Published:Updated:

அழகைக்கூட்டும் ஆரஞ்சு தோல்!

அழகைக்கூட்டும் ஆரஞ்சு தோல்!

அழகைக்கூட்டும் ஆரஞ்சு தோல்!

அழகைக்கூட்டும் ஆரஞ்சு தோல்!

Published:Updated:
அழகைக்கூட்டும் ஆரஞ்சு தோல்!

'அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ - வாட்டி எடுத்த கோடை வெயிலிலால் நம் சருமம் பெரும் பாதிப்புக்குள்ளாகும். அதை அப்படியே விட்டுவிட்டால், சீக்கிரத்திலேயே சருமத்தில் சுருக்கங்கள் விழுந்து வயோதிகத் தோற்றத்தைத் தந்துவிடும்.

''கருத்து, களை இழந்துபோயிருக்கும் சருமத்தை மீட்டெடுக்க, இயற்கை தந்த வரமாய் இல்லத்தில் இருக்கும் பொருட்களைவைத்து பொலிவுறச் செய்யலாம்'' என்கிறார் காரைக்குடி சித்த மருத்துவர் பாலசுப்ரமணியன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தக்காளி

அழகைக்கூட்டும் ஆரஞ்சு தோல்!

தக்காளியில் லைக்கோபின், வைட்டமின் ஏ மற்றும் சி இருக்கின்றன. சூரிய ஒளியிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்களினால் ஏற்பட்ட பாதிப்பைப் போக்கும். கண்ணைச் சுற்றி உள்ள கருவளையத்தைப் போக்கும். சரும நோய்கள் வராமலும் பாதுகாக்கும். குளிப்பதற்கு முன் தக்காளியை அரைத்து முகம், கை, கால்களில் தடவி 15 நிமிடங்கள் காயவைத்து, பிறகு கழுவ வேண்டும்.  

எலுமிச்சை

இதில் இருக்கும் வைட்டமின் சி, சரும செல்களின் வளர்ச்சியையும் ஊக்குவிக்கும். முகத்தில் உள்ள சுருக்கங்களை மறையச்செய்யும். எண்ணெய் சருமத்தினர்களுக்கு, எலுமிச்சை மிகச் சிறந்தது. எலுமிச்சைச் சாறில் சிறிது சர்க்கரை கலந்து முகத்தில் தடவிவர, முகத் தோலின் மேல் கருப்பு அடுக்கினை நீக்கி முகத்தைப் பிரகாசமடையச் செய்யும். வெள்ளரிப் பிஞ்சை அரைத்து எலுமிச்சைச் சாறுடன் கலந்து முகத்தில் தடவி 10 நிமிடங்கள் காயவைத்து, பிறகு கழுவலாம்.

பாதாம்

ஒமேகா-3, ஃபேட்டி ஆசிட் மற்றும் லினோலைக் ஆசிட் இதில் இருக்கின்றன. இது தோலில் உள்ள இறந்த செல்களை நீக்கி, சுத்தமாக்குவதுடன் முகத்தைப் பொலிவடையச் செய்யும். தினமும் ஒரு பாதாம் பருப்பின் தோலை நீக்கி, அரைத்து பாலில் கலந்து முகத்தில் பூசி, காய்ந்ததும் கழுவலாம்.  

கற்றாழை

அழகைக்கூட்டும் ஆரஞ்சு தோல்!

வைட்டமின் ஏ மற்றும் சி இதில் உள்ளது. முகத்தில் உள்ள பருக்கள் நீங்குவதுடன், அதிகமான எண்ணெய் பசையையும் போக்கும். சூரிய ஒளியின் கடும் வெப்பத்தினால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கும். சருமத்தில் ஈரத் தன்மையைத் தக்கவைத்து, நிறத்தையும் கூட்டும். கற்றாழை ஜெல்லுடன், பயத்தமாவு, கஸ்தூரி மஞ்சள் சேர்த்து முகத்தில் பூசி, சிறிது நேரம் கழித்துக் கழுவ வேண்டும்.

துளசி

மிகச் சிறந்த கிருமிநாசினி. சருமத்தை தோல் நோயிலிருந்து பாதுகாக்கும். இதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து முகத்தில் உள்ள பருக்கள் மற்றும் கரும்புள்ளிகளின் மீது தடவவேண்டும். உடனடியாக நல்ல பலன் கிடைக்கும்.

கேரட்

அழகைக்கூட்டும் ஆரஞ்சு தோல்!

பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் ஏ இருப்பதால், சருமப் பிரச்னையைச் சரிசெய்து பளிச்சென வைத்திருக்கும். ரத்தத்தில் உள்ள டாக்ஸின்களை நீக்கி பருக்கள் வருவதைத் தடுக்கும். இரண்டு கேரட்டுகளை வேகவைத்து அரைத்து அதனுடன் ஒரு ஸ்பூன் தேன், ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் மற்றும் இரண்டு ஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்த்து கலந்து முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் காயவைத்துக் கழுவ வேண்டும். தொடர்ந்து 15 நாட்கள் செய்ய வேண்டும்.

பப்பாளி

'பப்பாய்ன்’ என்கிற தாதுப் பொருள், சரும செல் வளர்ச்சிக்கு உதவும் இயற்கை என்சைம்கள் பப்பாளியில் இருப்பதால், சருமம் புத்துணர்ச்சி அடையும். சருமத்தில் புதிய செல்களை உருவாக்க உதவும். பப்பாளிக் கூழை மருக்களின் மீது தடவிவர, மருக்கள் உதிர்ந்துவிடும். முரட்டுத் தோலை மிருதுவாக்கும். ஈரப்பதத்தைத் தக்கவைக்கும்.

ஆரஞ்சு தோல்

அழகைக்கூட்டும் ஆரஞ்சு தோல்!

ஆரஞ்சுப் பழத்தோலில் அதிக அளவு தாவர ஊட்டச் சத்துகள் மற்றும் ஃப்ளேவனாய்டுகள் உள்ளன. தூசுகளால் ஏற்பட்ட பொலிவிழப்பை மீட்டுத் தரும். பருக்களால் உண்டான தழும்பும் மறைந்துவிடும். ஆரஞ்சுத் தோலினை சூரிய ஒளியில் காயவைத்து அரைத்து வைத்துக்கொள்ள«வண்டும்.  இந்தப் பொடியில் சந்தனம் கலந்து சிறிது தயிர் சேர்த்து, வாரம் ஒரு முறை முகத்தில் தடவி 10 நிமிடம் காயவைத்து கழுவிவர வேண்டும்.

- சு. ராம்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism