Published:Updated:

உயிர்காக்கும் ஒரு துளி ரத்தம்

உயிர்காக்கும் ஒரு துளி ரத்தம்

உயிர்காக்கும் ஒரு துளி ரத்தம்

உயிர்காக்கும் ஒரு துளி ரத்தம்

Published:Updated:
##~##

''ஒரு துளி ரத்தம் போதும், பரவலாகக் காணப்படும் 25 வகையான புற்றுநோய் பாதிப்பு ஏதேனும் உள்ளதா என்பதைக் கண்டறிய முடியும்'' என்கிறார் சென்னை பாரத் ஸ்கேன் மையத்தின் ரேடியாலஜி மருத்துவர் இம்மானுவேல்.

''கார், இரு சக்கர வாகனத்தை குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை சர்வீஸுக்கு விட்டு, சொகுசாய் பறக்கிறோம். நீண்ட தூரப் பயணம் செல்ல நேரிடுகையில், காரில் எல்லாம் சரியாக உள்ளதா எனப் பரிசோதிக்கிறோம். இந்த அக்கறை நம் உடல் மீது மட்டும் ஏன் இருப்பது இல்லை? எந்த ஒரு பிரச்னைக்கும் ஆரம்பத்திலேயே மருத்துவ உதவியை நாடாமல், பிரச்னையை முற்றவிட்டுவிட்டு, வேறு வழியில்லை என்ற நிலையில் மருத்துவமனைக்கு செல்கிறோம்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குறிப்பிட்ட கால இடைவெளியில் வாகனங்களை சர்வீஸ் செய்வதற்கு ஆகும் செலவைக் காட்டிலும் குறைவான முழு உடல் பரிசோதனைகளைச் செய்வதன் மூலம், நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழலாம்'' என்கிற இம்மானுவேல். இதுகுறித்து விரிவாகப் பேசினார்.  

உயிர்காக்கும் ஒரு துளி ரத்தம்

'உலக அளவில் மிகவும் மோசமான வியாதி, புற்றுநோய். இந்தியாவில், ஆண்டுதோறும் லட்சக்கணக்கானவர்கள் இந்த நோயின் பாதிப்புக்கு ஆளாகின்றனர். இதில் பல நோய்களை ஆரம்ப

உயிர்காக்கும் ஒரு துளி ரத்தம்

நிலையிலேயே கண்டறிந்தால், மருந்து மாத்திரை மூலமே சரிசெய்ய முடியும். ரத்தப் பரிசோதனை என்பது ரத்தத்தில் சர்க்கரை, கொழுப்பு அளவு எப்படி உள்ளது என்பதைக் கண்டறியப் பயன்படுத்தப்படுகிறது. ரத்தத்தில் சர்க்கரை, கொழுப்பு அளவு அதிகரித்துவிட்டாலோ, குறைந்தாலோ பிரச்னை இல்லை. அதைக் கட்டுப்படுத்திவிடலாம். ஆனால், இந்த ரத்தத்தைக்கொண்டு புற்றுநோய் உள்ளதா என்பதைக் கண்டறிய முடியும் என்பது நவீன நோய் கண்டறிதல் முறை.

ஒரு துளி அதாவது 3 மி.லி. ரத்தத்தைக்கொண்டு இந்தியாவில் பரவலாகக் காணப்படும் கருப்பை புற்றுநோய், கருமுட்டை, பெருங்குடல், கணையம், பித்தப்பை, கல்லீரல், தைராய்டு, ரத்தம், புராஸ்டேட், மார்பகம், எலும்பு, வயிறு, சிறுநீரகம், ரத்தக் குழாய் உள்ளிட்ட 25 வகையான புற்றுநோய்கள் ஒருவருக்கு உள்ளதா என்பதைக் கண்டறியும் பரிசோதனை செய்யப்படுகிறது. யார் வேண்டுமானாலும் இந்த பரிசோதனைகளைச் செய்துகொள்ளலாம். இதற்கு நேரில் வர வேண்டும் என்ற அவசியம்கூட இல்லை. உலகத்தில் எங்கிருந்தாலும், தங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள ஆய்வுக்கூடத்தில் ரத்தத்தை சேகரித்து அனுப்புவதன் மூலம் ஆரோக்கியமாக இருக்கிறோமா என்பதை சரிபார்த்துக்கொள்ளலாம்.

புற்றுநோய் மார்க்கர் என்று ஒன்று உள்ளது. புராஸ்டேட் புற்றுநோய் உள்ளதா எனக் கண்டறிய பிஎஸ்ஏ என்ற மார்க்கர் உள்ளது. பொதுவாக ரத்தப் பரிசோதனையில் இதன் அளவு 5-க்கு கீழ் இருக்க வேண்டும். ஆனால் ஆறுக்கு மேல் சென்றால், ஏதோ பிரச்னை உள்ளது என்று அர்த்தம். ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பு, நோய்த் தொற்று காரணமாகவும் இந்த அளவு அதிகரிக்கலாம். எனவே, ஆன்டிபயாடிக் கொடுத்து மீண்டும் பரிசோதனை செய்யப்படும். இப்படி ஆரம்ப நிலையிலேயே பிரச்னையைக் கண்டறிவதன் மூலம், மிகப் பெரிய பாதிப்புகளில் இருந்து தப்பலாம். இதேபோன்று, கருமுட்டைக்கு சி.ஏ-125, பெருங்குடலுக்கு சிஈஏ, வயிறுக்கு சி.ஏ-72.4 என்று மார்க்கர்கள் உள்ளன. ரத்தத்தை ஒரு மெஷினில் வைத்து பல்வேறு கட்டப் பரிசோதனைகள் செய்யப்படும். நான்கு மணி நேரத்தில் இந்த மார்க்கர்கள்கொண்டு அவருக்கு ஏதேனும் பாதிப்புகள் உள்ளதா என்பதைக் கண்டறியலாம். இந்தச் சிகிச்சைமுறைக்கு அமெரிக்காவின் எஃப்.டி.ஏ அங்கீகாரமும் உள்ளது.

ஒருவேளை புற்றுநோய் உறுதிப்படுத்தப்பட்டால், உடனடியாக அதற்குச் சிகிச்சை எடுப்பதும் தவறு. அடுத்தக் கட்டமாக பெட் ஸ்கேன் உள்ளிட்ட மற்ற மேல்கட்டப் பரிசோதனை செய்ய வேண்டும். இந்த பெட் ஸ்கேன் மூலம் ஒருவருக்கு எந்த இடத்தில் புற்றுநோய் உள்ளது, வேறு எங்காவது பரவியுள்ளதா என்பதைக் கண்டறிந்து உறுதிப்படுத்த முடியும். இந்த ரத்தப் பரிசோதனை மூலம் நோய் கண்டறிதல் மட்டுமல்ல, நாம் எடுத்துக்கொள்ளும் சிகிச்சைக்கு நல்ல பலன் உள்ளதா என்பதையும் உறுதிப்படுத்தலாம். இதன் மூலம் தேவையெனில் சிகிச்சைமுறையையும் மாற்றிக்கொள்ள முடியும். இன்னும் சில ஆண்டுகளில், புற்றுநோய் கண்டறியும் இந்த ரத்தப் பரிசோதனை இன்றி, மாஸ்டர் ஹெல்த் செக் அப் முழுமையடையாது' என்றார்.

- பா.பிரவீன்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism