பிரீமியம் ஸ்டோரி
அக்கம் பக்கம்
அக்கம் பக்கம்
அக்கம் பக்கம்

குழந்தைகளின் வளர்ச்சிக்கு வைட்டமின் டி மற்றும் கால்சியம் அவசியம். இவை இரண்டும் பசும்பாலில் நிறைந்து இருக்கிறது. ஆனால், நாளன்றுக்கு இரண்டு டம்ளருக்குமேல் பால் அருந்துவது உடலில் இரும்புச் சத்து சேர்வதைத் தடுத்துவிடக்கூடும் என்கிறார் கனடா நாட்டைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவரும் ஆராய்ச்சியாளருமான ஜோனாதன் எல்.மாகையர். தினமும் மூன்று டம்ளர் பால் குடிக்கும் குழந்தைகளுக்கு ரத்தத்தில் ஃபெர்ரிடின் (Ferritin)  அளவு சற்றுக் குறைவாக இருந்ததை இவர் கண்டறிந்து உள்ளார். இந்த ஃபெர்ரிடின்தான் உடலின் இரும்புச் சத்து இருப்புக்கான அடையாளம்.

அக்கம் பக்கம்

அளவான பால்... வளமான வாழ்வு!

அக்கம் பக்கம்

பெண்கள் தனியாக உடற்பயிற்சி செய்வதைவிட, தோழிகளோடு சேர்ந்து செய்யும்போது, பயிற்சிகளை ஊக்கத்துடன் செய்கிறார்களாம். 1,000 பெண்களை வைத்து செய்த பரிசோதனையில், 65 சதவிகிதம் பெண்கள் ஜாகிங், ரன்னிங்  போன்ற பயிற்சிகளை ஊக்கத்துடன் விரைவாகச் செய்து முடித்தார்கள். தோழிகளோடு உடற்பயிற்சி செய்பவர்களுக்கு 236 கலோரிகள் குறைவதாகவும், தனியாகப் பயிற்சி செய்த பெண்களுக்கு அந்த அளவு குறையவில்லையாம். தோழிகளுடன் பயிற்சி செய்தவர்கள் 42 நிமிடங்கள் செய்தார்கள். தனியான பெண்கள் 31 நிமிடமே பயிற்சியில் ஈடுபட முடிந்ததும் அந்த ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளதாம்.  

காமன் கேர்ள்ஸ் லெட்ஸ் ராக்!

அக்கம் பக்கம்

ஆண்களுக்கான தழும்புகள் இல்லா குடும்பக் கட்டுப்பாடு அறுவைசிகிச்சை செய்வதற்கான சிறப்பு மையம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இயங்குகிறது. மாநிலக் குடும்ப நலத்துறை சார்பில், இங்கு ஆண்டுதோறும் குடும்பக் கட்டுப்பாடு அறுவைசிகிச்சை முகாம் நடைபெறுகிறது.  அறுவைசிகிச்சை செய்துகொள்ளும்படி சில குடும்பத் தலைவர்களை அணுகினால், 'குடும்பக்கட்டுப்பாடா? ஸாரி... பஸ் பாஸ் எடுக்கணும்’ என்று ஓட்டம் பிடித்துவிட்டனராம். ஐந்தே நிமிடத்தில் செய்யப்படும் சிகிச்சை முறை இது. இந்த சிகிச்சை செய்துகொள்வதால் தாம்பத்ய உறவில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்னும் விழிப்பு உணர்வை ஏற்படுத்தி குடும்பத் தலைவர்களுக்கு நம்பிக்கை கொடுத்துவருகிறார்கள் மருத்துவர்கள்.

ஆண்களே அலறாதீங்க!

அக்கம் பக்கம்

கொலராடோ பல்கலைக்கழகம் பள்ளிச் சிறார்களுக்காக ஓர் ஆய்வு நடத்தியது. விடைத் தாள்களைத் திருத்தி, கிரேடிங் வழங்க ஆசிரியர் கள் சிவப்பு மையைப் பயன்படுத்துவதால், மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் என்கிறது அந்த ஆய்வு. சிவப்பு மையால் அடித்துத் திருத்தி, கிரேடிங் போடும்போது, ஆசிரியர் - மாணவர் நல்லுறவு பாதிக்கப்படுகிறது. மாணவர்கள் தன்னம்பிக்கையை இழக்கிறார்கள். சிவப்பு நிறம் எச்சரிக்கை, அபாயம், கோபம், தவிர்ப்பு

அக்கம் பக்கம்

போன்றவற்றோடு தொடர்புபடுத்தப்படுவதால்,  மாணவர் கள் தங்களைக் குறைவாக மதிப்பிட்டுக் கொள்ளவும் தூண்டுகிறதாம். ஆனால், நீல வண்ணம் அந்த அளவுக்கு மனக் கஷ்டத்தைத் தருவது கிடையாதாம்.

ரெட்டுக்கு ரெட்!

அக்கம் பக்கம்

தனிமையில் இனிமை காண்பவரா நீங்கள்? உங்களுக்குத்தான் இந்தச் செய்தி. தனிமை உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தைப் பாதிக்கும் என்று அமெரிக்கப் பல்கலைக்கழகம் நடத்திய சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது. ஆரோக்கியமான உறவுமுறைகள் இல்லாதவர்களாகவும், தனிமையில் அதிக நேரத்தைச் செலவிடுபவர்களாகவும் உள்ளவர்களுக்கு இதயம், சர்க்கரை நோய், நினைவாற்றல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் வர வாய்ப்பு

அக்கம் பக்கம்

உள்ளதாக இந்த ஆய்வு கூறுகிறது.

இனிமை ஆகாது தனிமை!

அக்கம் பக்கம்

தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தையை விடத் தாய்க்கு ஏராளமான நன்மைகள் விளைகின்றன என்கிறது சமீபத்திய ஓர் ஆராய்ச்சி. பல பெண்களுக்கு, குழந்தை பிறந்ததும் உடல் எடை அதிகரித்துவிடுகிறது. அதற்குக் காரணம் பேறுகால உணவும் ஓய்வும்தான். குழந்தை பிறந்த பிறகு குறைந்தது ஆறு மாதங்களுக்கு மேல் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு உடல் எடை கூடுவது இல்லை என்பது அந்த ஆராய்ச்சி சொல்லும் உண்மை. தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்குத் தினசரி 500 கலோரி இழப்பு ஏற்படுகிறது. ஜிம்முக்குச் சென்று கடினமான உடற்பயிற்சி எடுப்பதன் மூலம் இழக்கும் சக்திக்கு நிகரானது இது. மேலும், மார்பகப் புற்றுநோய், இதய நோய்களுக்கான வாய்ப்புகளையும் இது கணிசமாகக் குறைக்கிறது.

அப்போ ஒரு வயசு வரை கொடுக்கலாமே தாய்ப்பால்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு