Published:Updated:

வந்துடுச்சு ஹோலிஸ்டிக் தெரபி!

வந்துடுச்சு ஹோலிஸ்டிக் தெரபி!

##~##

சிலர் உணவை மருந்தாகவும், பலர் மருந்தையே உணவாகவும் உண்டு வாழும் நிலை அதிகரிப்பதற்குக் முக்கியக் காரணம், பெயர் தெரியாத நோய்கள் படையெடுப்பதுதான். மருந்து மாத்திரைகள் விழுங்க விருப்பம் இல்லாமல், வெவ்வேறு சிகிச்சைகள் மூலமாகவே நோய்களுக்குத் தீர்வைத் தேடுபவர்களும் இன்று அதிகம். 

ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் தற்போது ஹோலிஸ்டிக் தெரபி என்ற சிகிச்சை முறை பிரபலமாகி வருகிறது. இந்தியாவில் இது அதிக பிரபலம் இல்லை. கோவை சிங்காநல்லூர் என்.ஜி. மருத்துவமனை நியூரோமஸ்குலர் மற்றும் ஹோலிஸ்டிக் மருத்துவ நிபுணர் டாக்டர் ரகுராஜப் பிரகாஷ், எலும்பு, மூட்டு தொடர்பாக வரும் நோயாளிகளுக்கு ஹோலிஸ்டிக் தெரபி முறையில் சிகிச்சை அளித்துவருகிறார்.  

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
வந்துடுச்சு ஹோலிஸ்டிக் தெரபி!

''ஹோலிஸ்டிக் மெடிக்கல் தெரபி என்பது பல்வேறு சிகிச்சை முறைகளை ஒருமுகப்படுத்திச்

வந்துடுச்சு ஹோலிஸ்டிக் தெரபி!

செய்யப்படும் சிகிச்சை முறை. ஒருவர் கால் மூட்டுவலிக்குச் சிகிச்சை பெற எலும்பு மருத்துவரிடம் சென்றால், மருந்தின் மூலமாக அதை மருத்துவர் குணப்படுத்த முயல்வார். அதிலும் முன்னேற்றம் இல்லை என்றால், அறுவைசிகிச்சையைத் தேர்ந்தெடுப்பார். அதன் மூலமாகக் கிடைக்கும் தீர்வும் நிரந்தரமானது என்று சொல்ல முடியாது. ஆனால், ஹோலிஸ்டிக் முறையில் சிகிச்சை எடுக்கும்போது, மூட்டு வலிக்கான வேர்க்காரணத்தை அறிந்து அதைச் சரியாக்குவோம். அது மட்டும் அல்லாமல், அந்தப் பிரச்னை மீண்டும் வராமல் இருக்க... அவர்களது செயல்கள், உணவுகள், மனரீதியான விஷயங்கள் என அன்றாட வாழ்க்கைமுறையில் சில மாற்றங்களையும், சில உடற்பயிற்சிகளையும் பரிந்துரைசெய்து பரிபூரணமாகக் குணமடையவைக்கலாம். எனவே அந்த மூட்டு வலி திரும்பி வர வாய்ப்பே இல்லாமல் போய்விடும்.

உதாரணத்துக்கு, காலுக்கு அதிக வேலை கொடுப்பதனால் மட்டுமே, மூட்டு வலி வந்துவிடுவது இல்லை. இடுப்பு அல்லது பாதத்தில் இருக்கும் தசைகளின் காரணமாகக்கூட மூட்டு வலி ஏற்பட்டு இருக்கலாம். அதாவது, ஒரு நோயை ஒரு கோணத்தில் மட்டும் அணுகினால், அந்த நோய்க்கு நிரந்தரத் தீர்வு கிடைக்காது. பல்வேறு முறைகளில் அணுகி அதற்குச் சிறந்த தீர்வைத் தர முடியும்.'' என்கிற டாக்டர், சிகிச்சை முறைகள் பற்றியும் சொன்னார்.

வந்துடுச்சு ஹோலிஸ்டிக் தெரபி!

''உடலில் ஏற்படும் பல்வேறு வியாதிகளுக்குத் தசைகளில் ஏற்படும் முடிச்சுகள்தான் முக்கியக் காரணம். இதை 'ட்ரிக்கர் பாயிண்ட்’ என்போம். கைகளின் உதவியுடன் வைத்தியத்தை மேற்கொண்டு, அந்த முடிச்சுகளை அவிழ்ப்பதன் மூலம் நோய்க்கான நிரந்தரத் தீர்வு கிடைக்கும்.

மனித உடற்கூறை முழுமையாக அறிந்தவர்கள் மட்டுமே முடிச்சு இருக்கும் பகுதியை அறிய முடியும். இதனால்தான் பல்வேறு சிகிச்சைகளின் சங்கமமாக ஹோலிஸ்டிக் தெரபி இருக்கிறது. நோயின் தன்மையைப் பொருத்து வியாதிக்குக் காரணமான முடிச்சுகளை அவிழ்க்க, குறைந்தது இரண்டு மணி நேரமாவது ஆகும். இதில் மருந்துகள் பெரும்பாலும் பயன்படுத்துவது இல்லை. எனினும் விரைவாகக் குணமடைய, வைட்டமின்கள் மற்றும் கால்சியம் மாத்திரைகளைப் பரிந்துரைப்போம்.  

எலும்பு, மூட்டு சம்பந்தமான பிரச்னைகளையும் அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்த முடியும். எனினும், இந்த சிகிச்சை முறையில் அறுவை சிகிச்சை என்பது கடைசி வாய்ப்பாக இருக்கும்.  

மேலும், ஒற்றைத் தலைவலி, அடிக்கடி தலைச்சுற்றல், வெர்ட்டிகோ தலைவலி, வயிற்றுப்போக்கு மற்றும் பல்வேறு பிரச்னைகளுக்கு இந்த சிகிச்சை மூலம் எளிதில் தீர்வு கிடைக்கும்.  

தியானம், யோகா போன்ற மனதையும் உடலையும் நார்மலாக்கும் பயிற்சிகளும் இந்த சிகிச்சை முறையில் ஒரு பகுதியாக இருப்பதால், விரைவிலேயே பரிபூரணத் தீர்வு கிடைக்கிறது.'' என்றார் விளக்கமாக.

- இரா.வசந்த்

படம்: த.சித்தார்த்