Published:Updated:

உங்களுக்கும் இருக்கிறதா முக 'முடி' அவஸ்தை?

உங்களுக்கும் இருக்கிறதா முக 'முடி' அவஸ்தை?

உங்களுக்கும் இருக்கிறதா முக 'முடி' அவஸ்தை?

உங்களுக்கும் இருக்கிறதா முக 'முடி' அவஸ்தை?

Published:Updated:
##~##

''ஆப்கானிஸ்தான் பெண் போல் அர்ச்சனாவின் முகத்தை துப்பட்டாவால் மூடியபடி என்னிடம் அழைத்து வந்தார் அவரது தாயார். 'உதட்டுக்கு மேல் நாலைந்து முடி திடீரென தெரிய, ஏதோ ஒரு வேகத்தில் பிடுங்கிவிட்டேன். இரண்டு வாரத்துலயே அந்த இடத்தில் அதிகமா முடி வளர ஆரம்பிச்சது. ஹேர் ரிமூவர் லோஷனை போட்டேன். இப்ப அந்த இடமே, பொரிபொரியாக வந்து வீங்கிவிட்டது.  இதனால், என்னால் வெளியில் தலைகாட்ட முடியலை. எப்படியாவது சரிபண்ணுங்க டாக்டர்!’ என்று அழாத குறையாகச் சொன்னார் அர்ச்சனா. இன்று பெரும்பாலான பெண்களுக்கு இருக்கும் முக்கியப் பிரச்னைகளில் ஒன்று... அத்தைக்கும் முளைக்கும் மீசைதான். இது வெறும் அழகு சம்பந்தப்பட்ட விஷயம் மட்டும் இல்லை, பல முக்கியமான நோய்களின் அறிகுறியாகவும் இருக்கிறது'' -பட்டுக்கோட்டையைச் சேர்ந்த தோல் நல மருத்துவர் சி.வி.பத்மானந்தன் சொல்லும் செய்தி நம்மை நிமிர்ந்து உட்காரவைக்கிறது. 

''பொதுவாக எல்லோருக்குமே முகத்தில் 'பூனை முடி’ என்ற மெல்லிய ரோமம் இருக்கும். இது சகஜம்தான். ஆனால், ஆண்களுக்கு முகத்தில் முளைக்கும் தடிமனான முடி போல சில பெண்களுக்கு முகம், மார்பு என உடலின் பல இடங்களிலும் முடி முளைக்கும். இதற்கு

உங்களுக்கும் இருக்கிறதா முக 'முடி' அவஸ்தை?

'ஹிர்சுடிஸம்’ (hirsutism)  என்று பெயர். 10 சதவிகிதப் பெண்களுக்கு இந்தப் பிரச்னை இருக்கிறது.'' எனச் சொன்னவர் அதுகுறித்து விளக்குகிறார்.

ஏன் வருகிறது?

இந்தப் பிரச்னை வருவதற்கு 'இடியோபேத்திக்’ மற்றும் 'விரிலைசேஷன்’ (ஆண்தன்மை) என இரு வகைக் காரணங்கள் உண்டு. பூப்பெய்தும்போது, கர்ப்ப காலத்தில், மாதவிடாய் சுழற்சி நிற்கும்போது, ஹார்மோன் மாறுதல் ஏற்படும்போது பெண்களுக்கு முகத்தில் தடிமனான முடி முளைக்கும். தைராய்டு பிரச்னை இருப்பவர்களுக்கும், ஸ்டிராய்ட்ஸ் மாத்திரைகளையும் கர்ப்பத்தடை மாத்திரைகளையும் தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கும் இந்தப் பிரச்னை வரும். இவை அனைத்தும் இடியோபேத்திக்.

பெண்ணின் ஓவரி மற்றும் அட்ரீனல் சுரப்பியில் கட்டிகள் இருப்பதன் விளைவாக சுரக்கும் அதிகப்படியான 'டெஸ்டோஸ்டிரான்’ காரணமாகவும், முகத்தில் தடிமனான முடி முளைக்கும். ஆண்தன்மை அதிகமாக இருத்தல், இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் பிரச்னை இருப்பவர்களுக்கும் முகத்தில் தடிமனான முடி முளைக்கும். இதற்கு, 'விரிலைசேஷன்’ என்று பெயர்.

உங்களுக்கும் இருக்கிறதா முக 'முடி' அவஸ்தை?

சிகிச்சை முறைகள்?

எந்த வயதில் இந்தப் பிரச்னை ஏற்படுகிறது என்பதைப் பொறுத்துதான் சிகிச்சை மேற்கொள்ளமுடியும். பூப்பெய்தியவுடன் இந்தப் பிரச்னை வருவதற்கும், மெனோபாஸ் காலகட்டத்தில் இந்தப் பிரச்னை வருவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. இவை, எந்த வகையைச் சேர்ந்தது என்பதை 'ஃப்ரீ பிளாஸ்மா டெஸ்டோஸ்டிரான்’, DHEA  டெஸ்ட் அல்லது DHEA-S  டெஸ்ட் போன்றவை மூலமும், மற்ற ஹார்மோன் டெஸ்ட் மூலமும் கண்டறியலாம். பெண்களுக்கு பிசிஓடி (Polycystic ovarian disease) பிரச்னை ஏற்பட்டு, அதனால் முகத்தில் முடி வளர்கிறது எனச் சந்தேகம் ஏற்பட்டால், ஸ்கேன் செய்து பரிசோதிக்கவேண்டும். இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் பிரச்னை இருந்தால், 'மெட்ஃபார்மின்’ அல்லது ஆன்டி - ஆண்ட்ரோஜன் வகை  மாத்திரைகளைக் கொடுத்துக் கட்டுப்படுத்தலாம். இதேபோல் உடலின் வெளிப்புற சிகிச்சையாக முடியின் வேரில் இருக்கும் மெலனின் நிறமியை லேசர் ஒளியைப் பாய்ச்சி, தாக்குவதன் மூலம் முடியை வேரோடு அழித்துவிடலாம். அதேபோல DIODE,Nd YAG, IPL (Intense Pulsed Light) எனவும் சிகிச்சைமுறைகள் இருக்கின்றன. இவை அனைத்தையும் மாதம் ஒருமுறை குறைந்தது ஆறு மாத காலத்திற்குச் செய்துகொள்ள வேண்டும்.

இதற்கு என்ன தீர்வு?

இந்தப் பிரச்னைக்கு பியூட்டி பார்லர்களில், 'எலக்டோலைசிஸ்’ எனப்படும் முறையில், முடியின் வேரில் மின்சாரத்தைப் பாய்ச்சி அழிப்பார்கள். இது மருத்துவத் துறையில் இருக்கும் ஒரு முறைதான் என்றாலும், இதன் மூலம் நோய்த்தொற்று மற்றும் தழும்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. தற்போது பெரும்பாலான மருத்துவர்களே இந்த சிகிச்சையை மேற்கொள்வதில்லை. ஆனால், பல பியூட்டி பார்லர்களில் இது செய்யப்படுகிறது. இதேபோல வேக்ஸிங் முறையும் தற்காலிகமானதுத£ன். நிரந்தரத் தீர்வு தராது. எனவே இந்தப் பிரச்னை ஒருவருக்கு இருக்கிறது என்றால், முதலில் தோல் நல மருத்துவரையோ அல்லது மகப்பேறு மருத்துவரையோ அணுகி ஆலோசனை பெறவேண்டியது அவசியம்.

- உ.அருண்குமார், படம்: ரா.மூகாம்பிகை

மாடல்: ஐஸ்வர்யா