''வாய்க்கு ருசியாக இருக்கணும்... வாரத்துல அஞ்சு நாளாவது அசைவம் இருக்கணும்... சாப்பாடு விஷயத்துல இப்படித்தான் இருந்தேன். அதுதான் சாப்பாட்டுக்கு அழகுன்னும் நெனைச்சுக்கிட்டு இருந்தேன். சாப்பிடுறது முக்கியம் இல்லை; எதை, எப்போ சாப்பிடணும்கிறதுதான் அதைவிட முக்கியம்; ஏன்னா சாப்பிடுறதும் ஒரு கலைனு எனக்குப் புரியவைச்சவங்க என் மனைவி துர்காதான்'' என்று தன் செல்ல மகள் வெண்பாவை அணைத்தபடியே பேசத் தொடங்கினார் வாய்ஜால மன்னர் கோபிநாத்.

''ஆரோக்கியம்கிறது நாம எப்படி நடந்துக்குறோம்கிறதுலதான் இருக்கு. இன்னும் சொல்லப்போனா அது ஒவ்வொரு விஷயத்துலேயும் இருக்கு. முக்கியமா உணவுல.

எங்க வீட்டுல என்ன செய்வோம்னா எதையுமே பிரசார நெடி இல்லாம ஆரோக்கியமாக்கிடுவோம். எப்படின்னு கேட்குறீங்களா? உதாரணமா, தூதுவளையை எடுத்துக்குவோம். அது மாதிரி சளிக்கு அருமருந்து கிடையாது. வாரத்துக்கு ஒரு நாள் எடுத்துக்கிட்டாக்கூட சளி நெருங்காது. ஆனா, அதை அரைச்சு, கரைச்சுக் குடிச்சா என்னவாகும்? பச்சிலை வாடை அடிக்கும். குழந்தைங்க நெருங்கவே நெருங்காது. எங்க வீட்டுல என்ன செய்வோம் தெரியுமா? இட்லிக்குத் தூதுவளையை வைச்சு சட்னி ஆக்கிடுவோம். இல்லாட்டி தோசை சுட்டுச் சாப்பிட்டுடுவோம். யாரையும் சாப்பிடச் சொல்லி வற்புறுத்த வேண்டியது இல்லை. தானா உள்ளே ஓடிடும்... எப்படித் தக்காளிச் சட்னி, ரவா தோசை ஒடுதோ... அப்படி. தினம் ஒரு கீரை, தினம் ஒரு பழம், தினம் ஒரு சிறுதானியம்னு உங்கள் வீட்டுச் சமையலை அமைச்சுப் பாருங்க. உடம்பு நீங்க சொல்றதைக் கேட்கும்!

அதேபோல, என்ன செஞ்சு சாப்பிட்டாலும், ஆரோக்கியத்துக்காகக் கொஞ்சம் மெனக்கெடுங்க. உதாரணமா, மிளகாய்க்குப் பதிலாப் பல விதங்கள்ல நாம மிளகைப் பயன்படுத்தலாம். உடம்புக்கு மிளகாயைவிட மிளகு எவ்வளவோ நல்லது. ருசியும் அருமையா இருக்கும். மிளகுக் கோழி வறுவல் சாப்பிட்டுப் பாருங்க. ருசி புரியும். இது மாதிரி ஒவ்வொரு விஷயத்துலேயும் கவனம் இருக்கணும். மளிகை சாமான்களைத் தரமா வாங்குறதுல தொடங்கி, சரியான நேரத்துல சரியான அளவு சாப்பிடுறது வரைக்கும் கவனம் தேவை. ஆனா, இதுக்கு கொஞ்சம் சமையல் தெரிஞ்சு இருக்கணும்.

என் பூர்வீகம் அறந்தாங்கிப் பக்கத்துல உள்ள கொட்டாக்காடு. அப்பாவோட முறுக்கு மீசையைப் பார்த்தா யாருமே நடுங்குவாங்க. ஆனா, வீட்டுக்குள்ள தினமும் காலையில காபி போட்டு எங்களை எழுப்பறதே அவர்தான். சமைக்கறதுல அம்மாவோட சேர்ந்து நிற்பார். எதுக்குச் சொல்றேன்னா, சமையல் எல்லாருமே தெரிஞ்சுவைச்சிருக்க வேண்டிய ஒரு கலை.

அடுத்து, தொட்டதுக்கும் ஆஸ்பத்திரிக்கு ஓடக் கூடாது. பல விஷயங்களுக்கான வைத்தியம் நம்ம உடம்புக்கிட்டேயே இருக்கு. அதுக்கும் மேல இருக்கவே இருக்கு கை வைத்தியம். உதாரணமா, சளிப் பிடிக்குதுன்னு வெச்சுக்குங்க. முதல் நடவடிக்கையா ஆவி பிடிச்சுப் பாருங்க. அப்புறம் சித்தரத்தைக் கஷாயம் குடிச்சுப் பாருங்க. அதுக்கும் கேட்கலைன்னா ஆஸ்பத்திரிக்குப் போங்க. எடுத்ததுக்கெல்லாம் ஆஸ்பத்திரிக்குப் போனா, உடம்பு தாங்காது.

அப்புறம், நீங்க பார்க்குற வேலைக்கு ஏத்த மாதிரி உங்க உணவுப்பழக்கத்தைத் திட்டமிட்டுக்குங்க. நான் தினமும் ஒரு பழச்சாறு குடிப்பேன். அதுலேயும் மாதுளை ஜூஸ் எனக்கு ரொம்பப் பிடிச்சது. அதேசமயம், நான் அதிகம் பேசறதால, தொண்டைக்கு எதுவும் வராமப் பார்த்துக்கணும். அதனால, அடிக்கடி உப்பு போட்டு வாய் கொப்பளிப்பேன். இப்படிக் கொஞ்சம் விழிப்பு உணர்வோட இருந்தா ஆரோக்கியத்துக்கு எப்படிக் குறைச்சல் வரும்? என்னடா கண்ணா... அப்பா சொல்றது சரிதானே?''

- கோபிநாத் கேட்க, உடனே அழகாகத் தலையாட்டுகிறாள் வெண்பா!

- ரேவதி, படங்கள்: இரா.ஸ்ரீதர்