Published:Updated:

அக்கம் பக்கம்

அக்கம் பக்கம்

அக்கம் பக்கம்

அக்கம் பக்கம்

Published:Updated:
அக்கம் பக்கம்
அக்கம் பக்கம்
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மூக்குப் பகுதியில் மூளையுடன் பிறந்த டோம்னிக் குண்ட்ரம் என்ற ஆண் குழந்தைக்கு, அறுவைசிகிச்சை செய்து மூளையை கபாலத்துக்குள் பொருத்தினர். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் மேரி குண்ட்ரம். ஐந்து மாதக் கர்ப்பிணியாக இருந்தவரை பரிசோதனை செய்துபார்த்தபோது, வயிற்றில் குழந்தை குறைபாட்டுடன் இருப்பதுத் தெரிந்தது. அந்த நிலையில் குறைபாட்டை சரிசெய்ய முடியவில்லை. மேலும், கருக்கலைப்பும் செய்ய முடியவில்லை. குழந்தைப் பிறந்தபோது அதன் மூக்குப் பகுதியில் மூளை இருந்தது. பிறந்தவுடன் அறுவைசிகிச்சை செய்ய முடியாது என்பதால், டாக்டர்கள்  ஏழு மாதங்கள் வரை காத்திருந்து அறுவைசிகிச்சை செய்தனர். முன்பு இதுபோன்று பிறந்த குழந்தைக்கு 30 மணி நேரத்துக்கு மேலாக அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. ஆனால், இந்தக் குழந்தைக்கு ஆறு மணி நேரத்தில் அறுவைசிகிச்சை செய்து முடித்து, குழந்தையைக் காப்பாற்றியுள்ளனர் டாக்டர்கள். இந்த நிலையில் தன்னுடைய முதலாவது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளான் டோம்னிக் குண்ட்ரம்.

 மூ(க்கு)ளைக்காரன்தான்!

அக்கம் பக்கம்

மும்பையில் உள்ள மூன்று தனியார் மருத்துவமனைகளில் ஐந்து பேர் சிறுநீரக செயலிழப்புக்காகச் சிகிச்சை பெற்றுவந்தனர். அவர்களுக்கு சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்தாக வேண்டிய நிலை. அவர்களின் உறவினர்கள் சிறுநீரகத்தைத் தானமாகக் கொடுக்கத் தயாராக இருந்தாலும், அதை அவர்களுக்குப் பொருத்த முடியாத நிலை. ஆனால் இப்படி தானமாக கொடுக்கத் தயாராக உள்ள ஐவரிடமிருந்து பெறப்படும் சிறுநீரகங்களை, காத்திருக்கும் ஐவருக்கும் மாற்றி மாற்றிப் பொருத்த முடியும் என்று டாக்டர்கள் அறிவித்தனர். இதை ஏற்றுக்கொண்ட கொடையாளிகள், சிறுநீரகத்தை வேறு ஒருவருக்கு தானமாகக் கொடுத்து, தங்கள் அன்புக்கு உரியவருக்கு சிறுநீரகத்தைத் தானமாகப் பெற ஒப்புக்கொண்டனர். இதைத் தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் மும்பையில் உள்ள மூன்று மருத்துவமனைகளில் அறுவைசிகிச்சை நடந்தது. 40 மூத்த அறுவைசிகிச்சை நிபுணர்கள் ஒன்றுகூடி, பத்து அறுவைசிகிச்சைகளை ஒரே நேரத்தில் செய்து சாதனைப் படைத்துள்ளனர். இதில் நான்கு ஜோடிகள், கணவன் மனைவி. ஒருவர் மட்டும் தன் அன்பு மகளுக்கு தன்னுடைய சிறுநீரகத்தைத் தானமாகத் தர முன்வந்த தந்தை. அறுவைசிகிச்சைக்குப் பிறகு நோயாளிகள் அனைவரும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

தானத்தில் சிறந்த தானம்!

அக்கம் பக்கம்
அக்கம் பக்கம்

மன அழுத்தம் இல்லாத ஆட்களே இல்லை. இது குழந்தைகளிடம் ஆரம்பித்து முதியோர் வரை எங்கும் உள்ளது. ஆனாலும் இதுதான் மன அழுத்தம் எனக் கண்டுகொள்ளவோ அல்லது எவ்வளவு மனஅழுத்தம் உள்ளது எனக் கண்டுபிடிக்கவோ இது வரை கருவி இல்லை. இப்போது அயர்லாந்தில் உள்ள இரண்டு பேர் மன அழுத்தத்தைக் கண்டுபிடிக்கும் இயந்திரத்தைக் கண்டுபிடித்துள்ளனர். சின்ன கீ செயின் அளவு உள்ள இந்தக் கருவி, ஒருவருக்கு எவ்வளவு மன அழுத்தம் உள்ளது என்பதைச் சொல்லிவிடுமாம். இந்தக் கருவியை அழுத்தினால் உங்கள் வியர்வை, ரத்த அழுத்தத்தைவைத்து எவ்வளவு மன அழுத்தம் உள்ளது என்பதைக் கணக்கிட்டு அதை உங்களின் செல்போனுக்கு ப்ளூடூத் மூலம் அனுப்பிவிடும். அதன் மூலம் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடலாம்.

உடனே ஆதித்யா, சிரிப்பொலி பாருங்க!

அக்கம் பக்கம்

போலியோ ஆபத்து உள்ள நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியாவின் பெயரை நீக்கியுள்ளது உலக சுகாதார நிறுவனம். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பல ஆயிரம் குழந்தைகள் போலியோ பாதிப்பால் கால்களை இழந்தனர். 1985-ல் 1.5 லட்சமாக இருந்த போலியோ பாதிப்பு, 2010-ம் ஆண்டு 42 ஆகக் குறைக்கப்பட்டது. அரசின் தொடர் விழிப்பு உணர்வு நடவடிக்கைகள், போலியோ சொட்டு மருந்து அளிக்கும் நடவடிக்கையைத் தொடர்ந்து, இந்தியாவில் போலியோவால் பாதிக்கப்பட்ட குழந்தை ஒருவர்கூட இல்லை என்ற நிலையை, இந்தியா கடந்த ஆண்டு அடைந்தது. இதைத் தொடர்ந்து

அக்கம் பக்கம்

போலியோ அபாயம் உள்ள நாடுகள் பட்டியலில் இருந்து இந்தியாவின் பெயரை நீக்க வேண்டும் என்று மத்திய அரசு, உலக சுகாதார நிறுவனத்துக்குக் கோரிக்கைவிடுத்தது. இதை ஏற்றுக்கொண்ட உலக சுகாதார நிறுவனத்தின் டைரக்டர் ஜெனரல் ப்ரூஸ், இந்தியாவை இந்தப் பட்டிலில் இருந்து நீக்கியுள்ளார். அந்தக் கடிதத்தில், இந்தியா செய்துள்ளது மிகப் பெரிய சாதனை. இந்தியாவின் சாதனை உலகத்தை ஈர்த்துள்ளது என்று கூறியுள்ளார்.

போலியோ மாதிரி மற்றதையும் நீக்குங்க!

அக்கம் பக்கம்

நம்ம பூமி, இப்ப எந்த அளவுக்கு இன்னும் இன்னும் வெப்பம் ஆகிக்கிட்டே இருக்கு தெரியுமா? 'ஒவ்வொரு வினாடியும் பூமி மீது, அதிகப்படியான வெப்பம் திணிக்கப்பட்டுவருகிறது. இது ஜப்பான், ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டைப்போல, நான்கு மடங்கு அதிகம்’ என, ஆஸ்திரேலிய நாட்டு குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக விஞ்ஞானி ஜான் குக் எச்சரித்துள்ளார். 'பூமி மீது, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகப்படியான கார்பன்-டை-ஆக்சைடு வாயுவின் அடர்த்தி அதிகரித்திருக்கிறது. இதனாலேயே பூமியில் அதிகப்படியான வெப்பம் ஏற்படுகிறது. இன்னும் சில ஆண்டுகளுக்கு இதே நிலைத் தொடர்ந்தால், பேரிழப்புகள் நிச்சயம். இந்த அதிகப்படியான வெப்பத்தின் 90 சதவிகிதம் கடலுக்குள்தான் செல்கிறது. இதனால், நிலங்கள், பனி மலைகள் மற்றும் விலங்கினங்கள் ஆகியவற்றின் மீதும் கடுமையான தாக்கம் ஏற்படும்’ என்று எச்சரிக்கிறார்.

மரம் வளருங்க... போதும்!

அக்கம் பக்கம்
அக்கம் பக்கம்

சுற்றுச்சூழலைக் கெடுக்கிறவர்களுக்கு மரண தண்டனை அளிக்கலாம்! இதைப் படிக்கும்போது எப்படி இருக்கு உங்களுக்கு? இந்த உத்தரவு சீனாவில். சீனாவின் முக்கியமான நகரங்களில், தொழிற்சாலை மற்றும் வாகனப் புகையால் சுத்தமானக் காற்றை சுவாசிக்கவே முடியாத நிலை. எனவே, இந்த விஷயத்தில் சீன அரசு, கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கியது. அந்த வகையில், 'சுற்றுச்சூழல் விஷயத்தில் அக்கறை காட்டாத, இருக்கும் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு நீதிமன்றங்கள் மரண தண்டனை வழங்கலாம்; தயக்கமே வேண்டாம்’ என சீன அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

இங்கேயும் அப்படி சட்டம் கொண்டுவந்தால்தான், திருந்துவோமோ?

அக்கம் பக்கம்
அக்கம் பக்கம்

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் டயானா தம்பதியின் மூத்த மகன் வில்லியமுக்கும் கேத் மிடில்டனுக்கும் கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடந்தது. தற்போது கேத் மிடில்டன் கர்ப்பமாக இருக்கிறார். இவருக்கு அடுத்த மாதம் குழந்தை பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு பிறக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதுகுறித்து சூதாட்டமும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இளவரசி கேத் மிடில்டனுக்கு, அவரது கணவர் இளவரசர் வில்லியம் பிறந்த தனியார் மருத்துவமனையில் பிரசவம் நடத்த அரச குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர். இந்த மருத்துவமனையின் பெயர் லிங்டோ விங் ஆப் செயின்ட் மேரீஸ். இங்குதான் இளவரசர் சார்லஸும், அவரது மகன்கள் வில்லியம் மற்றும் ஹாரியும் பிறந்தனர். இளவரசி கேத் மிடில்டன் சிசேரியன் மூலம் குழந்தைபெற விரும்பவில்லை. இயற்கையான முறையில் குழந்தை பெறவே விரும்புகிறாராம். இதனால் சுகப்பிரசவம் நடக்க மருத்துவர்கள் அவரைத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

அந்த ஆஸ்பத்திரி ரிப்ஷனிஸ்ட் எல்லாம் ரிசைன் பண்ணிருப்பாங்களே!

அக்கம் பக்கம்
அக்கம் பக்கம்

பிரிட்டனைச் சேர்ந்த பெண் சூ ஆஸ்டின். 16 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட மர்மக் காய்ச்சலில் தன் இரண்டு கால்களையும் இழந்தவர். ஒரு பிரத்யேக சக்கர நாற்காலியை வடிவமைத்து அதன் மூலம் கடலில் நீந்தி சாதனைப் படைத்துள்ளார் ஆஸ்டின். இவர் தயாரித்த இந்த நாற்காலியில், விசேஷ காஸ் நிரப்பிய உருளைகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் கால்களின் உதவி இல்லாமலேயே நீந்த முடிகிறது. 'இந்த நாற்காலியின் மூலம், 360 டிகிரி கோணத்தில் என்னால் சுழல முடிகிறது. இதனால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்; தரையில் இருப்பதைவிட தண்ணீரில் இருப்பதையே நான் அதிகம் விரும்புகிறேன்’ என்கிறார் ஆஸ்டின் உற்சாகமாக.

'தண்ணி’ கன்னி!

அக்கம் பக்கம்

இளம் தம்பதிகள் சமூக வலைத்தளங்களில் அதிக நேரத்தை செலவிட்டால், அவர்கள் வாழ்க்கை பாதிக்கப்படும் எனப் புதிய ஆய்வு கூறுகிறது. அமெரிக்காவின் மிசௌரி பல்கலைகழகத்தில் ஸ்கூல் ஆப் ஜர்னலிஸம் பயிலும் ஆய்வு மாணவர் ரஸ்ஸல் கிளேட்டனும், ஹவாய் மற்றும் செயின்ட் மேரீஸ் பல்கலைக்கழக மாணவர்களும் சேர்ந்து ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வு ஃபேஸ்புக் பயன்படுத்தும் 18 முதல் 82 வயது வரை உள்ளவர்களிடம் மேற்கொள்ளப்பட்டது. அவர்களிடம், எத்தனை நாளைக்கு ஒருமுறை ஃபேஸ்புக்கைப் பயன்படுத்துவீர்கள், எவ்வளவு நேரம் பயன்படுத்துவீர்கள், ஃபேஸ்புக்கைப் பயன்படுத்துவதால் வாழ்க்கைத் துணைவரோடு என்னென்ன பிரச்னைகள் உருவாகின என்பது குறித்து பல கேள்விகள் கேட்கப்பட்டன. ஆய்வு முடிவு குறித்து கிளேட்டன் கூறுகையில், பெரும்பாலானவர்கள் தங்களுக்குப் பிடித்தமானவர்களோடு தொடர்புகொள்வதற்குத்தான் ஃபேஸ்புக்கை அதிகம் பயன்படுத்துகின்றனர். இதில் பலர் தங்களது முன்னாள் துணையின் நட்பைத் தொடரவும் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. இதனால் பலரும் தங்களது துணையின் ஃபேஸ்புக்கைக் கண்காணிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இது அவர்களிடையே உள்ள நம்பகத்தன்மையைக் குறைப்பதோடு, பழைய நட்பு குறித்த சர்ச்சைக்கும் காரணமாகின்றதாம்.

ஃபேஸ்புக்... கேர்ஃபுல்!

அக்கம் பக்கம்

லண்டனில் வருகிற ஜூலை மாதம் 7ம் தேதி உலகப் புகழ்பெற்ற 'விம்பிள்டன்’ ஆடவர் ஒற்றையர் போட்டி கிராண்ட் சென்டர் கோர்ட்டில் நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டியில் டாஸ் போடும் வாய்ப்பு, இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமி பிங்கிக்குக் கிடைத்துள்ளது. இந்தச் சிறுமி பிறந்தபோது மேல் உதடு சற்று கோணலாக இருந்தது. அதனை சீரமைப்பதற்காக நான்கு வயதில் அவருக்கு ஒரு சிகிச்சை நடந்தது. அந்த சிகிச்சையை குறும்பட இயக்குனர் மேகன் மைலன் படம் பிடித்திருந்தார். பிங்கி தனது சக வயதுக் குழந்தைகளின் மத்தியில் கிண்டல் மற்றும் கேலிக்குள்ளாவதையும், பின்பு ஒரு தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் சிகிச்சைசெய்து சராசரி சிறுமியாக மாறியதையும் என 'ஸ்மைல் பிங்கி’ என்ற தலைப்பில் குறும்படம் ஓன்றை உருவாக்கினார். இந்தக் குறும்படம் அகாடமி விருதினை வென்றதன் மூலம் பிங்கிக்கு நட்சத்திரத் தகுதி கிடைத்தது. தன்னம்பிக்கைக்குக் கிடைக்கும் அங்கீகாரம் இது!

பிங்கி முகத்தில் பூரிப்பு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism