கடந்த மாதம்... ஆம்பூரில் இருந்து சென்னைக்கு நண்பர்களுடன் வந்தார் 50 வயதான ஆப்ரஹாம். அண்ணாசாலையில் உள்ள ஒரு பெட்டிக் கடையில் டீ அருந்தியவர், அடுத்த நொடி அப்படியே சாய்ந்தார். ஏதோ மயக்கம் என்று நினைத்து உதவ ஓடி வந்தவர்களுக்கு அதிர்ச்சி. அப்படியே இறந்துகிடந்தார் ஆப்ரஹாம். 'மாரடைப்பு’ எனத் தெரியவர, அவரது குடும்பம் இன்று அநாதையாக..!

ஏற்கெனவே, மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்தான் அவர். அலைச்சல் எனத் தெரிந்திருந்தும் மேற்கொண்ட பயணம் மற்றும் அஜாக்கிரதையே, அவர் உயிர் இழப்புக்குக் காரணமாகிவிட்டது.

''ஒரு முறை மாரடைப்பு வந்தவர்கள் மற்றும் மாரடைப்பு வந்து அறுவைசிகிச்சை செய்துகொண்டவர்கள்... இவர்களில் பலரும், 'அதான் நெஞ்சு வலி சரியாகிவிட்டதே’ என்று துளியும் பயப்படாமல், எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி, பழைய வாழ்க்கைக்குத் திரும்பிவிடுகின்றனர். முன்பு போலவே உணவில் அதிகக் கொழுப்பு, மது, புகை, உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை என்று வாழத் தொடங்கிவிடுகிறார்கள். இதற்கு நேர்மாறாகச் சிலர், பயத்திலேயே படுக்கையை விட்டு எழாமல் இருந்துவிடுகின்றனர். இவை இரண்டுமே தவறு.'' - அழுத்தமாக வலியுறுத்துகிறார் மதுரை இதய நோய் நிபுணர் பாலசுப்ரமணியன்.

இதய நோயாளிகள் வேலை விஷயமாகவோ அல்லது சொந்தக் காரணங்களுக்காகவோ வெளியூர் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டால், கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் குறித்து பாலசுப்ரமணியனிடம் கேட்டோம்.

''மாரடைப்பு வந்தாலும் பயணங்களை மேற்கொள்ளலாம். நமக்கான சந்தோஷங்களை விட்டுக்கொடுக்காமல் புத்துணர்ச்சியுடன் புதிய வாழ்க்கைமுறையைப் பின்பற்றலாம்தான். ஆனால், கூடுமானவரை இதயம் தொடர்பான பிரச்னைகள் வராமல் நம்மைத் தற்காத்துக் கொள்ள வேண்டும். வந்துவிட்டால் மிகக் கவனமாகவும் பாதுகாப்புடனும் இருக்க வேண்டியது அவசியம்.

இதய அறுவை சிகிச்சைக்குப் பின் கவனிக்க வேண்டிய விஷயங்கள்...

மீண்டும் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புக்களைக் குறைக்க வேண்டும்.

மாரடைப்பின் மனத்தளர்ச்சி பயம் போன்றவற்றில் இருந்து விடுதலை பெற, நேர்மறையான சிந்தனைகளோடு இருக்க வேண்டும்.

யோகா, உடற்பயிற்சி, தியானம் போன்றவற்றின் மூலம் உடலையும் உள்ளத்தையும் புத்துணர்வுடன் வைத்திருக்க வேண்டும்.

மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகளைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவற்றைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

இல்லற வாழ்வில் மீண்டும் புத்துணர்வுடன் ஈடுபடலாம். அவரவர் உடல் நிலைக்கு ஏற்ப, மருத்துவரின் பரிந்துரைப்படி மீண்டும் பணிக்குச் செல்லலாம்.

வெளியூர் செல்லும்போது கவனிக்க வேண்டியவை...

1) நீண்ட தூரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. தவிர்க்க முடியாத பயணங்களின்போது மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரைகளைப் போதிய அளவு கையில் எடுத்துச் செல்ல வேண்டும். மருத்துவக் குறிப்புகள், தொலைபேசி எண் போன்ற தகவல்களை எப்போதும் கைவசம் வைத்திருக்க வேண்டும். குறிப்புகளைத் தங்கள் செல்போனில்கூடச் சுருக்கமாக வைத்திருக்கலாம்.

2) கையில் எப்போதும் வீட்டு விலாசம், அவசர காலத்தில் தொடர்புகொள்ளத் தொலைபேசி எண் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

3) பயணத்தின்போது எந்தவிதமான பரபரப்புக்கும் உள்ளாகாமல், தேவையற்ற விவாதங்களில் ஈடுபடாமல் மனதை அமைதியாக வைத்திருப்பது நல்லது.

4) உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை போன்ற பிரச்னைகள் இருந்தால் கிளம்புவதற்கு முன் ஒருமுறை பரிசோதனை செய்து மருத்துவரின் பரிந்துரைக்குப் பின் பயணம் மேற்கொள்வது நல்லது.

5) பஸ்சில் அமர்ந்து பயணிப்பது உடல் அசௌரியத்தை ஏற்படுத்தலாம். ரயில் அல்லது விமானப் பயணம் நல்லது.

6) மருந்து தீர்ந்துபோனால் அதே மாத்திரைகள் வாங்க வேண்டும். மாற்று மருந்து அல்லது அளவு மாறினால் பிரச்னையாகிவிடலாம்.

7) இரண்டு நாள்தானே என்று உணவுக் கட்டுப்பாட்டை மீறிவிட வேண்டாம். மருத்துவர் பரிந்துரைத்த உணவுகளையே உண்ண வேண்டும்.

8) உப்பும் கொழுப்பும் குறைவாக உள்ள உணவு வகைகளைச் சிறிய அளவில் சிறு இடைவெளிவிட்டு எடுத்துக்கொள்ளலாம்.

மருத்துவர் கூறிய உடற்பயிற்சி, நடைப் பயிற்சிகளை எங்கே இருந்தாலும் மறக்காமல் தினமும் செய்ய வேண்டும். மூன்று வேளை உணவைப் பிரித்து ஐந்து வேளையாக எடுத்துக்கொண்டால் நல்லது.

விருந்தும் வேண்டாம், விரதமும் தேவையற்றது.

- உமா ஷக்தி,

படங்கள்: பா.காளிமுத்து

தவிர்க்க வேண்டியவை:

புகை, புகையிலைப் பொருட்கள், போதை வஸ்துகள்

எண்ணெயில் வறுத்த - பொறித்த உணவுகள், காய்கறி மற்றும் இறைச்சி

கேக், க்ரீம் சாக்லெட், பிஸ்கெட்

கொட்டை வகைகளான முந்திரி, நிலக்கடலை

குளிர்பானங்கள்

சிப்ஸ், ஊறுகாய், அப்பளம் மற்றும் உப்பு அதிகம் உள்ள எந்த உணவுப் பொருளும்

சீஸ், சாஸ், பனீர்