Published:Updated:

நலம், நலம் அறிய ஆவல்!

நலம், நலம் அறிய ஆவல்!

பிரீமியம் ஸ்டோரி
நலம், நலம் அறிய ஆவல்!
##~##

'தலைவலி, முதுகுவலி வந்தால், உடனே வீட்டில் இருப்பவர்களை தைலம் தேய்த்துவிடச் சொல்வதும், மருந்துக் கடைக்குச் சென்று மாத்திரை வாங்கிப்போடுவதும் இன்று பல வீடுகளில் சகஜம். எப்போதாவது வந்தால், அது பிரச்னை இல்லை. ஆனால், நீண்ட நாட்கள் வலியோடு வாழ்பவர்களுக்கு, இது சரியான சிகிச்சை இல்லை. வலி நிவாரணிகளைத் தொடர்ந்து எடுக்கும்போது, அந்த சமயத்தில் வலி குறையுமே தவிர, நிரந்தரமாக மறையாது; பக்கவிளைவுகளும் ஏற்படலாம். வெறும் தலைவலி, முதுகுவலி மட்டுமல்ல, எந்த ஒரு வலியாக இருந்தாலும் அது ஒருவரின் அன்றாட வாழ்வையே முடக்கிவிடுகிறது. இதுபோன்ற வலிகளைப் போக்க, தற்போது பல்வேறு நவீன மருத்துவ வழிகள் உள்ளன' என்கிறார் வலிநீக்கவியல் சிறப்பு மருத்துவர் மதன்குமார்.

 'கழுத்துவலி, முதுகுவலி என்று வருபவர்களில் பெரும்பாலானவர்கள், கம்ப்யூட்டர் முன்பு மணிக்கணக்கில் அமர்ந்திருப்பவர்களும், இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களும்தான். 6  முதல் 8 மணி நேரம் வரை ஒரே இடத்தில் குனிந்த நிலையில் அமர்ந்து வேலை செய்யும்போது வலி ஏற்படுகிறது. சரியான நிலையில் அமராமல் இருப்பதும், உடல் பருமனும்கூட வலி ஏற்படுவதற்குக் காரணம். இன்றைய சூழ்நிலையில், இருசக்கர வாகனம் ஓட்டுவதையோ, கம்ப்யூட்டர் முன்னால் அமர்ந்து

நலம், நலம் அறிய ஆவல்!

வேலை செய்வதையோ தவிர்க்க முடியாது. ஆனால், சில முன்னெச்சரிக்கை உடற்பயிற்சிகளைச் செய்தால் கழுத்துவலி, முதுகுவலி வருவதைத் தவிர்க்க முடியும்'' என்கிறார் டாக்டர் மதன்குமார்.

''தலைவலி ஏற்பட சைனஸ், பார்வைக் குறைபாடு, நரம்புப் பிரச்னை, கழுத்துவலி என்று 18 வகையான காரணங்கள் உள்ளன. இவை அனைத்துக்கும் ஒரே ஒரு மாத்திரை தீர்வு அளிக்க முடியாது. தலைவலி எதனால் ஏற்படுகிறது என்று முதலில் கண்டறிய வேண்டும். சைனஸ் பிரச்னையாக இருந்தால், சாதாரண ஆன்டிபயாடிக் மாத்திரை எடுத்தாலே சரியாகிவிடும்.

இன்றைக்கு பெண்கள் அதிக அளவில் பயப்படுவது, பிரசவ வலிக்குத்தான். சிசேரியன் முறையில் உணர்வு நீக்க மருந்து கொடுத்தாலும் வலி இருக்கத்தான் செய்கிறது. சுகப் பிரசவத்தில் வலி என்பது தவிர்க்க முடியாது. இதற்கும் நவீன சிகிச்சை முறையில் தீர்வு உள்ளது. இந்த புதிய முறையில், சுகப் பிரவத்தின்போது குழந்தையை வெளியே தள்ள 'அழுத்தம் கொடுப்பது’ (றிusலீ) எல்லாம் இருக்கும். ஆனால், வலி மட்டும் இருக்காது. இன்றைக்கு நோயாளிகளின் வலியை நீக்க பல்வேறு நவீனத் தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. முதுகுவலிக்கு ஓசோன், ஃப்ரீக்வன்சி அப்லேஷன் சிகிச்சைகள், ரோபாட்டிக் உதவியுடன், சி.டி. உதவியுடன் செய்யப்படும் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மூட்டு, முதுகு போன்ற வலியை வராமல் தடுக்க முடியும். வந்தால் அதைப் போக்கவும் முடியும். உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில்தான் உள்ளது!' என்கிறார் டாக்டர்.

- பா.பிரவீன் குமார்

படம் ஜெ.வேங்கடராஜ்

நலம், நலம் அறிய ஆவல்!

.  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு