Published:Updated:

சாப்பிடக் கற்றுக்கொடுக்கும் சரியான புத்தகம்!

சாப்பிடக் கற்றுக்கொடுக்கும் சரியான புத்தகம்!

சாப்பிடக் கற்றுக்கொடுக்கும் சரியான புத்தகம்!

சாப்பிடக் கற்றுக்கொடுக்கும் சரியான புத்தகம்!

Published:Updated:
சாப்பிடக் கற்றுக்கொடுக்கும் சரியான புத்தகம்!
##~##

'உணவையே மருந்தாகப் பரிந்துரைக்கிறது ஆயுர்வேதம்’ என்கிறார் டாக்டர் எல்.மஹாதேவன். 'உணவே மருந்து’ புத்தகம் இதைப் பற்றிப் பல விஷயங்களை விரிவாகப் பேசுகிறது. ஸ்ரீ சாரதா ஆயுர்வேத மருத்துவமனையின் மருத்துவக் குழு உதவியுடன் மஹாதேவன் எழுதி உள்ள இந்த நூலில், அன்றாட வாழ்வில் நாம் உண்ணும் சாதம், குழம்பு, ரசம், துவையல், பச்சடி, தொக்கு, பழரசம், கஞ்சி போன்ற பழமை மாறாத, மருத்துவக் குணம் உள்ள உணவு வகைகள், 18 தலைப்புகளில் தெளிவான செய்முறைகளுடன் தொகுக்கப்பட்டு உள்ளன. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சூப், சாத வகைகள், களி, பொடிகள், 14 வகையான ரசம், பச்சடி, துவையல், தொக்கு, தின்பண்டங்கள் பற்றிய ஏறத்தாழ 115 செய்முறைக் குறிப்புகள் கொண்டது இந்த நூல். கடுக்காய், தாணிக்காய், நெல்லிக்காய், மாதுளம்பழம், நீர்மோர், கறிவேப்பிலை, வெந்தயம், சுக்கு, மிளகு, திப்பிலி, பசுநெய், ஆட்டு மாமிசம் (அசைவப் பிரியர்களுக்கு) ஆகியவற்றை நித்திய ரசாயனம் என டாக்டர் குறிப்பிடுகிறார். அதாவது தினமும் சாப்பிட வேண்டியது என்கிறார்.

சாப்பிடக் கற்றுக்கொடுக்கும் சரியான புத்தகம்!

நாம் மறந்துபோய்விட்ட, ஆனால் உடலுக்கு நன்மை தரும் உணவு வகைகளை இந்நூல் நமக்கு நினைவுபடுத்துகிறது. பல விதமான ருசியான சமையல் குறிப்புகளைப் பட்டியலிட்டு ஆரோக்கியமே உணவின் முக்கிய அம்சம் என்பதையும் வலியுறுத்திச் சொல்கிறது இந்த நூல். ஒவ்வோர் உணவு வகைக்கும் அதன் செய்முறைக் குறிப்புகளோடு அதில் உள்ள சத்துக்கள்பற்றிய விவரங்களையும் தருகிறார் நூலாசிரியர். அந்த உணவு வாதம், பித்தம், கபம் ஆகியவற்றில் எதைக் கூட்டும், எதைக் குறைக்கும் என்பன போன்ற கூடுதல் குறிப்புகளும் உண்டு. உணவுகளை, சாத்வீக உணவுகள், ராஜஸிக உணவுகள் மற்றும் தாமஸிக உணவுகள் என மூன்று விதமாகப் பிரித்து, உணவுக்கும் மனதுக்கும் உள்ள தொடர்பை விளக்குகிறார் நூலாசிரியர். அளவோடு உண்ணுதலை அவசியமாக வலியுறுத்துகிறது இந்த நூல்.

அந்தக் காலத்தில் நம் முன்னோர்கள் பயன்படுத்திய சமையல் பாத்திரங்களின் படங்களும் இந்தப் புத்தகத்தில் தரப்பட்டு உள்ளன. நூலுக்குக் கூடுதல் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி இருக்கும் விஷயம் இது. உப்பு சேர்த்துப் புளியைக் கொதிக்கவைத்து முழங்கால்களில் கெட்டியாகத் தடவினால் முழங்கால் வலி மறையும் என்பது போன்ற பயனுள்ள குறிப்புகளும் இதில் நிறைய உண்டு. உணவை எவ்வாறு சாப்பிட வேண்டும், எதனுடன் சேர்த்துச் சாப்பிடக் கூடாது என்பன போன்ற வழிமுறைகள் விளக்கமாகச் சொல்லப்பட்டு உள்ளன. இனிப்பை முதலிலும், கசப்பைக் கடைசியிலும் உணவில் சேர்க்க வேண்டும்; தேனை எக்காரணம் கொண்டும் சூடுபடுத்தக் கூடாது; உணவிற்குப் பின் நீர் அருந்துவதே நல்லது என்பன போன்ற பல பயனுள்ள தகவல்களால் நிரம்பி வழிகிறது இந்தப் புத்தகம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism