Election bannerElection banner
Published:Updated:

நலம், நலம் அறிய ஆவல்!

நலம், நலம் அறிய ஆவல்!

நலம், நலம் அறிய ஆவல்!
##~##

வாழ்நாளில் அனைவரும் அடிக்கடி அனுபவிக்கும் ஒரு பிரச்னை... நெஞ்சு எரிச்சல். நாம் சாப்பிடும் எந்த ஒரு பொருளும் உணவுக் குழாய் வழியாக இரைப்பையை அடைகின்றன. அங்கு, உணவு செரிமானமாவதற்காக பல்வேறு அமிலங்கள் சுரக்கின்றன. உணவு பயணிக்கும் இந்தக் குழாய்க்கு இரைப்பையில் சுரக்கும் அமிலம் வரும்போது நெஞ்சு எரிச்சல் ஏற்படுகிறது. எப்போதாவது ஒருமுறை இப்படி எரிச்சல் ஏற்பட்டால் பிரச்னை இல்லை. ஆனால், அது தொடர் பிரச்னையாக இருக்கும்போதுதான் பாதிப்பு. 

'புகைப்பழக்கம், மது அருந்துதல், எண்ணெயில் பொரித்த உணவுகளைச் சாப்பிடுவது, வயிறு நிறையச் சாப்பிடுவது போன்றவற்றைத் தவிர்த்தாலே, நெஞ்சு எரிச்சல் பிரச்னை தவிர்க்கலாம்'' என்கிறார் பிரபல செரிமான மண்டலம் மற்றும் உடல் எடைக் குறைப்பு மூத்த அறுவைசிகிச்சை நிபுணர்  ரவீந்திரன் குமரன்.

நலம், நலம் அறிய ஆவல்!

உணவு செரிமானத்துக்காக கல்லீரலில் பித்தம் உருவாகிறது. இது பித்தப்பையில் வந்து சேருகிறது. இதில் கற்கள் உருவாகலாம். பித்தப்பை கல்லும், சிறுநீரகக் கல்லும் வெவ்வேறானவை. தினமும் போதுமான அளவு தண்ணீர் அருந்தவில்லை எனில், சிறுநீரகக் கல் வரலாம். ஆனால், பித்தப்பை கல் வருவதற்கு இதுதான் காரணம் என்று எதுவும் இல்லை. அப்படி கல் உருவாகிவிட்டால், அது பித்தப்பையில் அடைப்பை ஏற்படுத்தி நோய்த் தொற்று, மஞ்சள் காமாலையில் கொண்டுவந்துவிடும். பித்தப்பைக் கற்கள் பிரச்னை அதிக அளவில் பெண்களுக்கு ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக கர்ப்பிணிகளுக்கு ஏற்படுகிறது. கல் உருவாகிவிட்டால், பித்தப்பையை அகற்றுவதே சரியான தீர்வு. இதை ஓப்பன் முறையிலோ, சிறிய துளையிட்டு செய்யப்படும் லாப்ராஸ்கோப்பி முறையிலோ செய்யலாம்.

நெஞ்சு எரிச்சலுக்கும், உணவுக் குழாய்ப் புற்றுநோய்க்கும் உள்ள வேறுபாடுகள். திட, திரவ உணவை விழுங்குவதில் சிரமம் இருந்தால் அது உணவுக்குழாய் புற்றுநோயாக இருக்கலாம். ஆரம்ப நிலையிலேயே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். உணவுக் குழாய் புற்றுநோயை கண்டறிவது எப்படி? செரிமான மண்டலத்தில் வேறு எங்கெங்கு புற்றுநோய்கள் ஏற்படுகின்றன. இதற்கான சிகிச்சை முறைகள் என்ன என்பது முதல் செரிமான மண்டலத்தில் ஏற்படும் மற்ற பிரச்னைகள் பற்றியும், அதற்கான சிகிச்சை முறைகள் பற்றியும் மே 16 முதல் 31 வரை தினந்தோறும் விரிவாக பேசுகிறார் டாக்டர் ரவீந்திரன் குமரன்.

சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், மூட்டுவலி, பித்தப்பை கல் என பல்வேறு உடல்நலப் பிரச்னைக்கு காரணமாக அமைகிறது உடல்பருமன். உங்களின் உயரத்தை சென்டிமீட்டரில் கணக்கிட்டு, அதில் இருந்து 100ஐ கழித்தால் எவ்வளவு வருகிறதோ, அதுதான் உங்களுக்கான சரியான உடல் எடை. உடல் பருமன் என்பது வெறும் உடல் அழகு சார்ந்தது மட்டும் இல்லை. உடல்பருமனுக்கான தீர்வுகள், அறுவைசிகிச்சை முறைகள் பற்றியும் விளக்க இருக்கிறார் டாக்டர் ரவீந்திரன் குமரன்  

- ஜெஸிகா

படம்: பி.கார்த்திக்

நலம், நலம் அறிய ஆவல்!
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு