இந்தியாவில் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை வைட்டமின் டி பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடம் இல்லை. ஆனால், மாறிவரும் பணிச்சூழல் வைட்டமின் டி பற்றாக்குறையை இங்கும் ஏற்படுத்தி இருக்கிறது என்பதுதான் வேதனை.

ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரியும் பலருக்கும் 'இரவினில் வேலை... பகலினில் தூக்கம்’ என்பதுதான் எழுதப்பட்ட சட்டம். வெயில் படாமல் வாகனங்களில் வந்து இறங்கி, ஏசி சூழலில் பணிபுரிந்து, வாகனங்களிலேயே வீடு திரும்பிவிடுகின்றனர் இவர்களுக்கு சூரிய ஒளி உடலில் படுவதற்கே வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது.

சூரிய ஒளி உடம்பில் படுவதால் ஏற்படும் பலன்களைப் பட்டியலிடுகிறார் கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பேராசிரியரும் துறைத் தலைவருமான டாக்டர் எஸ். சந்திரசேகரன்.

''சூரிய ஒளியில் உள்ள அல்ட்ரா வயலட் பி கதிர்களைப் பயன்படுத்தி, நம் தோலில் உள்ள செல்கள் வைட்டமின் டி-யை உருவாக்குகின்றன.

கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்களைக் குடல் உறிஞ்சவும், உறுதியான

எலும்புகளுக்கும், வலிமையான நோய் எதிர்ப்புசக்திக்கும் இது உதவுகிறது.

உறுதியற்ற எலும்புகளை உண்டாக்கும் 'ஆஸ்டியோமலாசியா’ மற்றும் குழந்தைகளின் கபாலப் பகுதியில் குறைபாடுகளை ஏற்படுத்தும் 'ரிக்கெட்ஸ்’ என்னும் நோய்களைத் தடுக்கிறது.

கால்சிய சமநிலை பேணுவதால், 'ஆஸ்டியோபோரோசிஸ்’ மற்றும் மூட்டுவாத நோய்களைத் தவிர்க்கிறது.

இன்சுலின் சுரப்பைத் தூண்டுவதால், சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது. தோலில் சுருக்கத்தை தள்ளிப்போட்டு, மென்மையும், உறுதியும் வாய்ந்த சருமத்தை அளிக்கிறது. ரத்தக்குழாய்களுக்கு ஓர் உறை போலச் செயல்படுகிறது.

சளி இருமலைத் தடுத்து, ஆஸ்துமாவை எதிர்க்கிறது'' என்கிறார் டாக்டர் எஸ். சந்திரசேகரன்.

''தினமும் சிறிது நேரம் சூரிய ஒளி நம் உடலில் படும்படி பார்த்துக்கொள்ளுங்கள். அதன் மூலம், பெரும்பாலான நோய்கள் நம்மை அண்டாமல் இருக்கும்.''

வெயில் பட்டு வாழ்க!

- லதானந்த்

கர்ப்பிணிகள் கவனிக்க!

கர்ப்பிணிகளுக்கு வைட்டமின் டி குறைவால் 'ப்ரிஎக்ளாம்ப்சியா’ என்னும் உயர் ரத்த அழுத்தத்தையும் சிறுநீரில் அதிக அளவு புரதத்தையும் வெளியேற்றும் நோய் ஏற்படும். சூரிய ஒளி மூலமே இந்தப் பிரச்னையைத் தவிர்க்கலாம்.ரத்தத்தில் கால்சியம் அளவு குறைவதால் ஏற்படும் ஹைப்போகால்சீமியா என்ற வியாதி தடுக்கப்படுகிறது.