Published:Updated:

டாக்டர் எனக்கு ஒரு டவுட்டு?

டாக்டர் எனக்கு ஒரு டவுட்டு?

டாக்டர் எனக்கு ஒரு டவுட்டு?

டாக்டர் எனக்கு ஒரு டவுட்டு?

Published:Updated:
##~##

லேசான தலைவலி, இருமல், சளி என சின்னச் சின்ன உபாதைகளுக்குக்கூட மாத்திரைகளை விழுங்கும் காலம் இது. ஒவ்வொரு பிரச்னைக்கும் ஏற்ப, மாத்திரைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. மாத்திரைகள் உட்கொள்வதுபற்றிய சந்தேகங்களுக்கு, சென்னை அரசுப் பொது மருத்துவர் டாக்டர் அருள் தரும் தகவல்கள். 

டாக்டர் எனக்கு ஒரு டவுட்டு?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 மருத்துவரிடம் போகாமலேயே மாத்திரைகளைக் கடைகளில் வாங்கிச் சாப்பிடலாமா?

பொதுவாக, மாத்திரை சாப்பிடுவதில் இரண்டு வகை. காய்ச்சல், சளி போன்ற தற்காலிக உடல் பிரச்னைகளுக்காக சாப்பிடுவது. மற்றொன்று, சர்க்கரை நோய் ரத்தக் கொதிப்பு, போன்றவைக்குத் தொடர்ச்சியாகச் சாப்பிடுவது... இந்த இரண்டு வகைகளுக்கும் மருத்துவ ஆலோசனை இன்றி மாத்திரைகள் எடுத்துக்கொள்ளக் கூடாது.

டாக்டர் எனக்கு ஒரு டவுட்டு?
டாக்டர் எனக்கு ஒரு டவுட்டு?

  உணவுக்கு முன்பு, பின்பு என மருத்துவர் தரும் மாத்திரைகளை மாற்றி சாப்பிட்டால் என்ன ஆகும்?

எந்த ஆபத்தும் வராது. மாத்திரையின் வீரியம்தான் குறையும். ஆனால் உணவுக்குப் பின்பு சாப்பிடுகின்ற மாத்திரையை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், வயிற்று எரிச்சல், வயிற்றுப் புண் போன்ற பிரச்னைகள் வரும்.

டாக்டர் எனக்கு ஒரு டவுட்டு?

  சில மருத்துவர்கள் லேசான காய்ச்சலுக்குக்கூட நாலைந்து மாத்திரைகளைத்

டாக்டர் எனக்கு ஒரு டவுட்டு?

தருகிறார்களே?  சிலருக்கு காய்ச்சலுடன், தொண்டைப்புண், தலைவலி, உடல்வலி என கூடுதலாகப் பிரச்னைகள் இருக்கலாம். ஒவ்வொருவரின் உடல் பாதிப்பைப் பொறுத்து மாத்திரைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். அலட்சியப்படுத்தாமல், மருத்துவரின்மீது நம்பிக்கைவைத்து மாத்திரைகளைச் சாப்பிட வேண்டும்.  

டாக்டர் எனக்கு ஒரு டவுட்டு?

 ஒரு முறை வந்த காய்ச்சலுக்கு மருத்துவர் தந்த மாத்திரையைச் சாப்பிட்டு சரியானதும், மறுமுறை காய்ச்சல் வந்தால், அதே மாத்திரையைக் கடையில் வாங்கிச் சாப்பிடலாமா?

காய்ச்சலில் பல வகை இருப்பதால், ஒருமுறை பயன்படுத்திய மாத்திரையை திரும்பவும் பயன்படுத்தும்போது, பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. மருத்துவரின் ஆலோசனை பெறுவதே நல்லது.

டாக்டர் எனக்கு ஒரு டவுட்டு?

 மருத்துவர் எழுதித்தந்த மாத்திரைகள் இல்லையெனில், அதே பிராண்டில் வேறு கம்பெனி மாத்திரைகளைத் தருகிறார்களே?

சாதாரணக் காய்ச்சல், சளி போன்றவைக்கு வேறு பிராண்ட் மருந்துகள் எடுத்துக்கொள்ளும்போது பாதிப்பு இருக்காது. ஆன்டிபயாட்டிக் மருந்துகள் வாங்கும்போது மட்டும், மருத்துவர் எழுதித்தந்த மாத்திரைகளின் பிராண்டைத் தவிர, வேறு பிராண்டு மாத்திரைகளைச் சாப்பிடக் கூடாது.

டாக்டர் எனக்கு ஒரு டவுட்டு?

  காலாவதியான மருந்துகளைச் சாப்பிடலாமா?

கூடாது. நிச்சயம் கல்லீரல் பாதிப்பு ஏற்படும்.

- செ. திலீபன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism