Published:Updated:

ரத்த சோகையா? சத்தான டிப்ஸ்!

ரத்த சோகையா? சத்தான டிப்ஸ்!

ரத்த சோகையா? சத்தான டிப்ஸ்!

ரத்த சோகையா? சத்தான டிப்ஸ்!

Published:Updated:
##~##

'மாநிறமா இருந்த உன் பொண்ணு, சென்னைக்கு வேலைக்குப்போய்ட்டு, சிவப்பாயிட்டாளே!’ என்று ஊரார் வியந்து கேட்பதைப் பார்த்து, தாய்க்கே வியப்பாக இருக்கும். ஆனால், அந்தப் பெண் ஒருவேளை ரத்தசோகையால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்பதுதான் அதிர்ச்சியான தகவல். பிழைப்புக்காக பெற்றோரைப் பிரிந்து விடுதியில் தங்கியிருக்கும் பெரும்பாலான டீன் ஏஜ் பெண்களுக்கு ரத்தசோகைப் பாதிப்பு இருக்கிறது என்கிறது மருத்துவ ஆராய்ச்சி.   

சத்தான உணவை எடுத்துக்கொள்ளாததன் விளைவு, இளம் பெண்கள் ரத்தசோகைப் பாதிப்புக்கு உள்ளாவது. ரத்த சோகையால் ஏற்படும் பாதிப்புகளையும், அதற்கான தீர்வுகளையும் அலசுகிறார் மதுரையைச் சேர்ந்த மருத்துவர் நல்லினி அருள். அவர் கூறிய தகவல்கள், நமக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியும் அளிக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரத்த சோகையா? சத்தான டிப்ஸ்!
ரத்த சோகையா? சத்தான டிப்ஸ்!

'பொதுவாக நம் உடலினுள் இருக்கும் ரத்தத்தில் ஹீமோகுளோபின் ஆண்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவும், பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவும் இருக்கும். இந்த ஹீமோகுளோபினின் அளவு குறையும்போது, உடலில் ஏற்படும் பிரச்னைகள்தான் ரத்தசோகை (anemia). இன்றைய காலகட்டத்தில், டீன்-ஏஜ் பெண்களிடமும், திருமணம் முடிந்த பெண்களிடமும் ரத்தசோகைப் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. பொதுவாக, பெண்களுக்கு 10.5 g/dLஎன்ற அளவில் ரத்தத்தில் ஹீமோகுளோபின் இருக்க வேண்டும்.

 காரணங்கள்:

ரத்தசோகை ஏற்பட ஊட்டச்சத்துப் பற்றாக்குறை, ரத்த இழப்பு இந்த இரண்டும்தான் முக்கியக் காரணம்.

  காலில் சக்கரம் கட்டிக்கொண்டு பள்ளி, விளையாட்டு என ஓடும் டீன் ஏஜ் பெண்கள் பெரும்பாலும் சத்தான உணவு சாப்பிடுவது இல்லை. இரும்புச்சத்துக் குறைபாடு ரத்த சோகைக்கு வழிவகுக்கிறது. அதுவே, அவர்களுக்கு மகப்பேறு சமயத்தில் மிகப் பெரிய பிரச்னைகளை உருவாக்குகிறது.

ரத்த இழப்பில், குறுகிய கால ரத்த இழப்பு, நீண்ட கால ரத்த இழப்பு என இரண்டு வகைகள் உண்டு.

  அடிபட்டுக் காயம் ஏற்படுவது குறுகிய கால ரத்த இழப்பு. வயிற்றில் புழு, மாதவிடாய் பிரச்னைகள் போன்றவை நீண்ட கால ரத்த இழப்பை உண்டாக்கும். ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் உடைந்து அழிவதாலும் ரத்தசோகை உண்டாகும்.

ரத்த சோகையா? சத்தான டிப்ஸ்!

  கர்ப்பிணிப் பெண்களுக்கு 5-வது மாதத்தில் ரத்தசோகை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. குழந்தையின் வளர்ச்சி அதிகரிப்பதால், தாயிடம் உள்ள ரத்தம் குழந்தைக்குத் தேவைப்படும் இந்த நேரத்திலும் ரத்தசோகை ஏற்படலாம்.

 அறிகுறிகள்:

மிகவும் அசதியாக இருக்கும். எந்த ஒரு வேலையைச் செய்தாலும் உடல் சோர்வடைந்துவிடும். அதிகப் படபடப்பு ஏற்படும். தோலில் சுருக்கம் ஏற்பட்டு வெளிறிப்போகும். நோய் தொற்றுவதும் எளிது.

 அதீதமான விளைவுகள்:

உரிய நேரத்தில் சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் விட்டால், ரத்தத்தில் இருக்கும் ஹீமோகுளோபின் அளவு மிகவும் குறைந்து, ரத்தத்தின் அடர்த்தியும் குறையும். இதனால் இதயத்தின் துடிப்பு அதிகரிக்கும். ஒரு கட்டத்தில் இதயம் வீக்கம் அடைந்துவிடும். இதை ஹைபர்டிராஃபி என்பார்கள். நுரையீரல் பாதிக்கப்படும். உடலில் நீர் தங்கி, பாதத்தில் வீக்கம் (மீபீமீனீணீ) ஏற்படும். இதனால் மரணம் அடையும் வாய்ப்பும் அதிகரித்துவிடும்.  

 சிகிச்சைகள்:

  ஹீமோகுளோபின் அளவு 9 – 10 இருந்தால், உணவு முறையிலேயே மாற்றம்செய்து குணப்படுத்தலாம்.

  ஹீமோகுளோபின் 7 – 9 தாக இருந்தால், ஊசி, மருந்துகள் மூலம் குணப்படுத்தலாம்.

  7-க்கும் குறைவாக இருந்தால், ரத்த மாற்றம்தான் தீர்வு. புதிதாக ரத்தம், மாற்றம் செய்யப்படும்.

 ரத்த சோகைக்குத் தீர்வு:

  மாதவிடாய் காலத்தில் இரும்புச் சத்து உள்ள உணவுகள் உட்கொள்ள வேண்டும். அது ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவைக் கட்டுப்படுத்தும்.

  உரிய வயதை எட்டுவதற்கு முன்பு திருமணம் செய்யக் கூடாது.  ஒரு குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் போதுமான இடைவெளி இருக்க வேண்டும்.  

 ரத்தசோகை வராமல் தடுக்கவும், வந்த பிறகு என்ன மாதிரியான இயற்கை உணவுகளைச் சாப்பிடலாம் என்பது பற்றி சித்த மருத்துவர் கார்த்திகேயன் சொல்கிறார்...

  இயற்கை உணவு வகைகள்தான் பெஸ்ட். முருங்கைக் கீரை, முருங்கைக் காய் இவற்றில் இரும்புச் சத்து அதிகம் இருக்கிறது.

ச.பா.முத்துகுமார்,

படங்கள்: பா.காளிமுத்து

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism