Published:Updated:

புற்றுநோயைச் சுற்றி தாக்கும் 'ட்ரூபீம்'

புற்றுநோயைச் சுற்றி தாக்கும் 'ட்ரூபீம்'

புற்றுநோயைச் சுற்றி தாக்கும் 'ட்ரூபீம்'

புற்றுநோயைச் சுற்றி தாக்கும் 'ட்ரூபீம்'

Published:Updated:
##~##

புற்றுநோயில் இருந்து மீண்டுவந்தவர்கள், 'புற்றுநோய்குறித்து அச்சம்கொள்ளத் தேவை இல்லை’ என்று மக்கள் மத்தியில் விழிப்பு உணர்வு ஏற்படுத்திவரும் அளவுக்கு நவீனத் தொழில்நுட்பம் வளர்ந்துவருகிறது. கதிரியக்க மருத்துவத் துறையில் எந்த ஒரு புற்றுநோய்க்கும் மிகக் குறைவான நேரத்தில் விரைவாக சிகிச்சை அளிக்கக்கூடிய 'ட்ரூ பீம் எஸ்.டி.எக்ஸ்.’ என்ற புதிய கருவி குளோபல் மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ளது. 

இந்தப் புதிய கதிரியக்கக் கருவி பற்றி, மூத்த கதிரியக்கவியல் புற்றுநோய் மருத்துவர் எஸ்.சுமன்னா பிரேம்குமாரிடம் பேசினோம்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'புற்றுநோய்க்கு அறுவைசிகிச்சை, கீமோதெரப்பி, கதிர்வீச்சு என மூன்று வகையான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. புற்றுநோயின் நிலை, எந்தப் பகுதியில் உள்ளது, நோயாளியின் உடல் திறன் போன்றவற்றை அடிப்படையாகக்கொண்டு, புற்றுநோயாளிக்கு இந்த மூன்றில் எந்த சிகிச்சை அளிக்கலாம் என்து முடிவுசெய்யப்படும்.

புற்றுநோயைச் சுற்றி தாக்கும் 'ட்ரூபீம்'

கதிரியக்க மருத்துவம் தேவைப்படுபவர்களுக்கு, பக்கவிளைவுகள் பெருமளவு குறைக்கப்பட்ட, துல்லியமான சிகிச்சை அளிக்கும் கருவி ட்ரூ பீம். இந்த கருவியைப் பயன்படுத்தி சிறிய அளவு முதல் பெரிய அளவு புற்றுநோய்க் கட்டிகள் வரை தாக்கி அழிக்கும் ரேடியோ சர்ஜரி சிகிச்சை முறை இது. இந்தக் கருவியானது ஒருவரின் அசைவுக்கு ஏற்றபடி தன்னை மாற்றிக்கொண்டு அதற்கு ஏற்ப மிக விரைவாக கதிர்வீச்சை வெளியிட்டு மிகத் துல்லியமாக புற்றுநோய்க் கட்டிகளைத் தாக்கும்.

முந்தைய கதிர்வீச்சு சிகிச்சையில், புற்றுநோய் கட்டியை அழிக்கும்போது அதனுடன் சேர்ந்து நல்ல செல்களும் அழிக்கப்பட்டது. பக்கவிளைவுகளும் அதிகமாக இருந்தது. இந்தப் பிரச்னையைத் தீர்க்கும் வகையில், 360 டிகிரியிலும் சுற்றி புற்றுநோய் செல்லை மட்டும் தாக்கும் வகையில் இந்தக் கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் புற்றுநோய்க்கு அருகில் உள்ள திசுக்கள் பாதிக்கப்படுவது பெருமளவு குறைக்கப்படும். இந்தப் புதிய கருவியில் மூளை, முதுகு தண்டுவடம், நுரையீரல், கல்லீரல், கணையம், ப்ராஸ்டேட், குடல் எனப் பல்வேறு உடல் உறுப்புகளில் ஏற்படும் புற்றுநோய்க் கட்டிகளையும் அழிக்கும்.

புற்றுநோய்க் கட்டியை ஆய்வது, சிகிச்சையைத் திட்டமிடுவது, சிகிச்சை அளிப்பது என்ற மூன்று அடிப்படைகளில் இந்தக் கருவி செயல்படுகிறது. ஒருவருக்கு 'கதிரியக்க சிகிச்சை அளிக்க வேண்டும்’ என்று முடிவானால், அவருக்கு புற்றுநோய் எந்த இடத்தில் உள்ளது, எந்த அளவில் உள்ளது என்பதை கண்டறிய சி.டி. அல்லது எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்யப்படும். இதை அடிப்படையாகக்கொண்டு அவருக்கு எவ்வளவு கதிர்வீச்சுச் சிகிச்சை தேவைப்படும் என்பது முடிவுசெய்யப்படும். சிகிச்சைக்கான திட்டமிடல் என்பது சில நாட்கள் ஆகும். அதன் பிறகு சிகிச்சை தொடங்கும்.

ட்ரூபீம் கருவியில் அவரைப் படுக்க வைக்கும்போது, மீண்டும் ஒருமுறை புற்றுநோய்க் கட்டியின் இருப்பிடம், அளவு போன்றவை பரிசோதிக்கப்படும். ட்ரூபீமில் உள்ள இமேஜிங் (நிழல்படம்) தொழில்நுட்பமானது கதிர்வீச்சு செலுத்தவேண்டிய புற்று «நாய்க் கட்டியை மிகத் துல்லியமாக முப்பரிமாணப் படமாகக் காட்டும். இதன் அடிப்படையில், கதிர்வீச்சுச் சிகிச்சை தொடங்கும்.

நோயாளி மூச்சு விடும்போதும், அசையும்போதும் புற்றுநோய் உள்ள இடத்திலும் ஏற்றம் இறக்கம் ஏற்படும். இதை இந்தக் கருவி கண்காணித்து சரியான கோணத்தில் கதிர்வீச்சைச் செலுத்தும். அதுவும், தற்போதுள்ள மற்ற கருவிகளைக் காட்டிலும் இந்தக் கருவி 2.4 முதல் நான்கு மடங்கு விரைவாக கதிர்வீச்சை அளிக்கும். இதனால் முன்பு 30 முதல் 60 நிமிடங்கள் வரை தேவைப்பட்ட கதிர்வீச்சு சிகிச்சையானது வெறும் ஐந்து முதல் 20 நிமிடங்களிலேயே முடிக்க முடியும்.

இந்த கருவியால் ஒரு மி.மீ.க்கும் குறைவான அளவில் உள்ள கட்டி முதல் பெரிய கட்டி வரை கதிர்வீச்சை அளிக்க முடியும். இந்தக் கருவியானது ஒவ்வொரு 10 மில்லி விநாடியில் புற்றுநோயின் அமைவிடம், நோயாளியின் நிலை, அசைவு கண்காணிப்பு, கதிர்வீச்சு செலுத்தும் திறன் போன்றவற்றைக் கண்காணித்து கதிர்வீச்சை செலுத்தும். நோயின் தன்மைக்கு ஏற்ப ஒன்று முதல் ஐந்து செஷன்களில் சிகிச்சை அளிக்கப்படும்' என்றார்.

ஆறுதல் தரும் விஷயம்!

- பா.பிரவீன் குமார்