Published:Updated:

அக்னி வெயிலிலும் அழகோ அழகு!

அக்னி வெயிலிலும் அழகோ அழகு!

அக்னி வெயிலிலும் அழகோ அழகு!

அக்னி வெயிலிலும் அழகோ அழகு!

Published:Updated:
##~##

ருமத்தில் சின்ன கீறல் விழுந்தால், வலியால் துடிப்பதைவிட, அது தழும்பாகி, அழகு குலைந்துவிடுமோ என்று அலறும் பெண்கள்தான் இன்று அதிகம். மேலும், கொளுத்தும் வெயிலில் முகம், கை என உடல் முழுவதையும் துப்பட்டாவினால் மூடிச் சருமத்தைப் பாதுகாக்க அதிகம் மெனக்கெட வேண்டியிருக்கிறது.  இருந்தும், சுட்டெரிக்கும் சூரியனால், நம் உடல் சோர்ந்துவிடுவது என்னமோ உண்மை. சருமத்தில் வெப்பம் தாக்காமல், அழகு குறையாமல் இருக்க அழகுக் கலை நிபுணர் ஷிபானி நெல்சன் இங்கே ஆலோசனை வழங்குகிறார். 

அக்னி வெயிலிலும் அழகோ அழகு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வெயிலில் சருமம் கருப்பாவதைத் தவிர்க்க, சன்ஸ்க்ரீன் லோஷன் கட்டாயம் பயன்படுத்துங்கள். சன்ஸ்க்ரீனில் வெவ்வேறு அளவுகளில் வெப்பத்தில் இருந்து சருமத்தைக் காக்கும் எஸ்.பி.எப். (Sun Protection Factor) உள்ளன. கோடையில் நம் சருமம் எண்ணெய் பசை உடையதாக மாறிவிடும். இந்த நேரத்தில், அதிக எஸ்.பி.எப். உள்ள க்ரீம்களைப் பயன்படுத்தாதீர்கள். இதனால், சருமத்தில் எண்ணெய் பசை அளவு அதிகரித்து பரு போன்ற பிரச்னைகள் வர ஆரம்பித்துவிடும். எஸ்.பி.எப். 15-க்கும் குறைவாக உள்ள க்ரீம்களைப் பயன்படுத்துவது நல்லது. ஆனால், இந்த க்ரீமை வெளியில் செல்பவர்கள், குறிப்பிட்ட நேர இடைவெளிக்குப் பிறகு தொடர்ந்து பயன்படுத்த வேண்டியிருக்கும். நீண்ட நேரம் வெயிலில் செல்பவர்கள் மட்டும் கொஞ்சம் அதிகம் எஸ்.பி.எப். உள்ள க்ரீம்களைப் பயன்படுத்தலாம். இந்த க்ரீமைப் பூசிய பிறகு, அதன் மேல் எஸ்.பி.எப். ஆற்றல்கொண்ட பவுடர்களைப் பூச வேண்டும். இதன் மூலம் சருமத்தின் எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்தலாம். வெளியில் செல்வதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னதாக இந்த க்ரீமை சருமத்தில் தடவ வேண்டும்.

அக்னி வெயிலிலும் அழகோ அழகு!
அக்னி வெயிலிலும் அழகோ அழகு!

  சருமம் பொலிவு இழப்பதைத் தவிர்க்க வீட்டிலேயே பழங்களைப் பயன்படுத்தி, 'பிளீச்’ செய்வது சருமத்துக்கு மிகவும் நல்லது. பப்பாளிப் பழக் கூழை சருமத்தில் பூசி ஐந்து முதல் பத்து நிமிடங்கள்

அக்னி வெயிலிலும் அழகோ அழகு!

கழித்துக் கழுவுங்கள். அதேபோல், பூசணிக்காயை ஐந்து முதல் பத்து நிமிடம் வேகவைத்து கூழாக்கிச் சருமத்தில் பூசலாம். தர்பூசணியை மசித்துப் பூசலாம். குளிர்ச்சியாக இருக்கும். தோலில் அரிப்புப் பிரச்னை உள்ளவர்கள் ஸ்ட்ராபெரி பழத்தை மசித்துப் பூசி, பத்து முதல் பதினைந்து நிமிடத்துக்குப் பிறகு கழுவுங்கள். அரிப்பு குறையும். பப்பாளி, தக்காளி, வாழைப்பழம் மூன்றையும் சம அளவு எடுத்து நன்றாக மிக்ஸியில் அரைத்துத் தோலின் மேல் பூசி பத்து நிமிடம் கழித்துக் குளியுங்கள். சருமம் நன்கு மிளிரும்.

அக்னி வெயிலிலும் அழகோ அழகு!

  தலைமுடியை உலரவைக்கிறேன் என்று ஈரத் தலையுடன் வெயிலில் நிற்பதால், முடி உடைந்து, சருமம் கருத்துப் போகலாம். இதைத் தவிர்க்க, நிழலான இடத்தில் தலையை உலர்த்துங்கள். கோடையில் முடி தொடர்பான பிரச்னை வராமல் தடுக்க ஹேர்கண்டிஷனர் பயன்படுத்தலாம். குளிப்பதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் கலந்து தடவி தலைக்குக் குளிப்பதன் மூலம் முடி வலுவடையும், கருமையாக இருக்கும்.

அக்னி வெயிலிலும் அழகோ அழகு!

 வெளியே செல்லும்போது குடை அல்லது தொப்பி அணிந்து செல்வது நல்லது. இது வெயிலின் புற ஊதாக் கதிர் வீச்சில் இருந்து ஓரளவுக்கு சருமத்தைப் பாதுகாக்கும். உடலில் ஏற்படும் நீர் இழப்பால் சருமம் மிகவும் பாதிக்கப்படும். எனவே, கோடைக் காலத்தில் குறைந்தது எட்டு முதல் பத்து டம்ளர் நீர் அருந்துங்கள்.

அக்னி வெயிலிலும் அழகோ அழகு!

  வெதுவெதுப்பான நீரில் வேப்பிலை, துளசி, ரோஜா இதழ்களைப் போட்டு காலை, மாலை இருவேளையும் குளியுங்கள். இதனால் வியர்வை நாற்றம், சருமப் பிரச்னை இருக்காது. ஸ்ட்ராபெரி, பூசணிக்காய், பப்பாளிப் பழம் போன்ற பழங்களில் ஏதாவது ஒன்றை மிக்ஸியில் நன்கு அரைத்து, அதில் சமையல் உப்பைச் சேர்த்து உப்பு கரையும் வரை சருமத்தில் தேய்த்துக் குளித்தால், உடலுக்குக் குளிர்ச்சி கிடைக்கும். சருமம் பளபளப்பாகும்.

- பா.பிரவீன்குமார்

 சருமம் பொலிவுக்கு எளிய வழிகள்

அக்னி வெயிலிலும் அழகோ அழகு!

 பீட்ரூட்டை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, மிக்சியில் இட்டு மைய அரைத்துக்கொள்ளுங்கள். இந்த பீட்ரூட் சாறைப் பிழிந்து அதை முகத்தில் பூசி ஐந்து நிமிடம் மசாஜ் செய்யுங்கள். 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் குளியுங்கள்.

அக்னி வெயிலிலும் அழகோ அழகு!

 சந்தனப் பொடியை ரோஸ் வாட்டருடன் குழைத்து அதனுடன் நான்கு(அ)ஐந்து துளி பால் விட்டு முகத்தில் பூச வேண்டும். 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும்.

அக்னி வெயிலிலும் அழகோ அழகு!

 தேனை சூடு செய்து அதனுடன் எலுமிச்சை சாற்றைக் கலந்து முகத்தில் தடவுங்கள். நன்கு உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ வேண்டும்.

அக்னி வெயிலிலும் அழகோ அழகு!

 காலையில் எழுந்ததும் தண்ணீரில் சிறிது தேன் சேர்த்து குடிக்க வேண்டும். இது சருமத்தைப் பொலிவாகவும், மென்மையாகவும் இருக்க உதவும்.