Published:Updated:

ஒருக்காலும் தாமதிக்காதீர்கள்!

ஒருக்காலும் தாமதிக்காதீர்கள்!

##~##

''மிகப் பெரிய நிறுவனம் ஒன்றில் பொறியாளராகப் பணியாற்றும் 45 வயது சிவகுமார், பணி நிமித்தம் காரணமாக தடிமனான செருப்பு அணிவது வழக்கம். ஒரு நாள், காலில் லேசாக அடிபட்டு புண் போல் ஏற்பட, அதைப் பெரிதுபடுத்தாமல் விட்டுவிட்டார். தொடையில் மட்டும் லேசாக வலி எடுக்க, மருத்துவரை அணுகி வலிநிவாரணி வாங்கிச் சாப்பிட்டார். ஒருநாள், வீட்டில் குளித்து முடித்து வரும்போது அவரது காலில் உள்ள புண்ணைப் பார்த்த, அவரது மகள் பதறி அடித்துக்கொண்டு, அவரை வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்துவந்தார். காயத்தின் மீது ஹைட்ரஜன் பெராக்சைடு என்ற மருந்தை விட்டதும், நூற்றுக்கணக்கான புழுவும், முட்டையும் வெளியில் வர ஆரம்பித்தது. கால் ரத்தக் குழாயில் இருந்த அடைப்பு நீக்கப்பட்டது. கொஞ்சம் தாமதித்து இருந்தாலும், முழு காலும் பறிபோயிருக்கும். பிரச்னை முற்றியிருந்தால் ஒருவேளை உயிரிழப்புகூட ஏற்பட்டிருக்கலாம்.''

 தன்னிடம் வந்த சர்க்கரை நோயாளியைப் பற்றிய அதிர்ச்சி தகவலை தந்த மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் கால் பராமரிப்பு கிளினிக்கின் ரத்தநாளம் மற்றும் உடல்உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஒருக்காலும் தாமதிக்காதீர்கள்!

நிபுணர் சரவணன், சர்க்கரை நோயாளிகளுக்குக் காலில் புண் ஏன் வருகிறது... அதைக் கண்டறிவது எப்படி... அதற்கான தடுப்பு முறைகள் என்ன... எனப் பல கேள்விகளுக்குப் பதில் சொன்னார்.

'சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதால், கண் விழித்திரை, சிறுநீரகம் பாதிக்கப்படும். இதற்கு அடுத்தபடியாக காலில் உள்ள ரத்தக் குழாய் சுருங்கி காலுக்குப் பாயும் நல்ல ரத்த ஓட்டம் குறைந்துவிடும். மேலும், கால்களைக் கட்டுப்படுத்தும் நரம்புகள் பாதிக்கப்படும். இதனால் காலில் நெருப்பு பட்டாலோ, முள் குத்தினாலோகூட எந்தவித உணர்ச்சியும் இருக்காது. இதனால்தான், காலில் புண் ஏற்பட்டால்கூட தெரியாமல் போய்விடுகிறது. அந்தப் புண்ணில் 2-3 நாட்களில் நோய்த்தொற்று ஏற்பட்டு, மருத்துவமனைக்கு வருவதற்குள் நோய்த்தொற்று முற்றிவிடும்.

இவர்களுக்கு, ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதால், கிருமிகள் வளர மிகவும் ஏற்ற சூழ்நிலையாக அமைந்துவிடுகிறது. மேலும், இவர்களுக்குப் புண் ஏற்பட்டால், தொற்றுக் கிருமிகள் வேகமாக வளர்ந்து, கால் அழுகிவிடும். இதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை எடுப்பதன் மூலம் காலை அகற்ற வேண்டிய ஆபத்து தவிர்க்கப்படுகிறது. ஆனால், பெரும்பாலான நோயாளிகள் முற்றிய நிலையிலேயே சிகிச்சைக்கு வருகின்றனர். உலக அளவில் விபத்துக்கு அடுத்தபடியாக, கால் இழப்புக்குக் காரணமாக சர்க்கரை நோய்தான் இருக்கிறது.

பொதுவாக, இதயத்தில் இருந்து நல்ல ரத்தம் வரும் ரத்தக் குழாய் இடுப்புப் பகுதியில் இரண்டாகப்

ஒருக்காலும் தாமதிக்காதீர்கள்!

பிரிந்து இரண்டு கால்களுக்கும் செல்லும். கால் மூட்டுப் பகுதியில் அது மூன்றாகப் பிரிந்து பாதம் வரை பாய்கிறது. இந்த ரத்தக் குழாயில் ஒரு நிமிடத்துக்கு ஐந்தரை லிட்டர் ரத்தம் பாய்கிறது.

சர்க்கரை நோயானது இந்த ரத்தக் குழாயைச் சுருக்கிவிடுகிறது. இப்படி ரத்தக் குழாய் சுருங்கும்போது முதல் கட்டமாக, நடந்தால் கால் வலிக்கிறது என்பார்கள். நிற்கும்போது, வலிக்காது. நடக்கும்போது, கால் தசைகளுக்கு ஆற்றல் தேவை. ரத்த ஓட்டம் சீராகப் பாய்ந்தால்தான், கால் தசைகளுக்குத் தேவையான உணவு கிடைக்கும். ரத்தக் குழாயில் தடை ஏற்படும்போது, இந்த வலி ஏற்படுகிறது. இரண்டாவதாக, உட்கார்ந்தாலும் கால் வலி ஏற்படும். இந்த நிலையிலும் இதைக் கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொள்ளாதபோது பிரச்னை முற்றி காலில் புண் ஏற்பட்டு கால் இழப்பு வரை செல்லலாம்'' என்கிற டாக்டர் சரவணன் இறுதியாக இப்படிச் சொல்கிறார்.

''ரத்தக் குழாய் பாதிப்புகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால், மருந்து, மாத்திரைகள் மூலமாகக் குணப்படுத்திவிடலாம். பிரச்னை சற்று முற்றியவர்களுக்கு அறுவை சிகிச்சை தேவைப்படும். இதயம் ஒரு தசை. அந்த தசைக்கு ரத்தம் செல்லும் குழாயில் அடைப்பு ஏற்படும்போது மாரடைப்பு ஏற்படுகிறது. அப்போது அந்த குழாயில் அடைப்பு உள்ள இடத்தில் மற்றொரு நாளத்தை பொருத்தி பைபாஸ் செய்யப்படுகிறது. காலில் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படும்போது அதேபோல் பைபாஸ் மற்றும் ஸ்டென்ட் பொருத்தி சிகிச்சை அளிக்கப்படும். சிலருக்கு ஆஞ்ஜியோபிளாஸ்டி மூலம் பலூன் ஒன்று செலுத்தப்பட்டு அடைப்பு உள்ள இடத்தில் விரிக்கப்பட்டு ரத்த ஓட்டம் சீராக்கப்படும். அதனால், எதை நினைத்தும் அச்சப்பட வேண்டியது இல்லை. ஆனால், உரிய நேரத்து சிகிச்சை மட்டும் மிக அவசியமானது!''

- பா.பிரவீன்குமார்

 காலில் கவனம்

ஒருக்காலும் தாமதிக்காதீர்கள்!

 கால்களை தினமும் பரிசோதிக்க வேண்டும்.

ஒருக்காலும் தாமதிக்காதீர்கள்!

 மிதமான சுடுநீரில் கால்களைக் கழுவ வேண்டும்.

ஒருக்காலும் தாமதிக்காதீர்கள்!

 கால்களின் விரல் இடுக்கு தவிர்த்து மற்ற பகுதி சருமம் உலர்ந்து போகாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஒருக்காலும் தாமதிக்காதீர்கள்!

 வெறும் காலுடன் எப்போதும் நடக்கக்கூடாது.

ஒருக்காலும் தாமதிக்காதீர்கள்!

 வெட்டுக்காயங்கள், வெடிப்புகள், கொப்புளம், சிவந்துபோய் இருத்தல், வீக்கம் என ஏதேனும் வித்தியாசமாக இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

ஒருக்காலும் தாமதிக்காதீர்கள்!

 வாஸ்குலர் சர்ஜன், நியூராலஜி மருத்துவர்களிடம் கால்களைக் காண்பித்து பரிசோதித்துக்கொள்வது நல்லது.