Published:Updated:

வலிப்புக்கும் இரும்புக்கும் என்ன சம்பந்தம்?

வலிப்புக்கும் இரும்புக்கும் என்ன சம்பந்தம்?

வலிப்புக்கும் இரும்புக்கும் என்ன சம்பந்தம்?

வலிப்புக்கும் இரும்புக்கும் என்ன சம்பந்தம்?

Published:Updated:
##~##

லிப்பு நோய் பற்றி மக்களிடையே போதிய விழிப்பு உணர்வு இல்லாத காரணத்தால் வலிப்பால் பாதிக்கப்பட்டவர்கள், சமூகத்தால் ஒதுக்கப்பட்டு, சகஜமான வாழ்க்கை வாழ முடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். 

''உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்று வலிப்பு நோயால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. வலிப்பு நோய் உள்ளவர்கள் குணமாகி, மற்றவர்களைப் போன்று நிம்மதியாக வாழ முடியும்'' என்கிறார் கோயம்புத்தூரைச் சேர்ந்த மூத்த நரம்பியல் நிபுணர் ஜெ.கே.பி.சி.பார்த்திபன். வலிப்பு குறித்து அவருடன் மேலும் பேசியபோது...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வலிப்பு நோய் என்றால் என்ன?

கைகால் வலிப்பு அல்லது காக்கா வலிப்பு என்று பொதுவாகச் சொல்வார்கள். வலிப்பு வரும்போது, கையும் காலும் வெட்டி வெட்டி இழுக்கும். இந்த நேரத்தில் சுய நினைவை இழக்க நேரிடும். நம் இதயம் துடிப்பதுபோல் நம் மூளை நரம்பு செல்களும் செய்திகளைக் கடத்த மின் தூண்டுகை செய்கிறது. ஒரு சிலருக்குக் குறிப்பிட்ட மூளைத் திசுக்களில் இந்த மின் தூண்டுகையானது

வலிப்புக்கும் இரும்புக்கும் என்ன சம்பந்தம்?

அபரிமிதமானதாக உற்பத்தியாகிறது. அந்தக் குறிப்பிட்ட பகுதியில் மூளையானது நம் உடலின் எந்தப் பகுதியைக் கட்டுப்படுத்துகிறதோ, அதில் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த மின் தூண்டுகை பேச்சைக் கட்டுப்படுத்தும் பகுதியில் தொடங்கினால் அது முகத்தைக் கட்டுப்படுத்தும் பகுதிக்கு அருகில் அமைந்துள்ள கை, தோள், கால் போன்றவற்றைக் கட்டுப்படுத்தும் பகுதிகளுக்கு ஒன்றின் பின் ஒன்றாகப் பரவுகிறது. இதனால் கை, கால் பகுதிகளில் வலிப்பு ஏற்படுகிறது. சில நிமிடங்களில் இது சரியாகி, பாதிக்கப்பட்டவர் கொஞ்சம் கொஞ்சமாக சகஜநிலைக்குத் திரும்புவார். இந்த நேரத்தில் இரும்புக் கம்பி கொடுத்தால் வலிப்பு குறையும் என்று சொல்வதில் உண்மை இல்லை.

வலிப்பு நோயின் அறிகுறிகள் என்ன?

குழப்பமான மனநிலை, சப்தம் முற்றிலும் கேட்காத நிலை, சகஜமற்ற மனநிலை, பார்வைக் குறைபாடு, மங்கலான பார்வை, பதட்டம், வியர்வை, தடுமாற்றம் போன்றவை இதன் அறிகுறிகள். இவை தென்பட்டால் வலிப்புப் பிரச்னை உள்ளவர்கள் பாதுகாப்பான இடத்துக்குச் சென்று அமர்ந்துகொள்வது நல்லது.

வலிப்புக்கும் இரும்புக்கும் என்ன சம்பந்தம்?

எதனால் வலிப்பு நோய் வரும்?

பிறவிக் குறைபாடு, மூளையில் காசநோய், தலையில் காயம் ஏற்படுதல், கிருமித் தொற்று, கட்டி, மூளையின் அபரிமிதமான வளர்ச்சி போன்றவை வலிப்பு நோய் வருவதற்கான முக்கியமான காரணங்கள். சிலருக்கு எதனால் வலிப்பு நோய் வருகிறது என்று கண்டறிய முடியாத நிலைகூட ஏற்படும். இவர்களுக்கு மரபியல் ரீதியான காரணிகளால் ஏற்பட்டு இருக்கலாம்.

வலிப்பு நோயைக் கண்டறியும் வழிகள்?

மூளை நரம்பியல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறும்போது, அவர் சில அடிப்படையான பரிசோதனைகளுக்குப் பரிந்துரைப்பார். மூளையின் மின்னோட்டத்தை அளவிடும் ஈஈஜி (electroencephalogram)மற்றும் சி.டி., எம்.ஆர்.ஐ., பெட் (PET) பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த சோதனைகளின் முடிவுகள் அடிப்படையில் வலிப்பு நோய் உள்ளதா என டாக்டர் உறுதிப்படுத்துவார். பெட் (PET) ஸ்கேன் செய்வதன் மூலம் அதிவேகமாகச் செயல்படும் திசுவை எளிதாகக் கண்டுபிடிக்க முடியும்.

வலிப்பு ஏற்பட்டவர்களுக்குச் செய்ய வேண்டிய முதல்உதவி என்ன?

வலிப்பு தானாக நிற்கும் வரை அவரைப் பாதுகாப்பான இடத்தில் வைத்திருங்கள். அவரைப் பிடித்து அழுத்தி வலிப்பைக் கட்டுப்படுத்த முயற்சிக்கக் கூடாது. அருகில் ஏதேனும் கூர்மையான, காயத்தை ஏற்படுத்தும் பொருட்கள் இருந்தால், அப்புறப்படுத்துங்கள். உமிழ்நீர் அதிகமாகச் சுரக்கும் என்பதால், அது நுரையீரலுக்குச் சென்று உயிரிழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, வலிப்பு வந்தவரை ஒரு பக்கமாகப் படுக்கவைக்க வேண்டும். மல்லாக்காகப் படுக்கவைக்கக் கூடாது. சட்டைப் பொத்தான்களைக் கழற்றி, நன்கு மூச்சுவிடுவதற்கான வழிவகை செய்யுங்கள்.

வலிப்புக்கும் இரும்புக்கும் என்ன சம்பந்தம்?

வலிப்பு நோய்க்கான சிகிச்சைமுறைகள் என்ன?

வலிப்பு நோயின் தன்மையைப் பொருத்து மருந்து மாத்திரை மூலம் குணப்படுத்தலாமா அல்லது அறுவைசிகிச்சை தேவையா என்பது தெரியவரும்.  பல புதிய மருந்துகள் வந்துகொண்டே இருக்கின்றன. இந்த மருந்துகளைத் தொடர்ந்து எடுத்துக்கொள்வதன் மூலம் வலிப்பு நோய் பாதிப்பில் இருந்து விடுபடலாம். 2 முதல் 3 சதவிகித நோயாளிகளுக்கு மட்டுமே இந்த மருந்துகள் பலன் அளிப்பது இல்லை. அவர்களுக்கு எம்.ஆர்.ஐ., பெட் ஸ்கேன் மூலம் எந்த இடத்தில் வலிப்பு நோய் தொடங்குகிறது என்பதைக் கண்டறிந்து, அந்த இடத்தில் உள்ள திசுவை மட்டும் அகற்றும் மைக்ரோ அறுவைசிகிச்சைகள் தற்போது உள்ளன. இந்த சிகிச்சை செய்துகொள்வதன் மூலம் வலிப்பு நோய் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.

- பா.பிரவீன்குமார்

  வருடந்தோறும் உலக அளவில் 1 லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு வலிப்பு நோய் ஏற்படுகிறது. இதில் 30 சதவிகிதம் பேர் குழந்தைகள். இந்திய மக்கள் தொகையில் ஒரு சதவிகிதம் பேருக்கு வலிப்பு நோய் இருப்பதாக, இந்திய வலிப்புநோய் மையத்தின் புள்ளிவிவரம் கூறுகிறது.