Published:Updated:

நோபல் பரிசு: ஹெப்படைட்டிஸ் சி வைரஸைக் கண்டறிந்த மூன்று ஆராய்ச்சியாளர்களுக்கு கௌரவம்!

2020 Nobel laureates in Medicine
2020 Nobel laureates in Medicine ( Claudio Bresciani / TT via AP )

கோவிட்-19 தொற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சிகள் மற்றும் பணிகளில் நேரடித் தொடர்புடையவர்களுக்கு இந்த ஆண்டு நோபல் பரிசு அறிவிக்கப்படவில்லை.

2020-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகளைப் பெறுவோர் குறித்த அறிவிப்புகள் வெளியாகத் தொடங்கியிருக்கின்றன. உடலியல் அல்லது மருத்துவம் பிரிவுக்கான விருது இன்று முதலில் அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவத் துறைக்கு சிறந்த பங்காற்றி வரும் மூன்று ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Nobel Prize medal
Nobel Prize medal
AP Photo/Fernando Vergara, File

கல்லீரல் புற்றுநோய், சிரோஸிஸ் உள்ளிட்ட நோய்களை உருவாக்கும் ஹெப்படைட்டிஸ் சி வைரஸைக் கண்டறிந்ததற்காக அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஹார்வீ ஜெ.ஆல்டர், சார்லஸ் எம்.ரைஸ் மற்றும் பிரிட்டிஷை சேர்ந்த ஆராய்ச்சியாளர் மைக்கேல் ஹாட்டன் ஆகியோருக்கு இந்த ஆண்டுக்கான நோபல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விருது பெறுவோருக்கு நோபல் பரிசு பதக்கத்துடன் 1.1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்படும்.

நோபல் பரிசுக் குழுவினர் வெளியிட்ட பத்திரிகைச் செய்தியில், ``நாள்பட்ட ஹெப்படைட்டிஸ் பாதிப்புக்கு காரணமான ஹெப்படைட்டிஸ் சி வைரஸ் கண்டறியப்பட்டதால்தான் அவை உருவாக்கும் நோய்களைக் கண்டறிவதற்கான ரத்தப் பரிசோதனை, புதிய மருந்துகள் கண்டறியப்படுவதற்கான சாத்தியங்கள் உருவாயின. அதன் மூலம் பல லட்சக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கின்றன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரிசு தொடர்பான அறிவிப்புக்கு முன்னர் பேசிய நோபல் அறக்கட்டளையின் தலைவர் லார்ஸ் ஹெய்கென்ஸ்டென், ``கோவிட்-19 பெருந்தொற்று மனித குலத்துக்கு மிகப்பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அதே வேளையில் அறிவியலின் முக்கியத்துவத்தையும் விளக்கியிருக்கிறது" என்றார்.

பல ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்ற ஆராய்ச்சிகளே நோபல் பரிசுக்கான பரிந்துரைக்கு ஏற்றுக்கொள்ளப்படும். அதனால் கோவிட்-19 தொற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சிகள் மற்றும் பணிகளில் நேரடித் தொடர்புடையவர்களுக்கு இந்த ஆண்டு நோபல் பரிசு அறிவிக்கப்படவில்லை.

Summary of the discoveries awarded by this year’s Nobel prize
Summary of the discoveries awarded by this year’s Nobel prize
Photo: Nobelprize.Org
ஐந்து முறை பரிந்துரைக்கப்பட்ட காந்தியின் பெயர்... இருந்தும் அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காதது ஏன்?

அது பற்றிப் பேசிய மருத்துவம் தொடர்பான நோபல் பரிசு தேர்வுக்குழு உறுப்பினரான எர்லிங் நார்பி, ``தற்போது உலகில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் விஷயங்கள் எந்த வகையிலும் நோபல் பரிசு தொடர்பான அறிவிப்புகளில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மருத்துவத் துறையின் புதிய கண்டுபிடிப்புகள் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தைப் பற்றிய முழுமையான புரிந்துணர்வு வருவதற்கு குறைந்தது 10 ஆண்டுகளாவது ஆகும்" என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு