Published:Updated:

கையில் முகம் பார்க்கலாம்!

கையில் முகம் பார்க்கலாம்!

பிரீமியம் ஸ்டோரி
##~##

''முகத்தைப் போலவே, நம் கைகளும் உலகைத் தொடர்புகொள்ள உதவுகின்றன. ஒருவரைச் சந்திக்கும்போது, கை கொடுக்கிறோம்: வாழ்த்தும்போது வணக்கம் செய்கிறோம். நம் உணர்வுகளை, அன்பை வெளிப்படுத்த உதவும் முக்கியமான பணியை கைகள் செய்கின்றன. அதிக அளவில் வெயில், தூசால் பாதிக்கப்படும் உறுப்பும் கைதான். ஆனால், கைகளை ஆரோக்கியமாக வைத்திருப்பதில், நாம் அதிகம் அக்கறை எடுத்துக்கொள்வதில்லை என்பதுதான் உண்மை'' என்கிற அழகுக்கலை நிபுணர் வீணா குமாரவேல், கைகளைச் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க வழி சொல்கிறார்.   

''ஒருவரின் சுத்தத்தை சட்டெனப் பறைசாற்றுவது கைகள்தான். நம் பாரம்பரிய வழக்கமான மஞ்சள் தேய்த்துக் குளிப்பது மறைந்துவிட்ட நிலையில், பெண்களின் கைகளில் ரோமம் வளர்ந்துவிடுகிறது. இதுவே அழகைக் குறைக்கலாம். உடலில் தேவையற்ற இடங்களில் இருக்கும் ரோமங்களை நீக்க, சிறந்த வழி 'வாக்ஸிங்’ முறை மட்டுமே. இது முடியை வேரிலிருந்து அகற்றிவிடும். அடுத்து, சீக்கிரம் வளராமல் தடுக்கும். மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை செய்து கொள்ளலாம். முக்கியமாக, 16 வயதுக்கு மேல்தான் வாக்ஸிங் செய்துகொள்ள வேண்டும்.  

கையில் முகம் பார்க்கலாம்!

அக்குள்

கையில் முகம் பார்க்கலாம்!

அதிகம் வியர்க்கக்கூடிய மிகவும் மென்மையான பகுதி. இதனால், வியர்வையுடன் தூசி, அழுக்கு சேர்ந்து பூஞ்சை தொற்று ஏற்படலாம். எனவே, இந்த முடியை அகற்றிவிடுவது நல்லது. இந்த முடியை அகற்ற ஷேவ் செய்வது சரியல்ல. அந்த இடம் கறுப்பாகி அலர்ஜியை ஏற்படுத்திவிடும்.  க்ரீம்களைத் தடவி முடியை அகற்றுவதும் நிரந்தரத் தீர்வல்ல. அக்குள் முடியை வாக்ஸிங் செய்து கவனத்துடன் அகற்றலாம்.  அக்குள் பகுதியில் படிந்திருக்கும் கறுமையைப் போக்க, எலுமிச்சைப் பழச் சாற்றில் பால் கலந்து அந்தப்பகுதிகளில் தடவி, சிறிதுநேரம் ஊறியபின் கழுவினால், நல்ல பலன் கிடைக்கும்.

கை

கை முட்டி பகுதி டேபிளில் அழுத்தப்படும்போது, மிகவும் கறுத்து சொரசொரப்பாகிவிடுகிறது. சர்க்கரையை தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயுடன் கலந்து, தினமும் கை முட்டிகளில் மென்மையாகத் தேய்க்க வேண்டும். எண்ணெய்க்குப் பதிலாக எலுமிச்சைப் பழத்தையும் பயன்படுத்தலாம். இதனால், முட்டிப் பகுதியில் கறுமை மறையும். நீண்ட நேரம் ஏ.சி அறையில் இருந்தாலும், கைகளில் ஈரப்பதம் குறைந்து தோல் வறண்டு போகலாம்.  இதைச் சரிசெய்ய, குளித்தவுடன் மாய்ஸ்ச்சரைஸரைப் பயன்படுத்துவது நல்லது. வீட்டு வேலைகள் செய்யும்போது கைகளில் உறை அணிந்துகொள்ளலாம். இது தூசி, நோய்த் தொற்று, வியர்வை, டிடர்ஜென்ட் பாதிப்பு போன்றவை நேரடியாகத் தாக்குவதைத் தவிர்க்கும்.

கையில் முகம் பார்க்கலாம்!
கையில் முகம் பார்க்கலாம்!

நகங்கள்

பெரும்பாலும் நாம் கைகளால்தான் உணவு அருந்துகிறோம். நகங்களில் அழுக்கு இருந்தால், சாப்பாட்டுடன் அழுக்கும் சேர்ந்து கிருமித் தொற்று ஏற்பட்டு, நோய்கள் வர வாய்ப்புகள் அதிகம். சிலருக்கு நகம் கடிக்கும் பழக்கமும் இருக்கும். எனவே, பெரிய நகங்களை வளர்த்தாலும், அதை அடிக்கடி கழுவி, நக இடுக்குகளைச் சுத்தம் செய்து பளிச்சென்று வைத்திருக்க வேண்டும். வீட்டு வேலைகள் செய்யும்போதும் பாத்திரம் தேய்க்கும் போதும் அல்லது துணி துவைக்கும்போதும் நகங்கள் தேய்ந்து உடைந்துபோகலாம். இதைச் சரிசெய்ய, நகங்களைச் சுத்தமாகக் கழுவி அதைப் பாதுகாக்க 'பாடி லோஷன்’ தடவலாம்.

- உமா ஷக்தி

படங்கள்: ஜெ.வேங்கடராஜ், பா. சரவணகுமார்

மாடல்: ரூனா

கையில் முகம் பார்க்கலாம்!

''பாதுகாப்பாக வாக்ஸிங் செய்து கொள்வது 'ஓகே’ தான்'' என்கிறார் சரும சிகிச்சை நிபுணர் பிரியா.

தோலுக்கு ஒப்புக்கொள்கிறதா என்று  'பேட்ச் டெஸ்ட்’ எடுத்துப் பார்க்க வேண்டும்.

  வாக்ஸிங் செய்பவர்கள் நிச்சயம் கையுறை அணிந்திருக்க வேண்டும். ஏனெனில், கிருமித் தொற்று ஏற்பட வாய்ப்பு உண்டு.

  டிஸ்போஸபிள் ஸ்ட்ரிப்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.  

  ஹாட் வாக்ஸிங் செய்து கொண்டபின் சிலருக்கு, சூடு தாங்க முடியாமல் கொப்புளங்கள் ஏற்படுவது உண்டு. எனவே, கோல்ட்வாக்ஸிங் செய்து கொள்வது நலம்.

  வாக்ஸிங் செய்து முடித்த பின், சோப் வாட்டரில் கைகளை நன்றாகக் கழுவிய பின், ஆன்டிபயாடிக் க்ரீமைத் தடவிவிட வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு