தமிழக அரசு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், பிறவி செவித்திறன் பாதிப்புள்ள குழந்தைகளுக்கு ஏழரை லட்சம் மதிப்பிலான செயற்கை காதுகேட்கும் கருவி (காக்ளியர் இம்பிளான்ட்) இலவசமாகப் பொருத்தப்படுகிறது. இதற்காக செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளைக் கண்டறிந்து, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணிகள் நடந்துவருகின்றன. சமீபத்தில், நெல்லை அருகே உள்ள மானூரில் 12 குழந்தைகளுக்கு பிறவிக் காது கேளாமைக் குறைபாடு இருப்பதாகத் தெரியவர, மருத்துவர் குழு அந்தப் பகுதியில் மருத்துவ முகாம் நடத்திப் பரிசோதித்தது. அந்த 12 குழந்தைகளுக்கும் இலவசமாக சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் நடக்கின்றன.

10 குழந்தைகளை மட்டும் அவர்களின் பெற்றோர் அழைத்துவந்திருந்தனர். 'இரண்டு குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு அந்த குழந்தைகளின் பாட்டி ஒப்புக்கொள்ளவில்லை, அதனால் வரவில்லை’ என்று கிராம நிர்வாக அலுவலர் தெரிவித்தார். 'குழந்தைக்குக் காது கேட்காதது கடவுளோட சித்தம். அதையும் மீறி காது கேட்கவைச்சா, அது தெய்வக் குத்தம் ஆகிடும். அதனால் ஆபரேஷன் வேண்டாம்’ என்றனராம். காது மூக்கு தொண்டை அறுவைசிகிச்சை நிபுணர் மோகன் காமேஷ்வரன் நேரில் சென்று, அந்த குழந்தைகளின் பெற்றோரிடம் பேசி சிகிச்சைக்கு அழைத்துவர சம்மதம் பெற்றுள்ளார்.

'தமிழகத்தில் காது கேளாத பல குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கிறது. முதியவர்களின் தவறான நம்பிக்கை, பயம்தான் இதற்குக் காரணம். செயற்கை காது கேட்கும் கருவி பொருத்திக்கொண்டு, கேட்கும் திறன் பெற்று, இதனால் பேச்சும் வந்து இன்று ஐஐடியில் படிப்பவர்கள், அயல் நாடுகளில் வேலை செய்பவர்கள் நிறையப் பேர். செயற்கைக் காது கேட்கும் கருவி

பொருத்தப்பட்டதா என்பதுகூட தெரியாத அளவுக்கு இவர்கள் சரளமாகப் பேசவும், மற்றவர்களுடன் உடனுக்குடன் உரையாடவும் முடியும். இதையெல்லாம் எடுத்துச்சொல்லி குழந்தையின் எதிர்காலத்தை பாழாக்கிவிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதற்குப் பிறகு தான், அந்த குழந்தைகளின் பெற்றோர் சிகிச்சைக்கு ஒப்புக்கொண்டனர்.

உலக அளவில் பிறவி செவித்திறன் குறைபாடு என்பது ஆயிரத்துக்கு ஒன்று என்ற அளவில் உள்ளது. இந்தியாவில் இது ஆயிரத்துக்கு இரண்டு என்று உள்ளது. ஆனால், தமிழகத்தில் மட்டும் இந்திய சராசரியைக் காட்டிலும் இது இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது. 10 ஆண்டுகளாக நாங்கள் தமிழகத்தில் தொடர்ந்து மருத்துவ முகாம்கள் நடத்தியதில், எங்கள் ஆய்வின்படி, பிறக்கும் ஆயிரம் குழந்தைகளில் ஆறு குழந்தைகளுக்கு பிறவியிலேயே செவித்திறன் குறைபாடு உள்ளது. இதற்கு 66 சதவிகிதம் நெருங்கிய உறவுமுறைகளுக்குள் திருமணம் செய்வதுதான் முக்கியக் காரணம். குழந்தை செவித்திறன் குறைபாடுடன் பிறந்துள்ளதா என்பதைப் பிறந்தவுடன் கண்டறிந்து அவர்களுக்கு செயற்கைக் கருவி பொருத்தி சிகிச்சை அளிக்கும்போது பலன் நன்றாக இருக்கும். இதற்கான நவீனக் கருவிகள் இங்கேயே உள்ளன. ஏதேனும் குறைபாடு இருந்தால், அதை சரிப்படுத்தலாம். இதனால் குழந்தையின் கேட்கும் திறன் மிக விரைவாக அதிகரிக்கும். மற்ற குழந்தைகளைப்போல இந்தக் குழந்தைகளும் பள்ளிக்கு செல்வதில் தொடங்கி, அனைத்தையும் செய்ய முடியும். தாமதமாக ஆக, அந்த குழந்தை மொழித்திறன் மற்றும் பேச்சுத்திறன் கற்பது சிரமமாக இருக்கும்.

குழந்தை மெதுவாக பேச ஆரம்பிக்கும் என்று காத்திருக்காமல், 'குழந்தைக்கு காது கேட்பதில் ஏதேனும் பிரச்னை இருக்குமோ?’ என்ற சந்தேகம் தோன்றினால், உடனே தகுந்த மருத்துவரை அணுகுவதுதான் பிறவி செவித்திறன் குறைபாடு பிரச்னையைச் சரிசெய்யும் வழி' என்றார்.

- பா.பிரவீன்குமார்

பிறவி செவித்திறன் குறைபாட்டுக்குக் காரணம்

நெருங்கிய உறவுமுறையில் திருமணம்

கர்ப்பகாலத்தில் ஏற்படும் ருபெல்லா நோய்த்தொற்று

சைடோமெகலோ வைரஸ் தொற்று

கர்ப்ப கால சர்க்கரை நோய்

உயர் ரத்த அழுத்தம்

குறைப்பிரசவம்

எடை குறைவாக குழந்தை பிறப்பது

குழந்தைகளுக்கு வரும் மஞ்சள்காமாலை

குழந்தை வயிற்றில் இருக்கும்போதோ அல்லது பிறந்த பிறகோ ஏற்படும் தொற்று நோய்கள்