மூக்குக்கண்ணாடி என்பது பார்வைக் குறைபாடுக்கான வரப்பிரசாதமாக இருந்த காலம் போய், இன்று இளைஞர்கள் மத்தியில் ஃபேஷன் பொருளாகிவிட்டது.

1990 வரை தடிமனான ஃப்ரேம் உள்ள மூக்குக்கண்ணாடி அணிந்திருப்பவர்களைப் பார்க்க முடிந்தது. பிறகு காலம் செல்லச் செல்ல, கண்ணாடி அணிவதால் கண்கள் இடுங்கிப்போவதும், மூக்கு வளைவதும் என முகமே மாறிவிடுகிறது என்பதால், கண்ணாடிகளின் உபயோகம் குறைந்து, கான்டாக்ட் லென்ஸ் வந்தது. இன்று இளம்பெண்களில் பெரும்பாலானோர் தேவைக்காக லென்ஸ் அணிந்தாலும், பேஷன், அழகுக்காக கண்ணாடியையும் பயன்படுத்துகின்றனர். அதிலும், மூக்குக்கண்ணாடியில் குறிப்பிட்ட ஃபிரேம் மட்டும் ஒவ்வொரு காலகட்டத்திலும் இளைஞர்களைப் பார்வையால் இழுக்க ஆரம்பித்திருக்கிறது. அந்த வகையில் தற்போது பிரபலமாகி வருவதுதான், நெர்டு கிளாஸ்(Nerd Glass).

இந்த நெர்டு கிளாஸ்தான் அந்த காலத்து பாக்யராஜ் முதல், இந்த காலத்து அஜித் வரை அடையாள

சின்னமாக, சிக்கெனப் பொருந்தி இருக்கிறது. அப்போது, கண்ணாடி மெட்டலில் செய்யப்பட்டதால் சற்று எடை அதிகமாக இருக்கும். இதனால் பிரச்னைகள் ஏற்பட்டது. ஆனால், இப்போது, அதே மாடலில் எடை குறைவான ஃபைபர் மெட்டலில் இளைஞர்களுக்கு ஏற்ற மாதிரி வெரைட்டியான ஸ்டைலில், அணிந்தவருக்கு கூடுதல் அழகைத் தருகிறது என்பதுதான் உண்மை.

நெர்டு கிளாஸ் அணிவதன் பின்னணியில் இருக்கும் அழகியல் காரணங்களை காஸ்மடாலஜிஸ்ட் டாக்டர் தனலட்சுமியிடம் கேட்டோம்.

'தற்போது விற்பனையாகும் நெர்டு கிளாஸ், ஷெல் ஃபைபரில் செய்யப்பட்டதால் சரும அலர்ஜி ஏற்பட வாய்ப்புகள் குறைவு. எடை மிகக் குறைவாக இருப்பதால், மூக்கின் மேல் ஏற்படும் அழுத்தம் குறைவாக இருக்கும். அதனாலேயே இதுபோன்ற பெரிதான, கண்களை முழுமையாக அதன் சுற்றளவிற்குள் அடக்குகிற மூக்குக்கண்ணாடிகளை இளைஞர்கள் விரும்புகிறார்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் பழைய டிரெண்டையே புதுமையாக நம் வசதிக்கு ஏற்ப மாற்றி வித்தியாசமாகத் தயாரிக்கிறார்கள். இதை அணிவதற்கும் அணியாததற்கும் பின்னணியில் உள்ள அழகியல் காரணங்கள் ஒவ்வொருவரது சொந்த விருப்பத்திற்கு உட்பட்டவை. பலருக்கு இதனால் அழகு மட்டும் கூடாமல் பார்வையும் தெளிவாகக் கிடைப்பதுதான் இளைஞர்கள் மத்தியில் இது சென்று சேர்ந்ததற்கான காரணம். பார்வைக் குறைபாடு இல்லாதோரும் விரும்பி அணியலாம். காதுக்கு, கழுத்துக்கு என நகை போடுவதுபோல்தான் கண்ணாடி அணிவதும்.''

- வ.விஷ்ணு,

படங்கள்: ரா.மூகாம்பிகை

நெர்டு கிளாஸ் அணிந்துகொண்டு செல்லும் கல்லூரி பறவைகள் சிலரிடம் நாலு வார்த்தைகள்...

அரவிந்த்: ''எனக்கு கண்ணுல பவர் பிரச்னை எதுவும் இல்லை. பெரிய கண்ணாடி ஒரு மெஜஸ்டிக் லுக் தருதுங்கிறதால் போட்டிருக்கேன். அந்தக் காலத்தில் சினிமா டீச்சர்ஸ், டாக்டர்கள் எல்லாருமே பெரிய சைஸ் கண்ணாடிதான் போட்டிருப்பாங்க. அதே மாதிரியான கண்ணாடி இப்போ லைட் வெயிட்ல கிடைக்குது. எனக்கும் அது ஒரு ஸ்டைலைக் கொடுக்குது. அதான் யூஸ் பண்றேன்.''

ப்ரித்வி: ''பக்கத்து பிளாட்ல ஒரு ஏழு வயசு பையன் போட்டிருந்தான். பார்க்க செம அட்டகாசமா இருந்தது. மூக்குக்கண்ணாடி நம்ம வயசைக் கூட்டிதான் காட்டும்னு நினைச்சுட்டு இருந்தேன். ஆனால், அவனைப் பார்த்ததுக்குப் பிறகுதான், அது எவ்வளவு மாடர்ன் லுக் தருதுனு தெரிஞ்சது. உடனே வாங்கிட்டேன்.''

விவின் ஆபிரஹாம்: ''தல அஜித் நெர்டு கிளாஸ் போட ஆரம்பிச்சதுக்கப்புறம், இன்னும் அவரோட அழகு அதிகமாயிடுச்சு. ஹேண்ட்சமா இருக்கார். அவரைப் பார்த்து நானும் போட ஆரம்பிச்சுட்டேன்