Published:Updated:

நலம், நலம் அறிய ஆவல்!

நலம், நலம் அறிய ஆவல்!

நலம், நலம் அறிய ஆவல்!

நலம், நலம் அறிய ஆவல்!

Published:Updated:
##~##

''மணிக்கணக்கில் கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்துகொண்டு ஒரே நிலையில் வேலைபார்ப்பது, இரு சக்கர வாகனத்தில் நீண்ட தூரம் பயணிப்பது, துடிப்பான செயல்பாடுகளில் மந்தம் போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு நாம் ஆளாகித் தவிக்கிறோம். இதனால், தோள்பட்டை, மணிக்கட்டு, கை, முதுகு, கால் வலி போன்ற உபாதைகள் இளம் வயதினரையும் தாக்குகின்றன. ஆனால், இதுபற்றிய மக்களிடையே போதிய விழிப்பு உணர்வு இல்லாமல், பெரும்பாலானோர் வலியுடனே வாழப் பழகிவிடுகின்றனர். பிரச்னை முற்றிய நிலையிலேயே மருத்துவரை அணுகுகின்றனர். ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சையை மேற்கொண்டால்தான் உடலுக்கு வரும் பெரும் பாதிப்பைத் தடுக்க முடியும்.'' என்கிறார் அப்பல்லோ மருத்துவமனையின் தோள்பட்டை மற்றும் எலும்பு மூட்டு அறுவைசிகிச்சை நிபுணர் ஆர்.செந்தில்வேலன். 

''கம்ப்யூட்டர் முன்பு பல மணி நேரம் அமர்ந்து வேலைசெய்ய வேண்டிய நிலை என்றாலும், கீபோர்டு, மவுஸ், கம்ப்யூட்டர் திரை, அமரும் நாற்காலி எப்படி இருக்க வேண்டும், எவ்வளவு உயரத்தில் இருக்க

நலம், நலம் அறிய ஆவல்!

வேண்டும், கீபோர்டில் எப்படி கை வைத்து டைப் செய்ய வேண்டும் என்ற விஷயம் பலருக்கும் தெரிவதில்லை. இதனால், கை மணிக்கட்டுப் பகுதி  நரம்பில் அழுத்தம் அதிகமாகி கை பெருவிரல், சுட்டு விரலில் ஊசி குத்துவதுபோன்ற தாங்க முடியாத வலி ஏற்படுகிறது. மேலும், முழங்கை மூட்டுப் பகுதியில் அதிக அளவிலான அழுத்தம் காரணமாகத் தசைகள் பாதிக்கப்பட்டு வலி ஏற்படுகிறது. இப்படிப்பட்ட சிகிச்சைக்காக, இன்றைக்கு அதிக அளவில், ஆர்த்தோ மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெறுகின்றனர்'' என்கிற டாக்டர் செந்தில்வேலன், நவீன கீஹோல் சிகிச்சை மூலம் தழும்புகள் இன்றி டே-கேர் (Daycare)முறையில் சிகிச்சை பெற்று ஒரே நாளில் வீடு திரும்பலாம் என்று நம்பிக்கை அளிக்கிறார்.

பெண்களை அதிகம் பாதிக்கும் ஆஸ்டியோபொரோசிஸ் எனப்படும் எலும்பு அடர்த்திக் குறைவு நோய், மெனோபாஸுக்குப் பிறகு ஹார்மோன் மாற்றம் காரணமாக ஏற்படுகிறது. ஆண்களுக்கு முதுமையில் இந்தப் பிரச்னை வரும். இதற்கு எந்த அறிகுறியும் கிடையாது. 20 வயதுள்ளவர் சாதாரணமாகக் கீழே விழும்போது, அவருக்கு எலும்பு முறிவது இல்லை. ஆனால், இதே எலும்பு அடர்த்திக் குறைவு பிரச்னை உள்ளவர்கள் சாதாரணமாகக் கீழே விழுந்தால்கூட, எலும்பு முறிவு ஏற்படலாம். இந்தப் பிரச்னையைத் தவிர்க்க முடியும். மெனோபாஸுக்குப் பிறகு பெண்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் எலும்பின் அடர்த்தியைப் பரிசோதனைசெய்து, டாக்டரின் ஆலோசனையின் பேரில் வைட்டமின் டி, கால்சியம் சத்து மாத்திரை மற்றும் எலும்பு அடர்த்தியை அதிகரிக்கும் மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்'' என்கிறார்.

டாக்டர் விகடனின், 'நலம் நலம் அறிய ஆவல்’ பகுதியில் ஜூன் 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை தினமும், தோள்பட்டையில் ஏற்படும் பாதிப்புகள், மாறிவரும் வாழ்க்கை முறையால் மணிக்கட்டுப் பகுதியில் ஏற்படும் வலிகள், கழுத்து, முதுகு, மூட்டுவலி பிரச்னையைத் தவிர்ப்பது எப்படி, என்ன மாதிரியான நவீன சிகிச்சைகள் உள்ளன, பெண்களுக்கு அதிக அளவில் ஏற்படும் எலும்பு அடர்த்தி குறைந்து எலும்பு முறிவைத் தடுப்பது எப்படி, எல்லா எலும்பு முறிவுகளுக்கும் கட்டுப் போடுவது என்பது சரிதானா? என விரிவாகப் பேசுகிறார் டாக்டர் செந்தில்வேலன்.

 - பா.பிரவீன்குமார்,

படம்: பொன்.காசிராஜன்

நலம், நலம் அறிய ஆவல்!

 தோள்பட்டையில் ஏற்படும் வலிக்குக் காரணம் என்ன?

 சர்க்கரை நோயாளிகளுக்குத் தோள்பட்டைத் தசை கடினமாவது ஏன்?

 விளையாட்டுகளின்போது ஏற்படும் தோள்பட்டை, மூட்டு காயங்களுக்கு என்ன சிகிச்சை?

 எல்லா எலும்பு முறிவுக்கும் கட்டுப்போடுதல் சரியான தீர்வா?

 நீண்ட நேரம் கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு கழுத்து, முதுகு, மணிக்கட்டில் வலி ஏன் வருகிறது?

 முதுகு வலிக்குத் தீர்வு என்ன?

 கை, தோள்பட்டை வலிக்கு நவீன சிகிச்சை என்ன?

 கழுத்தில் தசை இறுக்கம் பிரச்னைக்குச் சிகிச்சை உண்டா?

 ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்னை ஏன் பெண்களுக்கு அதிகம் வருகிறது?

 ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்னையைத் தடுக்கும் வழிகள் என்ன?

 வைட்டமின் டி குறைபாட்டுக்கு என்ன தீர்வு?