'இன்று பலரையும் பீதியில் உள்ளாக்கும் நோய் புற்றுநோய். ஆனால், உரிய நேரத்தில், உரிய சிகிச்சை எடுத்துக்கொண்டால் நிச்சயம் புற்றுநோயை வெல்ல முடியும். எந்த நிலையில் புற்றுநோய் இருந்தாலும் அதைக் குணப்படுத்தி, சகஜமான வாழ்க்கைக்குக் திரும்ப முடியும் என்பது பலருக்குத் தெரியாது. புற்றுநோய் பற்றிய விழிப்பு உணர்வு மக்கள் மத்தியில் குறைந்திருப்பதே இதற்குக் காரணம்' என்கிறார் சென்னை - மூத்த புற்றுநோய் மருத்துவரான டி.ராஜா.

'நகம், முடியைத் தவிர எலும்பு, ரத்தம், தசைகள் என எங்கு வேண்டுமானாலும் புற்றுநோய் வரலாம். தினமும் நம் உடலில் உள்ள முதிர்ந்த செல்கள் அழிந்து, புதிய செல்கள் தோன்றுகின்றன. இது திட்டமிடப்பட்ட செயல். இதில் ஒரு செல் கட்டுப்பாட்டில் இருந்து விலகி தன்னிச்சையாக செயல்படுவதையே புற்றுநோய் என்கிறோம். புற்றுநோய் ஒரு தொற்றுநோய் அல்ல. அதனால் புற்றுநோயாளிகளுடன் நெருங்கிப் பழகுவதால், மற்றவர்களுக்குப் புற்றுநோய் வந்துவிடாது.

அவர்களுக்கு மற்றவர்களின் அன்பும் அரவணைப்பும் மிகவும் அவசியம்.

புற்றுநோய் ஆரம்ப நிலையில் எந்த ஓர் அறிகுறியையும் ஏற்படுத்தாது. இரண்டாவது நிலையில்தான் அதன் பாதிப்பை உணர முடியும். பொதுவாக வலி ஏற்பட்டதும் டாக்டரை அணுகாமல், தாங்க முடியாத வலி வரும்போதுதான் டாக்டர்களிடம் வருகிறார்கள். உடலில் சிறிய மாறுதல், ஆறாத புண், எச்சில், சிறுநீர், மலத்தில் ரத்தம் கலந்து வெளியேறுதல் போன்ற பாதிப்புகள் இருந்தால், உடனடியாக மருத்துவர்களிடம் ஆலோனை பெற வேண்டியது அவசியம்'' என்கிற டாக்டர் ராஜா, இதற்கான சிகிச்சைமுறைகளை விவரித்தார்.

'புற்றுநோய் சிகிச்சையை கீமோதெரப்பி, கதிர்வீச்சியல், அறுவைசிகிச்சை என மூன்றாகப் பிரிக்கிறோம். கீமோதெரப்பியில், புதிதாக டார்கெட்டட் தெரப்பி என்று ஒன்று வந்துள்ளது. இது, ஜீன் அளவில் மாறுதலுக்கு உள்ளான திசுக்களை மட்டுமே குறிவைத்து சிகிச்சை அளிக்கப்படுவது. இதனால் நல்ல செல்கள் பாதிக்கப்படுவது தவிர்க்கப்படுகிறது, பக்கவிளைவும் பெருமளவு குறைகிறது. இதேபோல் அறுவைசிகிச்சையில் ரோபோடிக் சர்ஜரி போன்ற சிறிய துளை அறுவைசிகிச்சை முறையும் வந்துவிட்டது. கதிர்வீச்சு மருத்துவத்தில் சைபர் நைஃப் எனப்படும் 360 டிகிரியில் கதிர்வீச்சைச் செலுத்தி புற்றுநோய் செல்லை அழிக்கும் முறையும் இப்போது வந்துவிட்டது' என்கிற டாக்டர் ராஜா, புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீள முடியும் என்று நம்பிக்கையும் அளிக்கிறார் இப்போது.

டாக்டர் விகடனின் நலம், நலம் அறிய ஆவல்’ பகுதியில் ஆகஸ்ட் 1 முதல் 15 வரை தொடர்ந்து 15 நாட்களுக்குப் புற்றுநோய் ஏன் வருகிறது... அதற்கான சிகிச்சைகள், வராமல் தடுக்கும் வழிகள் என்னென்ன என விரிவாகப் பேசுகிறார் டாக்டர் டி.ராஜா.

'ஆண்டுக்கு ஒருமுறை அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்துகொள்வதன் மூலம் நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தடுக்கலாம். புகைப்பழக்கம், மது அருந்துதல், ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கம், வீட்டில் சமைத்த உணவைச் சாப்பிடுவது, கதிரியக்கம் போன்ற சுற்றுச்சூழல் பாதிப்புகளில் இருந்து தற்காத்துக்கொள்வது, உடல் பருமன் தவிர்ப்பது மற்றும் யோகா, தியானம் போன்று உடலுக்கு ஆரோக்கியம் தரும் விஷயங்களைச் செய்தாலே புற்றுநோய் உள்ளிட்ட எந்த ஒரு நோயும் உங்களை அணுகாது' என்கிறார் டாக்டர் ராஜா.

- பா.பிரவீன் குமார், படம்: முத்துக்குமார்