Published:Updated:

பழங்களே 'பளிச்' முகத்துக்கு காரணம்!

நஸ்ரியாவின் அழகு சீக்ரெட்ஸ்

##~##

''நல்ல 'நேரம்’ வந்தாச்சு... நஸ்ரியாவுக்கு நல்ல நேரம் வந்தாச்சு' என்றதும் மின்னல் போல் முகத்தில் புன்னகை பூக்கிறது. அழகும் ஆரோக்கியம் ததும்பும் நஸ்ரியா நசீமின் அழகு ரகசியம் இதோ... 

''நஸ்ரியான்னா 'பிரகாசமானவள்’னு அர்த்தம். என் பேருக்குப் பொருத்தமா இருக்க வேண்டாமா. நான் இயற்கையை ரொம்ப நேசிப்பேன். கெமிக்கல் கலந்த மேக்கப் போடுவது பிடிக்காது. சினிமாவுக்காகக்கூட அதிகமா மேக்கப் போட்டுக்க மாட்டேன். மாய்ஸ்ச்சரைசரை மட்டும்தான் பயன்படுத்துவேன். மற்றபடி தேவையில்லாத எந்த கிரீமுக்கும் என் முகத்தில் இடம் இல்லை. பப்பாளி, கொய்யா, மாம்பழம், சப்போட்டா, தக்காளினு பழங்களை வைத்து வாரம் ஒருமுறை முகத்துக்கு பேக் போடுவேன். தேன் நம் தோலுக்கு ரொம்பவே நல்லது. ஒரு ஸ்பூன் தேனோட பயத்தமாவு கலந்து முகத்துக்கு அப்ளை பண்ணுவேன். தினமும் காலையில் ஒரு ஸ்பூன் தேன் குடிப்பேன்.  10 நிமிஷம் கண் மேல் வெள்ளரிக்காய் துண்டுகளை வைச்சுப்பேன். இதெல்லாமே என் முகத்தை இன்னும் அழகாக்குது. இயற்கையான அழகுதான் நிலைச்சு இருக்கும்.''

''உங்களோட சிரிப்பு ரொம்ப பளிச்சுன்னு இருக்கே...''

பழங்களே 'பளிச்' முகத்துக்கு காரணம்!

''ரொம்ப தேங்க்ஸ். சிரிப்புக்குப் பின்னால் இருக்கும் பல்லும் அழகா இருக்கணும்தானே. தினமும் ரெண்டு வேளை பல் தேய்ப்பேன்.  ஸ்வீட் சாப்பிட்டா, உடனே மவுத் வாஷ் பண்ணிடுவேன். பொதுவா சாப்பாடு, சாப்பிட்டதும் வாயை ஒழுங்கா சுத்தம் பண்ணாலே, பாதிப் பிரச்னை தீர்ந்திடும். இதுவரை பல் வலினு டெண்டிஸ்ட்கிட்ட போனதில்லை. உதட்டில் உலர் திராட்சையை நசுக்கி, பாலில் தொட்டு உதட்டின் மேலே பூசுவேன். உதடு எப்பவும் நிறமாவும் ஈரப்பதத்துடனும் இருக்கும்.''

''தலைமுடிக்குன்னு ஏதாவது தனிக் கவனம்?''

''நோ ஸ்பெஷல் கேர். அடிக்கடி வெளியூர் போறதால், தலையில் அழுக்கு, தூசி எல்லாமே படிஞ்சிடும். அதனால், தினமும் தலைக்குக் குளிப்பேன். மைல்டு ஷாம்பூ யூஸ் பண்ணுவேன். தலையைத் துவட்டாமவிட்டாலே அழுக்கு படிய ஆரம்பிச்சிடும். குளிச்சதும், தலையை நல்லாக் காயவைப்பேன். அப்படியே கையால் தலைமுடியைக் கோதிவிடும்போது, தலைக்கும் ஒரு மசாஜ் பண்ணின எஃபெக்ட் கிடைக்கும். முடியும் உதிராமல் இருக்கும். இது பாட்டிங்க காலத்து ஹேர் டிப்ஸ்!''

''ஸ்லிம் ரகசியத்தைச் சொல்லுங்க ப்ளீஸ்?''

''நான் இப்பத்தானே நடிகை. அதுக்கு முன்னால, ஒரு சாதாரணப் பெண். அதை இப்பவும் அப்படியே தொடர விரும்புறேன். பால், காபி, டீ, தயிர், மோர், லஸ்ஸி இதெல்லாம் எனக்கு சுத்தமாப் பிடிக்காது.

காலையில் சிம்பிள் ப்ரேக்ஃபாஸ்ட். சப்பாத்தி அல்லது தோசை இரண்டு. மதியம் மறுபடியும் சப்பாத்தி கொஞ்சம் ரைஸ், ஏதாவது காய்கறி, இல்லைன்னா சிக்கன். அப்பறம் ராத்திரி டிஃபன். இடையில் பசிச்சா ஜூஸ், சாலட்ஸ் சாப்பிடுவேன். எனக்கு பானி பூரி ரொம்பப் பிடிக்கும். எப்பவாவது சாப்பிடுவேன். வெயிட் போட்டுவிடுமோங்கிற பயத்தில் நொறுக்குத்தீனிக்கு இப்போதைக்கு நோ சொல்லிட்டேன்.''  

''ஜிம் போறதுண்டா?''

''இது வரைக்கும் இல்லை. ஆனால், ஃபிட்னெஸ் பத்தின தெளிவு இருக்கு. நிச்சயம் உடற்பயிற்சி செஞ்சே ஆகணும்கிற எண்ணம் இருக்கு. தினமும் முறைப்படி பயிற்சி எடுத்தால், உடம்புக்குத் தேவையான ஸ்டாமினா கிடைக்கும். கூடிய சீக்கிரம் செய்வேன். இப்போதைக்கு என் எய்ம் இருக்கிற வெயிட்டைத் தக்கவைக்கிறதுதான்.''

பழங்களே 'பளிச்' முகத்துக்கு காரணம்!

''நீங்க எப்படிப்பட்ட பெர்சனாலிட்டி?''

''நான் ரொம்ப கலகல டைப்.  பொய் சொல்றது பிடிக்காது. எதையும் தைரியமா எதிர்கொள்வதும், முகத்துக்கு நேராப் பேசிடறதும் நல்லது. கொஞ்சம் செஃல்ப் கான்பிஃடன்ஸ் அதிகம். அதுவே பாசிடிவ்வான மனநிலை தரும். நடப்பதெல்லாம் நன்மைக்கே டைப் நான்!''

- உமா ஷக்தி 

நஸ்ரியாவின் ஹெல்த் டிப்ஸ்:

 எப்பவும் கலகலப்பா இருங்க.  நிறைய நண்பர்கள் உங்களைத் தேடி வருவாங்க.

 எப்பவும் இறுக்கமான மனநிலையில் இருக்காதீங்க. சிரிப்புதான் முகத்தையே அழகாக்கும்.

 பயப்படாமல், உங்கள் கருத்து எதுவானாலும் அதை தைரியமா சொல்ல பழகிக்குங்க.  இதனால், மனசு எப்பவும் ஃப்ரீயா இருக்கும்.  

 எங்காவது வெளியூர்களுக்கு போனீங்கன்னா, சைவ உணவாக அதுவும் இயற்கை உணவாக தேர்ந்தெடுத்து சாப்பிடுங்கள்.  வயிறு தொடர்பான பிரச்னையே இருக்காது.  

 நிறைய தண்ணீர் குடிங்க. அதுவே சருமத்தை 'பளிச்’னு ஆக்கிடும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு