மீண்டும் பன்றிக்காய்ச்சல்!

கடந்த ஆண்டு இந்தியாவை உலுக்கிச்சென்ற பன்றிக்காய்ச்சல் மீண்டும் பரவ ஆரம்பித்து இருக்கிறது. டெல்லி, ஹரியானா, மத்தியப்பிரதேசம் போன்ற வட மாநிலங்களில் நிலவும் குளிர்ச்சியான தட்பவெப்பநிலை காரணமாக அங்கு மிக வேகமாகப் பரவிவருகிறது. கடந்த ஜனவரி முதல் இதுவரை பன்றிக் காய்ச்சலுக்கு இறந்தவர்கள் 510 பேர். ஹரியானாவில் மட்டும் 37-க்கும் மேற்பட்டோர் மரணம். 100-க்கும் மேற்பட்டவர்கள் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பல மாநிலங்களுக்கும் பன்றிக்காய்ச்சல் பரவ வாய்ப்பு உள்ளதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. பன்றிக் காய்ச்சல் காற்றில் பரவக்கூடிய வியாதி. இதற்கும் பன்றிக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. சுகாதாரமாக இருந்தாலே பன்றிக் காய்ச்சல் பரவாமல் தடுக்கலாம். இப்போதே அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தால், தென் மாநிலங்களில் இந்த நோய் பரவாமல் தடுக்க

முடியும்.

சீருடை ஆபத்து!

சீனாவில் பள்ளி மாணவர்களின் சீருடைத் துணியில், புற்றுநோயை உண்டுபண்ணும் சாயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் அதிர்ந்துபோன சீன அரசு அந்தச் சீருடையை மாணவர்கள் அணிவதற்குத் தடை விதித்தது. சீனாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஷாங்காய் நகரில் 21 ஆரம்ப மற்றும் நடுத்தரப் பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளி மாணவர்களுக்கான சீருடைகளை ஒரு ஜவுளி நிறுவனம் சப்ளை செய்கிறது. இந்தச் சீருடைத் துணியில்தான் அந்த நாட்டு அரசால் தடை செய்யப்பட்ட சாயம் இருந்தது கண்டறியப்பட்டு, தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த அதிரடி நடவடிக்கையால் மாணவர்களுக்கு நிகழ இருந்த ஆபத்தைத் தடுத்திருக்கிறது சீன அரசு.

உணவும் உயிரணுவும்!

பீட்ஸா, பர்கர், போன்ற துரித உணவுகளை அடிக்கடி சாப்பிடும் இளைஞர்களின் உயிரணுக்களில் பாதிப்பு ஏற்படும் என்று, சமீபத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் தெரியவந்தது. இந்த நொறுக்குத் தீனிகளில் உள்ள டிரான்ஸ் ஃபேட் (trans fat) எனப்படும் கொழுப்பே இதற்குக் காரணம் என்கிறது அந்த ஆய்வு. இந்த டிரான்ஸ் ஃபேட் கொழுப்பு அதிகம் உள்ள கேக், பீட்சா, பர்கர், சாக்கோ டிரிங்க், சிப்ஸ், கேண்டி ஆகியவற்றை அதிகம் சாப்பிடும் இளைஞர்களுக்கு உயிரணு எண்ணிக்கை பாதிக்கப்படலாம். ஹார்வேர்டு பல்கலைக்கழகமும் ஸ்பெயின் நாட்டின் முர்சியா பல்கலைக்கழகமும் இணைந்து உயிரணுக்கள் பற்றி நடத்தினர். ஆய்வு ரிசல்ட் என்ன தெரியுமா? ஊட்டச் சத்து உணவைச் சாப்பிட்டு வந்த 18 முதல் 22 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களைவிட ஜங்க் ஃபுட் மற்றும் நொறுக்குத் தீனிகளை அதிகம் சாப்பிட்டு வந்த இளைஞர்களுக்கு உயிரணு எண்ணிக்கை குறைந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தினசரி உணவில் 2 கிராம் டிரான்ஸ் ஃபேட் போதுமானது. ஆனால் நொறுக்குத் தீனி, சாட் வகைகளில் அவை கூடுதலாக இருப்பது இளைஞர்களிடம் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் என்பது இறுதித் தீர்ப்பு.

கல்லீரல் கவனம்!

மருந்தகங்களில் விற்பனை செய்யப்படும் மருந்து அட்டையில் அதிகப்பட்சமாக 32 பாராசிட்டமால் மாத்திரைகளும், மற்ற விற்பனை மையங்களில் 16 மாத்திரைகள் மட்டுமே அடைக்கப்பட்டு விற்பனைச் செய்யப்பட வேண்டும் என 1998-ம் ஆண்டு இங்கிலாந்து அரசு ஓர் உத்தரவு பிறப்பித்தது. பாராசிட்டமால் மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்டு தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்தததுதான் காரணம். இந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டதால், இதுவரை 600 உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளதாக, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் ஆராய்ச்சி முடிவு ஒன்றைச் சமீபத்தில் வெளியிட்டு இருக்கிறது. வலிநிவாரணியாகப் பயன்படும் பாராசிட்டமால் மாத்திரைகளை அதிக அளவில் உட்கொள்வதால், கல்லீரலிலும் பாதிப்பு ஏற்பட்டு பலர் உயிர் இழக்கின்றனர். இதுகுறித்து ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் கேத் ஹாட்டன், 'இந்த உத்தரவின் மூலம் பாராசிட்டமால் உட்கொள்வது குறைக்கப்பட்டு, உயிர் இழப்புகள் தவிர்க்கப்பட்டன. ஓர் அட்டையில் அடைக்கப்படும் பாராசிட்டமால் மாத்திரைகளின் எண்ணிக்கையை இன்னும் குறைப்பதன் மூலம், கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டு மேலும் பலர் உயிரிழப்பதைக் கட்டுப்படுத்த முடியும்'' என்கிறார் உறுதியாக.

விபத்தும் விழிப்பு உணர்வும்!

இந்தியாவில் ஆண்டுதோறும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் சாலை விபத்துக்களில் உயிர் இழக்கின்றனர். அதிகபட்சமாக, தமிழகத்தில் 15 ஆயிரம் பேர் பலியாகின்றனர் என்ற அதிர்ச்சித் தகவலை சமீபத்தில் ஓசூரில் நடந்த விபத்துக்கள் தடுப்பு குறித்த விழிப்பு உணர்வுக் கருத்தரங்கில் கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. செந்தில்குமார் தெரிவித்தார். ''வழக்குகள் போடுவதால் மட்டுமே விபத்துக்களைத் தடுத்துவிட முடியாது. பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சமூகப் பொறுப்போடும், விழிப்பு உணர்வோடும் இருந்தால் மட்டுமே சாலை விபத்துக்களைத் தடுக்க முடியும். பெரும்பாலான விபத்துக்கள் மாலை 5

மணி முதல் இரவு 8 மணிக்குள்ளாகவே நடக்கின்றன. குடித்துவிட்டு அதிவேகத்தில் வாகனம் ஓட்டுவதே இதற்கு முக்கியக் காரணம்'' என்கிறார் எஸ்.பி. செந்தில்குமார்.

டெங்கு அலெர்ட்!

கடும் வறட்சிக்குப் பிறகு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த வாரம் நல்ல மழை. இந்தச் சூழ்நிலை டெங்கு உள்ளிட்ட கொசுக்களின் வளர்ச்சிக்குப் பெரிதும் சாதகமாக இருக்கும் என்பதால், ரெட் அலெர்ட் விடப்பட்டு உள்ளது. கொசு ஒழிப்பு, கொசு இனப்பெருக்கத்தைத் தடுப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக இந்த அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. மற்றபடி பொதுமக்கள் பயப்படத் தேவை இல்லை எனச் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். டெங்கு கொசுக்கள் பழைய டயர், தேங்காய்ச் சிரட்டை, பாட்டில்கள் போன்ற தண்ணீர் தேங்கும் இடங்களில் வளரும் என்பதால், வீட்டைச் சுற்றிப் பாதுகாப்பான சூழ்நிலையை ஏற்படுத்துவதன் மூலம் டெங்குவை நாமே தவிர்க்க முடியும்.