Published:Updated:

எதை 'டிக்' பண்ணப் போறீங்க பாஸ்?

எதை 'டிக்' பண்ணப் போறீங்க பாஸ்?

எதை 'டிக்' பண்ணப் போறீங்க பாஸ்?
##~##

டவுளின் தேசமான கேரளாவில் இயற்கை பேரழகை விரித்துப் போட்டிருக்கும். வரமாக வாய்த்த பசுமையையும் குளுமையையும், உணவுக்கும் மருந்துக்குமான மண்ணாகக் கேரளாவை மாற்றியது. 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மூலிகைகளும், மூலிகையை அடிப்படையாகக்கொண்ட சிகிச்சைகளும் கேரளாவில் அதிகம். குறிப்பாக, தேக்கடியில்!

தேக்கடி, மதுரையில் இருந்து 140 கி.மீ தொலைவில் இருக்கிறது.. சென்னையில் இருந்து 560 கி.மீ. மதுரையில் இருந்தோ. திண்டுக்கல்லில் இருந்தோ தேனி வழியே குமுளிக்குச் சென்றால் 100 கிமீ தொலைவுதான். தேனி டு தேக்கடி முழுக்க பச்சைப்பசேல் விவசாயக் காட்சிகள். தவிர, வைகை அணை, சோத்துப்பாறை அணை, கும்பக்கரை அருவி, சுருளி அருவி எனப் போகும் வழி எங்கும் சுற்றுலாத் தலங்களே!

எதை 'டிக்' பண்ணப் போறீங்க பாஸ்?

தேக்கடியில் கிடைக்கும் மூலிகைகளில் சாறு பிழிந்து அவற்றைப் பயன்படுத்திச் செய்யப்படும் ஆயுர்வேத மசாஜ் மற்றும் மருத்துவம் இங்கு பிரபலம். தலைக்குச் செய்யப்படும் புத்துணர்வு மசாஜ்களோடு, உடல் பருமனைக் குறைக்கும் பவுடர் மசாஜ், ரத்த ஓட்டத்தைச் சீராக்கும் சிதோரா, பிழிச்சல், உத்வாதர்னம், நாஷ்யம் எனத் தேக்கடியில் பல்வேறு சிகிச்சை மசாஜ்கள்.

எதை 'டிக்' பண்ணப் போறீங்க பாஸ்?

சாந்திகிரி ஆயுர்வேத மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் தீபா, ''இது சுற்றுலாத்தலம். சுற்றுலாவுக்கு ஐரோப்பா, அமெரிக்கா நாடுகளில் இருந்தும் நிறையப் பேர் வருகிறார்கள். எல்லா

எதை 'டிக்' பண்ணப் போறீங்க பாஸ்?

மாதங்களிலும் ஆயுர்வேத மருத்துவச் சிகிச்சைக்காக இங்கு வந்து தங்கி வாரக்கணக்கில் சிகிச்சை பெற்றுச் செல்கிறார்கள். தலைவலி முதல் நாட்பட்ட நோய்கள், பக்கவாதம், உடல் பருமன், மனச்சோர்வு, முதுகுவலி, எலும்புத் தேய்மானம், சுவாசப் பிரச்னைகள் எனப் பல்வேறு நோய்களுக்கு ஆயுர்வேத சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

ஆயுர்வேத மூலிகைகளைப் பாதுகாக்கவே கேரளாவில் தனி வாரியம் அமைக்கப்பட்டு இருக்கிறது. சுமார் 100-க்கும் மேற்பட்ட மூலிகைகளைக்கொண்டு மூலிகைத் தோட்டம் அமைத்து வளர்க்கிறது கேரள அரசு. ஒவ்வொரு மூலிகைக்கும் ஒவ்வொரு சிறப்பு.

ஃபிசியோதெரபிஸ்ட் சுனில், ''உடல் புத்துணர்வு மசாஜ்கள் ரூ. 300 முதல் 1,500 வரை,  தலைக்காகச் செய்யப்படும் மசாஜ்கள் ரூ. 200 முதல் 1,000 வரை,  உடல் முழுவதும் செய்யப்படும் சிதோரா சிகிச்சை மூன்று நாட்களுக்கு ரூ.2,000 முதல் 4,500 வரை,  புத்துணர்வு மசாஜ்கள் மூன்று நாட்களுக்கு ரூ. 1,800 முதல் 3,800 வரை, உடல் பருமன் குறைக்க மசாஜ் ரூ.2,000 முதல் 4,500 வரையிலும் கட்டணமாகப் பெறப்படுகிறது. முகச்சுருக்கம், தோல் பளபளப்பு, அழகு சிகிச்சை மசாஜ்கள், பேஷியல் மசாஜ் என்று ரூ. 300 முதல் ரூ. 500 வரை வசூலிக்கப்படுகிறது'' என்கிறார் விளக்கமாக.

எதை 'டிக்' பண்ணப் போறீங்க பாஸ்?

தேக்கடி டூரிஸம் கவுன்சில் சேர்மன் ஷாஜி, ''ஆயுர்வேத சிகிச்சை மசாஜ் செய்யவே கேரளா சூப்பர் ஸ்டார் மம்முட்டி முதல் தமிழ்நாட்டு சூப்பர் ஸ்டார் ரஜினி வரை பலர் இங்கு வருகிறார்கள். நடிகர் விக்ரம் தேக்கடியில் உள்ள ஒரு மசாஜ் சென்டரில் வருடத்துக்கு ஒருமுறை வந்து ஒரு மாதம் தங்கி சிகிச்சை எடுப்பார்.  அரசியல்வாதிகள், அதிகாரிகள், பொதுமக்கள் எனப் பலர் வருகிறார்கள்..'' என்கிறார்.

எதை 'டிக்' பண்ணப் போறீங்க பாஸ்?

மசாஜ் முடித்ததும், மூலிகைக் குளியல், மூலிகைத் தைலங்களால் நீராவிக் குளியல் குளிப்பதால் மனதுக்கும், உடலுக்கும் மாறாத மறுமலர்ச்சிதான்.

தேக்கடியில் மருத்துவ மசாஜ்கள், புத்துணர்வு மசாஜ்கள் செய்வதோடு, முல்லைப் பெரியாறு அணைக்கட்டில் படகு சவாரி செய்யும் வசதியும் இருக்கிறது. இது தவிர, ரிலாக்ஸுக்கு ஏற்ற மலையேற்றம், மூங்கில் கட்டுமரப் பயணம், இரவு நேரக் காட்டுப் பயணம், காட்டுக்குள் குடில் அமைத்துத் தங்குதல், யானை சவாரி என ஏராளமான விஷயங்கள் தேக்கடியில் உள்ளன. ரூ. 500 முதல் வாடகைக்கு அறைகள் கிடைக்கும் தேக்கடிக்கு விசிட் அடித்து, மனதின் அடியில் தேக்கிவைத்திருக்கும் 'கடி’களுக்கு முடிவு கட்டி, உற்சாகத்தோடு ஊர் திரும்பலாமே!

- சண். சரவணக்குமார்,

படங்கள்: வீ.சக்தி அருணகிரி