Published:Updated:

'முடி' இல்லாப் பிரச்னைக்கு முடிவு!

'முடி' இல்லாப் பிரச்னைக்கு முடிவு!

##~##

பெண்கள், முப்பதை நெருங்கினாலே முதுமை எட்டிப் பார்க்கத் தொடங்கிவிடும். அழகான நீண்ட, அடர்த்தியான முடி 40 வயதைக் கடந்த பெண்களையும், இளமையோடு காட்டும். ஆனால், இன்றைய மாசு படிந்த சுற்றுச்சூழல், ரசாயனம் கலந்த அழகுச் சாதனப் பொருட்கள் காரணமாக தலைமுடி உதிர்ந்து, பெண்களுக்கும் தலையில் வழுக்கை விழ ஆரம்பித்துவிட்டது. இதனால், பெண்கள் இளமையிலேயே முதுமைத் தோற்றத்தை அடைவது தவிர்க்க முடியாததாகிவிட்டது. பெண்களுக்கு முன் நெற்றியில் முடி உதிர்தல் மற்றும் வழுக்கை விழுவதற்கான காரணங்கள் பற்றி பேசுகிறார், சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையின் தோல் சிகிச்சை துறைத் தலைவர் டாக்டர் ரத்னவேல். 

''பொதுவாக மனிதனின் உடல் முழுவதும் சுமார் ஐந்து லட்சம் முடி இருக்கலாம். அதில் தலையில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட முடி இருக்கலாம். 20 வயது வரையில் ஒருவருக்கு முடியானது நல்ல வளர்ச்சியோடு இருக்கும். 30 வயதை நெருங்கும்போது, பொதுவாக எல்லோருக்கும் 10 சதவிகித முடி குறையத் தொடங்கும். இதற்கு மேல் கூடுதலாக 20 சதவிகித முடி குறையும்போதுதான் பிரச்னை உருவாகிறது. அதாவது 20 வயதில் 30 சதவிகித முடியும், 30 வயதில் 50 சதவிகித முடியும் குறைந்தால், மருத்துவரை அணுகவேண்டியது அவசியம்'' என்றவர் முடி உதிர்வதற்கான காரணங்களை அடுக்கினார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
'முடி' இல்லாப் பிரச்னைக்கு முடிவு!
'முடி' இல்லாப் பிரச்னைக்கு முடிவு!

''முன்பெல்லாம் ஆண்களுக்குதான் முடி உதிர்ந்து வழுக்கை விழும். ஆனால், இன்றோ 33 சதவிகித பெண்களுக்கும் வழுக்கை விழத் தொடங்கிவிட்டது. ஷாம்பு, தைலம் என விளம்பரங்க¬ளைப் பார்த்து வாங்கிக் குவித்தாலும் முடி மட்டும் முளைப்பது இல்லை. இதற்கு, நம் தலையின் மீது உள்ள உறைப் பைகளில் ஹார்மோன் சுரப்பு நின்றுபோவதும், புரதம், இரும்பு, துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துப் பற்றாக்குறையும் முக்கியக் காரணங்கள்.  

ஊட்டச் சத்துக் குறைபாடு:

பெண்களுக்கு மாதவிலக்கு மற்றும் பிரசவ காலங்களில் ஏற்படும் புரதம், இரும்பு, துத்தநாகம் போன்ற ஊட்டச் சத்து இழப்பால் முடி உதிரலாம். தலைமுடி நன்றாக வளர புரதச் சத்தும் அவசியம். இது, வளர்ச்சியைத் தூண்டி, முடியைப் பாதுகாக்கும். புரதச் சத்து பற்றாக்குறை ஏற்படும்போது, தலைமுடி நிறம் மாறி, வலுவிழந்து, உடைந்துபோகும். முடி முழுமையாக அறுந்துபோகும். மாதவிலக்கின்போது அதிக உதிரப்போக்கு ஏற்பட்டால் அது ரத்த சோகைக்கு வழிவகுக்கும். ரத்த சோகை இருந்தால்தான் முடி உதிரும் என்பது இல்லை. கொஞ்சம் இரும்புச் சத்துப் பற்றாக்குறை இருந்தாலும்கூட முடி உதிரும். அதேபோல், உடல் வளர்ச்சி மற்றும் நலத்துக்கு துத்தநாகம் மிகவும் அவசியம். இந்தச் சத்து பல உணவுப் பொருள்களில் இருந்தாலும், அது ரத்தத்தில் உட்கிரகிக்கப்படாமல் போவது உண்டு. மேலும் சில நோய்களால் பாதிக்கப்படும்போது, துத்தநாகக் குறைபாடு உடலில் குறையும். அப்போதும் முடி கொட்டலாம். இரும்புச்சத்து குறைவு என்றால் அதற்கான மருந்து மாத்திரைகளுடன் உணவு விஷயத்திலும் அக்கறை வேண்டும்.  பேரீட்சை, கறிவேப்பிலை, கீரை வகைகளை அதிகம் சேர்த்துக்கொள்வதன் இரும்புச்சத்துக் குறைபாட்டைத் குறைக்கலாம்.

'முடி' இல்லாப் பிரச்னைக்கு முடிவு!

ஹார்மோன் குறைபாடு:

பெண்களுக்கு தைராய்டு பிரச்னை இருந்தால், அதற்காக எடுத்துக்கொள்ளும் ஹார்மோன் மாத்திரை மருந்துகளால் முடி உதிர்வது அதிகரிக்கும். பொதுவாக, 12 வயது வரை ஆண், பெண் இருவருக்கும் ஒரே அளவில் ஹார்மோன் சுரக்கும். ஆனால், தற்போது பெருகிவரும் நோய்களால், உட்கொள்ளும் மருந்து மாத்திரைகள், ஊசி மருந்துகள் இவற்றால் பெண்களுக்கு ஹார்மோன் பிரச்னை வர ஆரம்பிக்கிறது. இதனால், உடலில் ஆண்களைப் போல எல்லா இடங்களிலும் முடி முளைக்க ஆரம்பிக்கிறது. உடல் முழுவதும் முடி முளைத்தாலும், சிலருக்கு முடி காது அருகில், நடு வகிட்டில் முன்னந் தலையில் எனக் குறிப்பிட்ட இடத்தில் பரவலாக முடி கொட்டத் தொடங்கும். ஹார்மோன் மாற்றங்களாலும் தலையில் பூச்சிவெட்டு வரலாம். இதனால் தலையில் உஷ்ணம் அதிகரித்து மன அழுத்தத்துக்கு ஆளாகி, கொப்பளங்கள் தோன்றலாம். இதனால் முடி உதிர்ந்து வழுக்கைக்கு வழி வகுக்கும்.

முடி பிரச்னை உள்ளவர்கள் தைராய்டு சுரப்பின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்று கண்டறியவேண்டும். சினைப் பையில் கட்டியிருக்கிறதா என்று பார்க்கவேண்டும். கூடவே தேவையான இரும்புச் சத்து உள்ளதா எனவும் பரிசோதிக்கவேண்டும்.  ஹார்மோன் பிரச்னை எனில், மீனை அதிகம் சாப்பாட்டில் சேர்த்துக்கொள்வது, மற்றும் மருந்து மாத்திரைகள் மூலமும் சரிசெய்துவிடலாம். ஆண்களுக்கான ஹார்மோன் அதிகம் இருந்தால், அதைக் குறைக்கக்கூடிய சிகிச்சையை மேற்கொள்ளவேண்டும்.  இயற்கை சாயம், ரசாயனம் இல்லாத தரமான ஷாம்பு, அரைத்து செய்யும் சீயக்காய்த்தூள் இவற்றைப் பயன்படுத்துங்கள். தினமும் தலைக்குக் குளிப்பது உடல் சூட்டை குறைக்கும். முடியை சுத்தமாக வைத்திருப்பதன் மூலமும் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.'' என்றார்.

- ரேவதி

படங்கள்: உ.கு. சங்கவி

 செயற்கை முடியும் சூப்பர்தான்!

வீணா, அழகுக்கலை நிபுணர்

'முடி' இல்லாப் பிரச்னைக்கு முடிவு!
'முடி' இல்லாப் பிரச்னைக்கு முடிவு!

இன்று இயற்கையைக் காட்டிலும், செயற்கைக்குத்தான் மவுசு அதிகம். எந்த இடத்தில் முடி உதிர்ந்துவிட்டதோ, அந்த இடத்தில் கிளிப்களைப் பயன்படுத்தி, செயற்கை முடியை இணைத்துக் கொள்வதுதான் இன்று ஃபேஷன். தொலைக்காட்சிகளில் வரும் பிரபலங்கள் பெரும்பாலும், ஹேர் எக்ஸ்டன்ஷன் மற்றும் சிந்தடிக் முடிக் கற்றைகளை பொருத்திக் கொள்கின்றனர். நம் தலை முடிக்கு ஏற்ற, பலவகை கிளிப் செய்யக்கூடிய முடிகற்றைகள் வந்துவிட்டன. சிலருக்கு நேர் வகிட்டின் இரண்டு பக்கமும் முடி உதிர்வதற்கு, சின்ன வயதிலிருந்தே நேர் வகிடு எடுத்து பழகியிருப்பார்கள். முன் மண்டையில் சீப்பைப் போட்டு வாருவது, அதிகமாக அழுத்தம் தருவது போன்ற காரணத்தால், முன் மண்டைப் பகுதி அதிகம் பாதிக்கப்படும். இதனால், முடி உதிரும். அந்த இடமே சொட்டை விழுந்தது போல், வட்டமாக முடி உதிர்ந்து விட்டால், முன்பக்கத்தில் செயற்கை முடி கற்றையைப் பொருத்திக் கொள்ளலாம்.  இந்த முடியை ஸ்டைலாக முக அமைப்புக்கேற்ப மாற்றிக் கொண்டால் இளமையாக தெரியும்.  ஒரே மாதிரியான வகிடு எடுத்து வாருவதைவிட, அவ்வப்போது, முடியை பக்கவாட்டில் வாரி, வகிடை மாற்றுவது, முடி உதிர்ந்ததும் தெரியாமல் இருக்கும்.