Published:Updated:

நலம், நலம் அறிய ஆவல்!

நலம், நலம் அறிய ஆவல்!

ன்றைய பெண்கள் அதிகமாகப் பாதிப்புக்கு உள்ளாவது ஹார்மோன் பிரச்னையால்தான். பணிச் சுமை, மன அழுத்தம், ஆரோக்கியமற்ற சூழல் போன்ற காரணங்களால் உடலில் ஹார்மோன் அளவு சரியாக சுரக்காமல், பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்திவிடுகிறது.

நலம், நலம் அறிய ஆவல்!

பெண்களுக்குச் சீரான இடைவெளியில் மாதவிலக்கு ஏற்படாமை, கூடுதல் உடல் பருமன், குழந்தைப்பேறுக்கான வாய்ப்புக் குறைதல், கருச்சிதைவு, சினைப்பையில் நீர்க்கட்டி, முதிய வயதில் எலும்பு வலுவிழத்தல் போன்ற பிரச்னைகள் ஹார்மோன் சுரப்பதில் உள்ள குறைபாட்டின் விளைவுகளே.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நம் உடலின் பல இடங்களில் நாளமில்லாச் சுரப்பிகள்  உள்ளன.

ஹார்மோன்கள், நம்முடைய வளர்ச்சி, உயரம், இனப்பெருக்கம் உள்ளிட்டவற்றுக்குப் பொறுப்பாக உள்ளன. இந்த ஹார்மோன்களின் முக்கியத்துவம் மற்றும் ஹார்மோன் குறைபாட்டை ஏற்படுத்தும் காரணிகள், நோய் அறிகுறி, நோய் கண்டறிதல், சிகிச்சைமுறைகள் பற்றி ஏப்ரல் 1 முதல் 15-ம் தேதி வரை நாளமில்லாச் சுரப்பி இயல் மூத்த மருத்துவர் ஆர்.பரத், நம்மிடம் விரிவாகப் பேச இருக்கிறார். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நாளமில்லாச் சுரப்பி இயல் துறைப் பேராசிரியராக வருங்கால மருத்துவர்களை உருவாக்கி வருகிறார்.

நாளமில்லாச் சுரப்பிகளின் அவசியம் குறித்து டாக்டர் பரத் கூறுகையில், 'பெண் கருத்தரிப்பதற்கு, கரு பாதுகாப்பாக வளர்வதற்கு, குழந்தையின் சீரான வளர்ச்சிக்குச் சரியான அளவில் ஹார்மோன் சுரப்பு இருப்பது மிகவும் அவசியம். ஆண்களுக்கு விந்தணுக்கள் உற்பத்தியாகவும், பெண்களுக்குக் கருமுட்டை முதிர்வு அடைவதற்கும் ஹார்மோன் துணைபுரிகிறது. பிரச்னையை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை எடுப்பதற்குப் பதில், பிரச்னை முற்றிய நிலையில் மருத்துவமனைக்குச் செல்கின்றனர்' என்கிற டாக்டர் பரத், மக்களுக்கு ஹார்மோன் பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையில் முக்கிய விஷயங்களைப் பற்றிப் பேசுகிறார்.

- பா.பிரவீன்குமார்,

படம்: பா.கார்த்திக்

நலம், நலம் அறிய ஆவல்!