Published:Updated:

நலம், நலம் அறிய ஆவல்!

நலம், நலம் அறிய ஆவல்!

நலம், நலம் அறிய ஆவல்!

நலம், நலம் அறிய ஆவல்!

Published:Updated:
##~##

'எட்டு வயதிலேயே பெண் குழந்தைகள் பூப்படைவது அதிகரித்துவருகிறது. சாப்பிடும் உணவுப் பழக்கம், உடல் பருமன், மூளையில் கட்டி, தலையில் அடிபடுதல், மரபியல் போன்ற பல்வேறு காரணங்களால்தான் பிஞ்சுப் பருவத்திலேயே பெண் குழந்தைகள் பூப்படைந்துவிடுகின்றனர். பெண் குழந்தைகளை மருத்துவரிடம் காண்பித்து ஆலோசனை பெறுவதன் மூலம், அவர்களுக்கு உள்ள பிரச்னையைக் கண்டறிந்து அதைச் சரிப்படுத்திவிடலாம். பெண் குழந்தைகளை உரிய வயதில் பூப்படையவைக்கலாம்' என்கிறார் சென்னையைச் சேர்ந்த மகளிர் - மகப்பேறு மருத்துவர் மற்றும் லாப்ராஸ்கோப்பி அறுவைசிகிச்சை நிபுணர் மாலா ராஜ். 

டாக்டர் விகடனின் 'நலம், நலம் அறிய ஆவல்’ பகுதியில், ஆகஸ்ட் 15 முதல் 31-ம் தேதி வரை பெண்கள் தொடர்பான பிரச்னைகளுக்குத் தீர்வுகளைத் தினந்தோறும் தருகிறார் டாக்டர் மாலா ராஜ்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'பெண்ணுக்கு 25 முதல் 35 நாட்களுக்கு ஒருமுறை மாதவிலக்கு வருவது வழக்கமானது. 25 நாட்களுக்குக் கீழ் அல்லது 35 நாட்களுக்கு மேல் மாதவிலக்கு வந்தால், அவர்களுக்கு ஏதோ பிரச்னை உள்ளது என்று அர்த்தம். அதே போல மாதவிலக்கின்போது, உதிரப்போக்கு என்பது மூன்று அல்லது நான்கு நாட்களுக்குத்தான் இருக்க வேண்டும். அதற்குக் குறைவாக அல்லது அதற்கு மேல் இருந்தால் பிரச்னை என்றுதான் அர்த்தம். உடனடியாக  மகப்பேறு மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். தைராய்டு சுரப்பியில் பிரச்னை, கருப்பைக் கட்டி, வீக்கம், கருப்பையில் காசநோய் எனப் பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். இதைச் சரிப்படுத்த முடியும். இதைக் கவனிக்காமல் விடும்போதுதான், குழந்தைப்பேறு வரை பாதிப்பை ஏற்படுத்தும்' என்ற டாக்டர் மாலா ராஜ், சரியான மாதவிலக்கு எது என்பது குறித்தும் விரிவாகப் பேசுகிறார்.

நலம், நலம் அறிய ஆவல்!

''இதேபோல, இன்றைக்கு, பெண்களை அதிகம் தாக்கும் புற்றுநோய் கருப்பை வாய்ப் புற்றுநோய். இது 'ஹீயூமன் பாப்பிளோமா வைரஸ்’ என்ற கிருமித் தொற்றால் ஏற்படுகிறது. சிறு வயது முதல் 42 வயதுக்குட்பட்ட பெண்கள் தடுப்பு ஊசி போட்டுக்கொள்வதன் மூலம் இந்தப் புற்றுநோயைத் தவிர்க்க முடியும். ஆனால், இதுபற்றிய விழிப்பு உணர்வு மக்கள் மத்தியில் இல்லை. மூன்று டோஸ் தடுப்பு ஊசி போட்டுக்கொள்வதன் மூலம் புற்றுநோயைத் தவிர்க்கலாம். இதன் விலையும் அதிகம் இல்லை. ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பெண் குழந்தைகளுக்கு 9 முதல் 13 வயதுக்குள் இந்தத் ஊசியைப் போடுவதன் மூலம் அவர்களின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தலாம்'' என்கிறார்.

பெண்களின் குழந்தைப் பருவம் முதல் மெனோபாஸ் வரை எந்தெந்தக் கால கட்டத்தில் என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், ஊசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று விவரிக்கும் டாக்டர் மாலா ராஜ், இன்று சமூகத்தில் அதிகரித்துள்ள குழந்தையின்மைப் பிரச்னை பற்றியும் விரிவாகப் பேசுகிறார்.

'திருமணம் ஆகி மூன்று ஆண்டுளாகியும் குழந்தை இல்லை எனில், மருத்துவர்களைச் சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். இன்றைக்கு குழந்தையின்மைக்கு ஆண்களும் 50 சதவிகிதம் காரணமாக உள்ளனர். எனவே, ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லிக்கொள்ளாமல், உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. நவீனத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் குழந்தைப்பேறு என்பது சாத்தியமாகி வருகிறது. இதற்கென ஐ.யு.ஐ, ஐ.வி.எஃப்., வாடகைத் தாய் எனப் பல்வேறு முன்னேற்றங்கள் உள்ளன' என்கிறார் டாக்டர்.  

- பா.பிரவீன்குமார்

படம்: ஆ. முத்துகுமார்