Published:Updated:

நலம், நலம் அறிய ஆவல்!

நலம், நலம் அறிய ஆவல்!

நலம், நலம் அறிய ஆவல்!

நலம், நலம் அறிய ஆவல்!

Published:Updated:
நலம், நலம் அறிய ஆவல்!
##~##

''40 வயதைக் கடந்துவிட்டால், உடல் திசுக்களில் தேய்மானம் தொடங்கிவிடுகிறது. 50 வயதைத் தொடும்போது, முதுமையின் ஆரம்பக்கட்டத்துக்குள் அடியெடுத்துவைக்கிறோம். ஆனால், 60 வயதுக்குப் பிறகுதான் முதுமை ஆரம்பிக்கிறது என்ற எண்ணத்தோடு, முதுமையை வரவேற்பதற்கான முன்னேற்பாடுகளை எதிர்கொள்ளத் தவறிவிடுகிறோம். முதுமையைத் தவிர்க்க முடியாது, ஆனால், முதுமையில் ஏற்படக்கூடிய பிரச்னைகளைத் தவிர்க்க முடியும். 45 வயதில் இருந்தே திட்டமிட ஆரம்பித்தால், வயதான காலத்தில் மகிழ்ச்சியாக வாழ முடியும்'' என்கிறார் முதியோர் நல சிறப்பு மருத்துவர் என்.லட்சுமிபதி ரமேஷ். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''எல்லோருக்கும் ஒரே மாதிரியான சிகிச்சை அளிக்க முடியாது. குழந்தைகளுக்கு ஒரு மாதிரியான உடல் அமைப்பும், வளர்ந்தவர்களுக்கு ஒரு மாதிரியான உடல் அமைப்பும் இருக்கும். முதுமை அடையும்போது உடலில் பல்வேறு மாற்றங்கள் நடந்திருக்கும். அதனால்தான் அவர்களுக்கு சிறப்பு மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது. 'வயதாகிவிட்டது அதனால் மூட்டுவலி, மூச்சு வாங்குதல், இதய நோய்கள் வந்துவிட்டது’ என்று அசட்டையாக இருந்துவிடக் கூடாது. மருத்துவத் தொழில்நுட்பமும் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே இருக்கிறது. அதனால் உடல்ரீதியான பிரச்னைகளை நிச்சயம்

நலம், நலம் அறிய ஆவல்!

சரிசெய்ய முடியும்'' என்கிற டாக்டர் லட்சுமிபதி ரமேஷ்,

டாக்டர் விகடனின் 'நலம், நலம் அறிய ஆவல்!’ பகுதியில் ஜூலை 1 முதல் 15-ம் தேதி வரை தினந்தோறும் முதுமையை மகிழ்ச்சியாக எதிர்கொள்வது எப்படி, முதுமையில் முன்னெச்சரிக்கையாக வாழ்வது எப்படி என்று விரிவாகப் பேசுகிறார்.

''நம்முடைய வீட்டில் பெரியவர்கள் தூக்கம் வராமல் அவதிப்படுவதைப் பார்ப்போம். தூக்கம் வரவில்லையா? உடனடியாக தூக்க மாத்திரை வாங்கு என்பதுதான் அவர்களுக்குத் தெரிந்த ஒரே தீர்வு. சில நாட்கள் கழித்து தூக்க மாத்திரை போட்டும் தூக்கம் வராமல் அவதிப்படுவார்கள். பிறகு, தொடர்ந்து அதிக அளவில் தூக்க மாத்திரைகள் பயன்படுத்த ஆரம்பிப்பார்கள்.  குழந்தையாக இருக்கும்போது, நீண்ட நேரம் தூங்குவோம். பெரியவர்களானதும் அது எட்டு மணி நேரமாக சுருங்கும். முதுமையில் தூங்கும் அளவும், தூக்கத்தின் தரமும் குறைவது வழக்கம்தான். இதை முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். இரவில் நல்ல தூக்கம் வர, தினமும் குறித்த நேரத்துக்கு படுக்கைக்குச் சென்றுவிட வேண்டும். காலையில் எழுந்த பிறகு, மீண்டும் இரவு தூங்கச் செல்லும் வரை படுக்கைக்குச் செல்ல வேண்டாம். அதற்குப் பதில் உடலுக்கும் மூளைக்கும் வேலை கொடுத்தால், எப்போது தூங்கச் செல்வோம் என்ற எண்ணம் மனதில் தோன்றும். குறிப்பிட்ட நேரத்தில் படுக்கைக்குச் செல்லும்போது போதுமான, தரமான தூக்கம் வரும். தினமும் வெயில்படும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் தூக்கத்தைத் தரும் மெலடோனின் என்ற ஹார்மோன் சரியாக சுரக்கும்'' என்று தூக்கத்துக்கு வழி சொல்கிறார் டாக்டர்.

''அதேபோல முதுமையில் ஏற்படும் மற்றொரு முக்கிய பிரச்னை, மறதிநோய். மறதிநோய் என்பது 50 வயதில் இருந்து ஆரம்பிக்கிறது. இந்த நோய் வருவதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. முக்கியமாக, மனதை ஆரோக்கியமாகவும் கவலை, வருத்தம் இன்றிப் பார்த்துக்கொண்டாலே மனரீதியான பிரச்னைகளைத் தவிர்க்கலாம். முதுமை என்பது மனதுக்கு இல்லை என்று எண்ண வேண்டும். புதுப்புது விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். புத்தகத்தைப் படிப்பது மட்டும் போதாது. அதுபற்றி சிந்திக்க வேண்டும். அப்போது மூளையின் செயல்திறன் அதிகரிக்கும். சுடோகு, வார்த்தை விளையாட்டு போன்ற மூளைக்குப் பயிற்சி அளிக்கக்கூடிய விளையாட்டுக்களில் ஈடுபட்டால், 'டிமென்ஷியா’ போன்ற மறதி நோய்கள் வராமல் தடுக்க முடியும்'' என்கிறார் டாக்டர் லட்சுமிபதி.

- பா.பிரவீன்குமார்

படம்: ஜெ.வேங்கடராஜ்

நலம், நலம் அறிய ஆவல்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism