Published:Updated:

பெண்களுக்குப் பாதுகாப்பு... களரி தரும் தற்காப்பு...

பெண்களுக்குப் பாதுகாப்பு... களரி தரும் தற்காப்பு...

##~##

ளரியே காவல்! 

''பொண்ணுக்கு கராத்தே தெரியுமா? குங்ஃபூ தெரியுமா?'' - வரன் பார்க்கும் வைபோகங்களில் இந்த மாதிரியான கேள்விகளும் எதிர்காலத்தில் வரலாம். காரணம், தற்காப்பு விஷயங்கள்தான் இன்றைய பெண்ணுக்குத் திருமணத் தகுதியாகவும், பாதுகாப்பு வளையமாகவும் இருக்கும்.      

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உடலையும் மனதையும் உறுதியாக்கி, தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் தரும் தற்காப்பு வித்தைகளில் முக்கியமானது களரி.  

கேரளாவின் பாரம்பரியச் சண்டைப் பயிற்சிதான் களரி. இன்று உலகம் முழுவதும் இந்தப் பயிற்சி பரவியிருப்பதற்குத் தமிழகத்தைச் சேர்ந்த போதி தர்மர்தான் முதல் காரணகர்த்தா. களரி வித்தையைக் கற்றுத்தருபவர்களில் முக்கியமானவர் கல்யாணி. புதுச்சேரி அருகே இருக்கும் ஆரோவில்

பெண்களுக்குப் பாதுகாப்பு... களரி தரும் தற்காப்பு...

குடியிருப்பில் கல்யாணியைச் சந்தித்தோம்.

குதிரைப் பாய்ச்சலில் தாவி, கேடயமும் உயர்த்தி, தனது பளபளக்கும் பட்டாக் கத்தி முனையை நம் கழுத்தில் வைக்கிறார்.. பொன்னிறக் கேசச் சுருள்களை வருடியவாறு நம் முன் வந்து உட்காரும் கல்யாணிக்கு வயது 66 என்பதை நம்ப முடியவில்லை. உடலை அவ்வளவு கனகச்சிதமாக வைத்திருக்கிறார்.  

''1974-ல் ஒரு முறை இந்தியா வந்த நான் திரும்ப மனம் இன்றி, புதுச்சேரியிலேயே தங்கிவிட்டேன். இந்தியாதான் எனக்குப் பிடித்த தேசம்.'' என்றவரிடம் 'களரி’ ஆர்வம் குறித்துப் பேசினோம்.  

''1984-ல் எனக்குத் தீராத முதுகு வலி. புதுச்சேரியில் உள்ள களரி மசாஜ் செய்யும் மருத்துவரைப் பார்த்தேன். அவர் எனக்குக் களரி பயிற்சி கொஞ்சம் சொல்லித் தந்தார். களரி பயிலும்போது களைப்பு ஏற்படுவதற்குப் பதிலாக உற்சாகம் பீறிட்டது.

கேரளாவில் கோட்டயம் பகுதியில் இருந்த காடு துருத்திக் கிராமத்தில் களரி பயிற்சியின் ஜாம்பவான் வாசு குருக்களிடம் களரி கற்றுக்கொள்ளப் போனபோது, பெண்கள் இதில் ஈடுபட முடியாது’ என்றார். என் விடாமுயற்சியால் மூன்று வருடங்களில் களரியில் தேறிவிட்டேன். 1988 முதல் பலருக்கு களரி பயிற்சி கற்றுக்கொடுத்து வருகிறேன்.'' என்பவர் இதற்குக் கட்டணமாக எதையும் பெறுவது இல்லை.

''இந்தப் பயிற்சியால் என்ன பலன்?  யார் எல்லாம் இதைக் கற்றுக்கொள்ளலாம்?''

பெண்களுக்குப் பாதுகாப்பு... களரி தரும் தற்காப்பு...

''களரியில் தப்பித்தல்தான் முக்கிய நோக்கம். இதனை செய்யும்போது உடலும் மனமும் வலுப் பெறும். பெண்ணைப் படுக்கை அறையில் கிடக்கும் போகப் பொருளாக நினைக்கும் ஆண்களும், தன்னம்பிக்கை இன்றித் தன்னைத் தாழ்த்திக்கொள்ளும் பெண்களும் இந்த பயிற்சிகளைச் செய்யும்போது மனம் பக்குவம் அடையும். ஆண், பெண் இருவரும் கற்றுக்கொள்ளலாம். இதைக் கற்பவர்கள் எந்தவிதமான ஆபத்தான சூழ்நிலையையும் எளிதில் எதிர்கொள்ளலாம். 14 வயதிற்குப் பிறகு செய்வது நல்லது. உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோயாளிகள், இதயக் கோளாறு உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும். மாதவிடாய்க் காலத்தில் பெண்கள், இந்தப் பயிற்சியை நிச்சயம் செய்யக் கூடாது.  உடல் பருமன் இருப்பவர்கள், உடற்பயிற்சி செய்து உடலைக் கட்டுக்குள் கொண்டுவந்த பிறகு செய்யலாம்.''

''களரி பயிற்சி கற்றுக்கொள்ளும் முறைகள் என்ன?''  

பல கலைகளை ஒருங்கேகொண்டதுதான் களரிப் பயிற்சி. ஜிம்னாசியம் 42 அடி நீளமும் 21 அடி அகலமும்கொண்ட அமைப்பு இது. இந்தக் கட்டமைப்பில் கூடி இறைவனை வணங்க வேண்டும். இது

பெண்களுக்குப் பாதுகாப்பு... களரி தரும் தற்காப்பு...

ஒரு கூட்டுப் பயிற்சி. இது மனதையும் உடலையும் கட்டுக்குள் கொண்டுவரும் அடிப்படைக் களரிப் பயிற்சி.

களரிப் பயிற்சியில் 5 நிலைகள் உண்டு.  

முதல் படி: மெய்தரி (meithary)

இதில் 2 பகுதிகள்.  1. லெக் ட்ரைனிங் (leg training). இந்தப் பயிற்சி முடிக்கும்போது, கால்களை 12 கோணங்களில் நீட்டவும் மடக்கவும் முடியும். 2. மைப்பயாட்டி (maippayaatty)

இந்தப் பயிற்சியின் முடிவில் தாண்டுதல், உடலை வளைத்தல் ஆகியவற்றை எளிதில் செய்ய முடியும். இதனால் உடல் நல்ல ஃபிட்டாக இருப்பதுடன், கடினமான பயிற்சிகளைச் செய்யவும் முன்னோட்டமாக இருக்கும் .

இரண்டாவது  படி: கொல்தாரி (kolthari)

குச்சிகளை வைத்து செய்யும் பயிற்சி.(stick training).

இதில் 3 நிலைகள் உண்டு.  

1. கெட்டுக்காரி(kettukari):  இது நம் ஊர் சிலம்பம் மாதிரி. 7 அடி கொண்ட குச்சிகளை வைத்து சண்டை போட வேண்டும். இதில் 12 நிலைகள் இருக்கின்றன.

2. முச்சான் (muchan ): சிறிய குச்சிகளைவைத்து சண்டை போடும் முறை. இந்தப் பயிற்சியின் முடிவில் ஒரு நிமிடத்திற்கு 150 முறை எதிரியைத் தாக்க வேண்டும். அந்த அளவுக்கு வேகமாகச் செயல்பட வேண்டும்.

3. ஒட்டா (otta ) (marmavadi ) வர்மக்கலை: மிகவும் சிக்கலான அதீதக் கவனத்துடன் செய்ய வேண்டிய பயிற்சி.  களரிப் பயிற்சியில் மிக முக்கிய நிலைகளில் இதுவும் ஒன்று. இது ஒரு மர்ம வித்தை. மேற்கண்ட இரண்டு முறைகளில் நன்றாகத் தேர்ச்சிபெற்றவர்களுக்கு மட்டும் இந்தப் பயிற்சி அளிக்கப்படும்.  

மூன்றாவது  படி: அங்கதரி (angathari)

திரிசூலம், பட்டாக் கத்தி, குத்து வாள், உருமி, கேடயம் போன்றவற்றைக்கொண்டு தாக்குதல், தடுத்தல் நிலைகளைக்கொண்டு இருக்கும். இது முழுக்க முழுக்க ஆயுதம் தாங்கிச் சண்டையிடும் பயிற்சி.

நான்காவது படி: வெறும் கை                       (verum kai)

கைகளையே ஆயுதமாகப் பயன்படுத்தும் நிலை. மூன்று படிகளையும் கற்றுத்தேர்ந்து, ஒழுக்கமாக, உண்மையாக இருந்து குருவின் நன்மதிப்பைப் பெறுபவர்களுக்கு மட்டுமே இது கற்றுத்தரப்படும். இது எதிராளியை தாக்கும் ஒரு ரகசியப் பயிற்சி.

ஐந்தாவது படி: நான்கு படிகளை முடித்தவர்கள், நல்ல உடல் திறனுடன் இருந்தால், அவர்களுக்கு ஆயுர்வேத மசாஜ் செய்வது,  பயிற்சியில் உடலில் எங்கு அடிபட்டாலும் அதற்கான சிகிச்சை தருவது, மேலும் மர்ம சிகிச்சையும், மர்ம வித்தையும் உயர் நிலைகள் போன்றவை கற்றுத்தரப்படும்.  இந்த நிலையைக் கடந்துவிட்டால் சொந்த முயற்சியைக்கொண்டு அடுத்தவர்களுக்கும் சொல்லித் தரலாம்.

இந்தப் பயிற்சிகள் அனைத்தும் காலை வேளையில்,  வெறும் வயிற்றில் தண்ணீர் மட்டும் குடித்துவிட்டு செய்ய வேண்டும். அசைவம் தொடக் கூடாது.  மது அருந்தக் கூடாது.

சரியான பயிற்சியாளர்கள்  இல்லாமல் புத்தகங்களில் உள்ள படங்களைப் பார்த்தோ, இணையத்தில் உள்ள படம், வீடியோக்களைப் பார்த்து பயிற்சியில் ஈடுபடக் கூடாது. தனது உடல்நிலை பற்றிய பரிசோதனைக்குப் பிறகு பயிற்சியாளர் உதவியுடன் மட்டுமே செய்ய வேண்டும்.''

- பி. விவேக் ஆனந்த், படங்கள்: எஸ். தேவராஜன்