணிசமான குறிப்புகள் அதில் உள்ளன.

முன்னோடிகள்

பிளாஸ்டிக் அறுவைசிகிச்சை நுணுக்கங்களான திட்டமிடுதல், நேர்த்தி (Precision) ரத்த சேதம் தடுத்தல் (Hemostasis) மற்றும் வடிவமைத்தல் போன்றவற்றை எல்லாம் சுஷ்ருதா தமது குறிப்பில் எழுதிவைத்து இருக்கிறார். மேலும், குறைபாடுள்ள இடங்களில் தோலை வெட்டி ஒட்டுதல் (Skin grafting), பக்கத்தில்

முன்னோடிகள்

உள்ள திசுக்களில் இருக்கும் ரத்தக் குழாய் மூலம் சேதமடைந்த பகுதிகளைச் சரிசெய்தல் (Pedicle flap) போன்றவையும் விளக்கப்பட்டு உள்ளன. ஒழுங்கற்ற மூக்கினை வடிவமைக்கும் சிகிச்சையான 'ரைனோபிளாஸ்டி’ (Rhinoplasty) சுஷ்ருதாவின் செயல்முறைகளில் மணிமகுடம் எனலாம். உடலின் வேறு பகுதியில் இருந்து சதையை எடுத்து மூக்கை வடிவமைக்க முடியும் என்று முதலில் கண்டறிந்தவர் அவரே! இன்றளவும் இச்செயல்முறை பிளாஸ்டிக் சர்ஜரியில் 'இந்திய முறை’ என்றே விவரிக்கப்படுகிறது.  

உடல் நலம் என்பது உடலும் மனதும் சம்பந்தப்பட்டது என்றும், மகிழ்ச்சி, ஊட்டச்சத்துமிக்க உணவு, முறையான கழிவு வெளியேற்றம் முதலியவை உடல் நலனுக்கு இன்றியமையாதவை என்றும் ஒரு மனிதனின் வலி மற்றும் துயர்நீக்குதல், உயிர் காத்தல் போன்றவையே மருத்துவர்களின் அதிமுக்கியப் பணிகள் என்றும் சொல்கிறார் சுஷ்ருதா.

தையல் போடுவதற்கான சிறப்பு நூல் தயாரித்தல், செம்பு மற்றும் எலும்பிலான ஊசி தயாரித்தல், 20 வகையான கூரிய உபகரணங்களை வடிவமைத்தது, 101 வகையான முனை மழுங்கிய உபகரணங்கள் மற்றும் அதைப் பயன்படுத்தும் வழிமுறைகளைச் சொன்னது, கன்னக் கதுப்பில் சதை எடுத்துக் காதினைச் சீரமைத்தல், அன்னப்பிளவு, கிழிந்த உதடு ஆகியவற்றை சரி செய்தல், தீக்காயங்களின் கடுமையினை நான்கு வகையாகப் பிரித்தது, மின்னல் மற்றும் வெப்பத்தின் தாக்குதலால் உடம்பில் ஏற்படும் உபாதைகள் பற்றிய குறிப்புகள், காயங்களுக்கு கட்டுப் போடுவதில் 14 வகையான முறைகளைச் சொன்னது, இறந்தவர்களின் உடல்களை உடற்கூறாய்வு (றிஷீstனீஷீக்ஷீtமீனீ) செய்தல், காயங்களில் ரத்தக் கறை படியாமல் இருக்க அட்டைகளை உபயோகப்படுத்துதல் போன்றவை இவருடைய முக்கியமான சாதனைகள்!

- திரும்பிப் பார்ப்போம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism