Published:Updated:

அரிசியின் அரசியல்... சத்தான சிவப்பு அரிசி

அரிசியின் அரசியல்... சத்தான சிவப்பு அரிசி

##~##

தினம் நாம் சாப்பிடும் அரிசியில் என்ன சத்து இருக்கிறது என்று யோசித்திருக்கிறோமா? காலம் காலமாக சாப்பிடும் அரிசிதானே, சத்துக்களில் குறைவிருக்க வாய்ப்பு இல்லை என்றே தோணும். ஆனால், இன்று நாம் சாப்பிடும் உணவுகளில் பெரும் பகுதி வெறும் சக்கைதான் என்று அதிர்ச்சி  தருகிறார் ஊட்டச்சத்து நிபுணர் புவனேஸ்வரி.   

''பிரதான உணவாக எடுத்துக்கொள்ளும் அரிசியின் சத்துக்கள் அனைத்தும் நீக்கப்பட்டு, வெறும் சக்கையாகத்தான் விற்கப்படுகிறது. அதைத்தான் நாம் விரும்பிச் சாப்பிடுகிறோம். அரிசி வகைகளில், 'சிவப்பு அரிசியின் மகத்துவத்தை நாம் அறிந்துகொண்டால், வெள்ளை அரிசியை வெறுத்து ஒதுக்கிவிடுவோம்.'' என்கிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சிவப்பு அரிசியின் சத்துக்களைப் பற்றிய நம் சந்தேகங்களுக்கு ஊட்டச்சத்து நிபுணர் புவனேஸ்வரியின் பலம் தரும் பதில்கள் இங்கே...  

சிவப்பு அரிசியில் என்னென்ன சத்துக்கள் உள்ளன?

அரிசியின் அரசியல்... சத்தான சிவப்பு அரிசி

சிவப்பு அரிசியை (பிரவுன் ரைஸ்) தீட்டப்படாத அரிசி என்றும், முழு அரிசி  என்றும் சொல்வோம். இதன் கெட்டியான வெளித் தோலுக்கு (உமி) அடுத்ததாக மெல்லியதாக சிவப்பு நிறத்தில் மேல் தோல் (தவிடு) இருக்கும். இதை நீக்கி, பலமுறை தீட்டப்பட்டு அனைத்துச் சத்துக்களும் இழந்த பின் கிடைப்பதுதான் நாம் வழக்கமாகச் சாப்பிடும் வெள்ளை அரிசி. சிவப்பு அரிசியில், மக்னீசியம், மாங்கனீஸ், செலினியம், துத்தநாகம் போன்ற தாது உப்புக்கள் அதிக அளவில் உள்ளன. வெள்ளை அரிசியில்

அரிசியின் அரசியல்... சத்தான சிவப்பு அரிசி

பட்டைத்தீட்டும்போது இவை வெளியேறிவிடுவதால், இந்தச் சத்துக்கள் மிகமிகக் குறைந்த அளவிலேயே இருக்கின்றன. தானிய வகைகளில் வைட்டமின் ஈ இந்த சிவப்பு அரிசியில் மட்டும்தான் உள்ளது. நார்ச் சத்தும் இதில் உள்ளது. எனவேதான் இந்த சிவப்பு அரிசி ஓர் முழுமையான தானியமாக இருந்து ஆரோக்கியத்தை அளிக்கிறது. இதில் இருக்கும் காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்ஸ் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

நார்ச் சத்து நிறைந்து இருப்பதால், செரிமானம் சுலபமாகும். இந்த நார்ச் சத்சானது, புற்றுநோய் உண்டாக்கக்கூடிய வேதியியல் பொருட்கள் பெருங்குடலை அணுகாத வண்ணம் பார்த்துக்கொள்ளும். இதில் இருக்கும் மாவுச் சத்து, ரத்தத்தில் இருக்கும் கொழுப்புச் சத்தைக் குறைக்கிறது. சிவப்பு அரிசியில் உள்ள‌ தாது உப்புக்கள் கூந்தல், பற்கள், நகங்கள், தசைகள், எலும்புகள் ஆகியவற்றின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது.

தினசரி உணவில் சிவப்பு அரிசியை எந்த அளவுக்கு சேர்த்துக்கொள்ளலாம்?

100 கிராம் சிவப்பு அரிசியில் நமக்குத் தினசரி வேண்டிய மாங்கனீஸில் எட்டு சதவிகிதமும், நார்ச் சத்தில் 14 சதவிகிதமும் கிடைக்கிறது. வெள்ளை அரிசிச் சாதம் எவ்வளவு சாப்பிடுகிறோமோ, அந்த அளவுக்கு இதையும் சாப்பிடலாம். சுவை குறைவாக இருப்பதுபோல தோன்றும். தினசரி உணவில் பழக்கப்படுத்திக்கொள்ள, வெள்ளை அரிசியையும் சிவப்பு அரிசியையும் பாதியாகக் கலந்து சமைத்து சாப்பிடலாம். அந்தச் சுவையும், நிறமும், வாசனையும் பழகிய பிறகு, முற்றிலும் சிவப்பு அரிசியை சமைக்கலாம்.

சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா?

சாப்பிடலாம். டைப் 2 சர்க்கரை நோயாளிகளுக்கு இது மிகவும் ஏற்றது என்று ஏசியன் ஆராய்ச்சி சொல்கிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு வெள்ளை அரிசியைவிட சிவப்பு அரிசி பல மடங்கு நல்லது. அரிசி உணவு சாப்பிட்ட திருப்தியும் கிடைக்கும்,  இந்த அரிசியால் பிரச்னைகள் எதுவும் வராது என்கிறது அந்த ஆராய்ச்சி.

எப்படி சமைக்கலாம்?

வெள்ளை அரிசியைவிட சமைப்பதற்கு அதிக நேரம் ஆகும் என்பதால், அரிசியை வேகவைக்கும் முன் அரை மணி நேரம் ஊறவைக்க வேண்டும். சமைக்கும்போது ஒரு டம்ளர் அரிசிக்கு இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்க்க வேண்டும். சிவப்பு அரிசியில் செய்யும் தோசையும் மிக ருசியாக இருக்கும். இரண்டரை கப் அரிசிக்கு அரை கப் உளுத்தம் பருப்பு என்ற அளவில் சிறிது வெந்தயமும் சேர்த்து அரைத்து, இரவு புளிக்கவைத்து மறுநாள் தோசை செய்து சாப்பிட்டால், சுவையாக இருக்கும்.

- உமா ஷக்தி,

படங்கள்: பீரகா வெங்கடேஷ்

 கவனிக்க: சிவப்பு அரிசியிலிருந்து எண்ணெய் எடுக்கப்படாததால் சீக்கிரமே கெட்டுப்போய் விடக்கூடும். எனவே வாங்கும்போது காலாவதியாகும் தேதியைப் பார்த்து வாங்குவது மிகவும் அவசியம்.