Published:Updated:

மீசைக்கு ஆசையா?!

மீசைக்கு ஆசையா?!

மீசைக்கு ஆசையா?!

மீசைக்கு ஆசையா?!

Published:Updated:
##~##

''அருவா மீசை கொடுவாப் பார்வை' - தமிழனுக்கே உரிய பிம்பம். முரட்டு மீசை இருந்தால்தான் சிறந்த வீர ஆண் மகன் என இன்னும் பல கிராமங்களில் நம்பப்படுகிறது. 'சிங்கம்’ பட சூர்யா ஸ்டைலில் மீசையை 'ஷேப்’ செய்யும் இளைஞர்கள் ஒரு பக்கம் என்றால்... இன்னும் சிலர் 'மொழுமொழு’ பாலிவுட் 'கான்’கள் ஸ்டைலுக்கு மாறிக்கொண்டிருக்கின்றனர். 

ஆனால், சிலருக்கு முறுக்கு மீசை வைக்க வேண்டும் என்ற ஆசை இருந்தும், ஒரு முடிகூட வளராமல் இருக்கும். இதனால், பலரது ஏளனத்துக்கு ஆளாக நேரிடும். ஒருவருக்கு மீசை, தாடி வளராததற்கு என்ன காரணம்? என திருச்சியைச் சேர்ந்த நாளமில்லாச் சுரப்பியல் நிபுணர் ஸ்ரீராம் மகாதேவனிடம்  கேட்டோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மீசைக்கு ஆசையா?!

''பூப்படைதல் என்பது பெண்களுக்கு மட்டும் இல்லை ஆண்களுக்கும்தான். ஆனால் ஆண்கள் பூப்படைவதை ஆரம்பத்தில் யாரும் பெரிதாகக் கண்டுகொள்ள மாட்டோம். பொதுவாக, ஆண்களுக்குக் குரல் மாறுவது, அரும்பு மீசை வளர்வது மட்டுமே பூப்படைந்ததற்கான அறிகுறிகள் கிடையாது. விரை என்று சொல்லப்படும் 'tமீstவீs’ அளவைவைத்தே ஒரு ஆண்மகன் பூப்படைந்தாரா, இல்லையா எனக் கண்டுபிடிக்க இயலும். ஆர்கிடோமீட்டர் என்னும் இயந்திரத்தின் உதவியுடன்தான் விரையின் அளவைக் கண்டுபிடிக்க இயலும். இந்த விரையில் இருந்து சுரக்கும் டெஸ்டோஸ்டிரோன் என்ற ஹார்மோன்தான் முடியின் வளர்ச்சிக்குத் துணைபுரிகின்றன. இந்த ஹார்மோன் நன்றாகச் சுரக்க, கொழுப்புச் சத்து மிகவும் அவசியம்.

மீசைக்கு ஆசையா?!

உடலில் உள்ள முடியின் வேர்கள் அனைத்திற்கும் ஒரு பூட்டு இருக்கும். இந்தப் பூட்டைத் திறந்தால்தான், முடி வெளியே வரும். இந்தப் பூட்டைத் திறக்கும் சாவிதான், டெஸ்டோஸ்டீரான் என்ற ஹார்மோன். இந்த ஹார்மோன் ரத்தத்தில் கலந்து வேரில் இருந்து முடியை வளரச் செய்கிறது. ஒருவருக்கு மீசை, தாடி வளரவில்லை என்றால் அவருக்கு டெஸ்டோஸ்டீரான் அளவு குறைவாக

மீசைக்கு ஆசையா?!

இருக்கும் அல்லது வேரில் உள்ள ஓட்டைத் திறக்கப்படாமல் இருக்கலாம். இதனைக் கண்டுபிடிக்க ரத்தப் பரிசோதனை மூலம் ஹார்மோனைப் பரிசோதனை செய்ய வேண்டும்.

ஹார்மோன் சரியாக சுரக்கவில்லை என்றால், அந்த நபர் எவ்வளவு வயதானாலும் உடலின் மார்பு, அக்குள், முகம் என எந்த இடத்திலும் முடி வளராது. தவிர, அவருக்கு விரையின் அளவு சிறியதாக இருக்கும்.  இப்படி, ஹார்மோன் பிரச்னை பண்ணுவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.

1. விரையில் அடிபடுதல், அடிபட்டு வீங்கிப்போதல், விரையில் வேறு ஏதேனும் பிரச்னை உண்டாகுதல் போன்றவை.

2.  பிட்யூட்டரி சுரப்பியில் சுரக்கும் LH, FSH ஹார்மோன் அளவு குறைந்து காணப்படும்.

இந்தப் பிரச்னைகளுக்கு சுலபமாக தீர்வு காண, நல்ல மருத்துவரை அணுகவும். ரத்தம் மற்றும் தேவையான பரிசோதனைகளைச் செய்து கொள்ளவேண்டும்.  பரிசோதனைகளின் முடிவுகளுக்கு ஏற்ப மருத்துவர்களின் அறிவுரைகளின்பேரில் ஊசி மற்றும் மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம்.  

இந்த ஹார்மோன் பிரச்னை காரணமாக, ஒரு ஆண், தாம்பத்திய வாழ்க்கைக்கு தகுதி அற்றவனாக இருந்தாலும், அதற்கான ஹார்மோன் சுரக்கும் ஊசிகளைச் செலுத்தி சுரக்கவைக்கலாம். ஆனால் ஓர் ஆணுக்கு எல்லா ஆண் தன்மையும் இருந்து முகத்தில் மீசை, தாடி வளரவில்லை என்றால், அந்த இடங்களில் உள்ள முடியின் வேர்களில் உள்ள பூட்டை, டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் திறக்க முடியாத அளவுக்கு இருக்கிறது என்று அர்த்தம்.  இதை மீறி முடி வளரவைப்பது  தற்போது சாத்தியம் இல்லாதது. வீணாகப் போலியான விளம்பரங்களைக் கண்டு ஏமாற வேண்டாம். இந்தப் பிரச்னை உள்ளவர்கள் ஒரு நல்ல மருத்துவரிடம் கவுன்சிலிங் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

சிறு வயதில் முறையான கொழுப்புச் சத்து தேவையான அளவுக்கு கிடைத்தாலே, இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாது. மீசை, தாடியினால் ஆண் தன்மை சிறிதளவும் பாதிக்கப்படாது. அதனால், இந்தப் பிரச்னையை ஸ்போர்ட்டிவ் ஆக எடுத்துக்கொண்டு, ஹிந்தி நடிகர்கள் ஷாருக்கான், சல்மான்கான் மாதிரி ட்ரெண்டியாக மாறிவிடலாம்.'' என்றார்.

- பி. விவேக் ஆனந்த்

படங்கள்: தே.தீட்ஷித்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism