Published:Updated:

ஆயில் ஒப்பீடு

ஆயில் ஒப்பீடு

##~##

''ஆயில், மனிதனின் ஆயுள் என்றுகூட சொல்லலாம். அன்றாட உணவில் பயன்படுத்தப்படும் எண்ணெய் வகைகளில் சூரிய காந்தி எண்ணெயும் ஒன்று. சூரிய காந்தி எண்ணெய் தற்போது பல்வேறு பெயர்களில் உருவாகி, எதை வாங்குவது எதை விடுப்பது என்று மக்களை குழம்பவைக்கிறது.'' என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்களான சோபியா மற்றும் சுபாஷிணி. 

''சூரிய காந்தி எண்ணெயில் வைட்டமின் ஈ சத்து ஓரளவு இருப்பதால் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பொதுவாக கொழுப்பு... நிறைவுற்றக் கொழுப்பு அமிலம்(Saturated fatty acid), ஒற்றை நிறைவுறாக் கொழுப்பு அமிலம் (Monounsaturated fatty acid)  பன்மை நிறைவுறாக் கொழுப்பு அமிலம் (Polyunsaturated fatty acid) என மூன்று விதமாகப் பிரிக்கப்படுகின்றன. சூரிய காந்தி எண்ணெயில் நிறைவுற்றக் கொழுப்பு அமிலம் குறைந்த அளவும், ஒற்றை நிறைவுறாக் கொழுப்பு அமிலம் மிதமான அளவும், பன்மை நிறைவுறாக் கொழுப்பு அமிலம் அதிகமாகவும் இருக்கின்றன.  

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஆயில் ஒப்பீடு

நிறைவுற்ற கொழுப்பு அமிலம் அதிகமாகும்போது, அது கொழுப்பாக மாறி உடலுக்குக் கெடுதலை விளைவிக்கும்.  

ஒற்றை நிறைவுறாக் கொழுப்பு அமிலம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்கும்.    

ஆயில் ஒப்பீடு

பன்மை நிறைவுறாக் கொழுப்பு அமிலம்தான் நம் உடலுக்கு மிகவும் அத்தியாவசியக் கொழுப்பு அமிலம். இது ரத்தம் உறைவதைத் தடுக்கும். உடலுக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும்'' என்கிறார் உணவியல் நிபுணர் சோபியா.  

கொழுப்பு அமிலங்கள் எந்த அளவுக்கு இருக்க வேண்டும் என்பது பற்றி சொல்கிறார் உணவியல் நிபுணர் சுபாஷிணி.

100 கிராம் சூரிய காந்தி எண்ணெயில், நிறைவுற்றக் கொழுப்பு அமிலம் - 9.1%, ஒற்றை நிறைவுறாக் கொழுப்பு அமிலம் - 25.1%, பன்மை நிறைவுறாக் கொழுப்பு அமிலம் - 66.2% இருக்கவேண்டும். பொதுவாக ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 25 முதல் 30% தேவை.

25 கிராம் எண்ணெயில்...

நிறைவுற்றக் கொழுப்பு அமிலம் - 7%

ஒற்றை நிறைவுறாக் கொழுப்பு அமிலம் - 15%

பன்மை நிறைவுறாக் கொழுப்பு அமிலம் - 8% இருக்கவேண்டும்.  

ஆனால், நமக்கு, சூரிய காந்தி எண்ணெயைப் பொருத்தவரை, நாள் ஒன்றுக்கு 5 கிராம் எண்ணெயே போதுமானது. அதாவது ஒன்று முதல் 2 டீஸ்பூன் மட்டுமே பயன்படுத்தவேண்டும். (1 டீஸ்பூன் என்பது 4 கிராம்).  நல்லெண்ணெய் 2 டீஸ்பூன், கடலை எண்ணெய் (அ) தவிட்டு எண்ணெய் 2 டீஸ்பூன் என நாள் ஒன்றுக்கு 4 முதல் 5 டீஸ்பூன் எண்ணெய் தேவை.

இந்த அளவில் சூரிய காந்தி எண்ணெயைப் பயன்படுத்தினால்... எப்போதும் உடல் ஆரோக்கியமாக இருக்கும்'' என்றார்.

    - ரேவதி, திலீபன்