Published:Updated:

இனிதே வாழ... வழிகாட்டும் புத்தகம்!

இனிதே வாழ... வழிகாட்டும் புத்தகம்!

இனிதே வாழ... வழிகாட்டும் புத்தகம்!

இனிதே வாழ... வழிகாட்டும் புத்தகம்!

Published:Updated:
##~##

உடலும் மனமும் நலமாக இருக்க, சத்தான உணவுகளைத் தேடிப் பிடித்து உண்ண வேண்டும். ஆனால், 'எதைச் சாப்பிடுவது? எப்படி சாப்பிடுவது?’ என்ற கேள்விகளுக்கே, நம்மிடம் தெளிவான பதில்கள் இல்லையே. எதைச் சாப்பிட வேண்டும்... எதைத் தவிர்க்க வேண்டும்... என்ற அறிதல் இருந்தால், நோய்நொடியின்றி நிம்மதியாக வாழலாம் என்ற புரிந்துணர்வை ஏற்படுத்தும் புத்தகம் இது.   

நிறம், மணம், கார்ப்பு... என மூன்று வகைக் குணங்கள் கொண்ட வெற்றிலையைப் போடுவதற்கு ஒரு முறை உண்டு என்று அருமையாக விளக்கியுள்ளார் நூலாசிரியர் வெ.தமிழழகன். வெற்றிலையுடன் மிளகு சேர்த்து தண்ணீருடன் புகட்டினால், சிறுவர்களுக்கு உண்டாகும் செரியாமை சரியாகிவிடும் என்று வியக்கவைக்கிறார். மேலும், இயற்கையாகவே நம் உடலில் நிறைந்திருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியோடு இயற்கை உணவான காய்கனிகள், கிழங்குகள், கீரைகள் என அரிய சத்து சேரும்போது,  நீண்ட காலம் வாழ தேவையான ஆற்றல் நமக்கு எளிதில் கிடைக்கிறது என்பதை விளக்கியுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இனிதே வாழ... வழிகாட்டும் புத்தகம்!

ஒவ்வொரு உணவு வகையிலும் என்னென்ன மருத்துவப் பலன்கள் உள்ளன என்பதைத் தெரிவிக்கும்

இனிதே வாழ... வழிகாட்டும் புத்தகம்!

நூல் இது. அறுசுவை உணவும் அதற்கான அரிய பலன்களையும் பட்டியல் இடுகிறார். சுவை, ருசி, பசி இவற்றுக்காக மட்டும் நாம் சாப்பிடுவது இல்லை. நம் உடலில் உள்ள கோடிக்கணக்கான உயிரணுக்கள் - செல்களின் இயக்கம் மற்றும் உற்பத்தி சரிவர இருப்பதற்காகவும் உடலின் ஆரோக்கியம் சீராக இருக்கவும்தான் சாப்பிடுகிறோம். இயற்கை உணவுகளைச் சாப்பிடுவதன் மூலம் உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்கிறது. ஆற்றலும் உருவாகிறது. நோய் உண்டாவதும் தடுக்கப்படுகிறது என்கிறார்.

நார்ச் சத்தின் தேவை, அது என்னென்ன உணவுப் பொருட்களில் உள்ளது, அதை உட்கொள்வதால் ஏற்படும் பலன்கள் எல்லாம் தெளிவாகவும் சுவையாகவும் சொல்லப்பட்டு இருக்கிறது.

பழங்களைப் பற்றி ஆராய்ந்து எளிய மொழியில் ஒவ்வொரு பழத்தின் சத்துக்களை விரிவாக விளக்குகிறது இந்த நூல்.  மேலும், ஆரோக்கியம் தரும் உணவு வகைகளில் முட்டை, பால், தேன், இளநீர் போன்றவற்றின் சிறப்பை விளக்கி நம் உடலுக்கும் உயிருக்கும் மிகத் தேவையான நீரைப் பற்றியும் எழுதியிருப்பது சிறப்பு.

உயிர், உடல், உள்ளம்... இவை மூன்றுக்கும் புத்துணர்வை அளித்து, இயற்கை உணவே மனிதனின் ஆயுளை நீட்டிக்கிறது என்பதை இந்தப் புத்தகம் மிக எளிமையாகப்  பதிவுசெய்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism