நலம், நலம் அறிய ஆவல்!
##~##

நம் உடலை, போர்வை போல் மூடி, அழகிய உருவத்தைத் தருவது தோல். பெரியவர்களின் மொத்த உடல் எடையில் 18 சதவிகிதம் தோல் மூலமே கிடைக்கிறது. தோல் என்பது அழகு சார்ந்தது மட்டும் அல்ல. உடலின் வெப்பநிலையைப் பராமரிக்கவும், நோய்க் கிருமித் தொற்று, சூரிய ஒளி, புற ஊதா கதிர்வீச்சு, தூசு உள்ளிட்டவற்றில் இருந்து உடலைக் காக்கும் மிகப்பெரிய அரணாகவும் இருக்கிறது.   தோலைப் பராமரிப்பது பற்றிய பல்வேறு சந்தேகங்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கும். தோல் மற்றும் முடி தொடர்பான பல்வேறு விஷயங்களை பற்றியும் விரிவாகப் பேசுகிறார் சருமநோய் சிகிச்சை நிபுணர் கே.பிரியா. 

'தோல் ஆரோக்கியமாக இருக்க சூரிய கதிர்வீச்சில் இருந்து பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம். மஞ்சள், சந்தனம், எலுமிச்சை, கிளிசரின், ஹேர்டை போன்ற பொருள்கள் பயன்படுத்தும்போது அது சூரியக் கதிர்வீச்சை உறிஞ்சும். சூரிய கதிர்வீச்சு அதிகரிக்கும்போது தோலில் வியர்வை, எண்ணெய் சுரப்பு அதிகரித்து முகப்பரு, சுருக்கம், மங்கு, பூஞ்சை தொற்று மற்றும் அழுக்குத்தேமல் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். தோலில் அரிப்பு மற்றும் ஒவ்வாமை ஏற்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது. எனவே, மஞ்சள், சந்தனம், எலுமிச்சை அடங்கிய சோப், பவுடர் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.  

நலம், நலம் அறிய ஆவல்!

சூரிய கதிர்வீச்சில் இருந்து தப்பிக்க, காலை 10 மணி முதல் மூன்று மணி வரையிலான நேரத்தில் வெளியில் செல்வதைத் தவிர்ப்பது நல்லது. இந்த நேரத்தில் நீச்சலும் கூடாது. வெளியில் செல்ல நேரிட்டாலும், சன் கிளாசஸ்,  குடை, பருத்தி ஆடை என பாதுகாப்புடன் செல்லுங்கள். வெளியே செல்வதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னதாக சன்ஸ்க்ரீன் போட்டுக்கொள்ளுங்கள்.

சன்ஸ்க்ரீன் க்ரீம்கள் மூன்று முதல் நான்கு மணி நேரத்துக்குத்தான் பலன்தரும். அதன்பிறகு, சூரியக் கதிர்வீச்சை கிரகிக்கும் தன்மையை அதிகரித்துவிடும். எனவே, சன்ஸ்கிரீன் பயன்படுத்துபவர்கள் காலை, மதியம், மாலை என மூன்று வேளையும் பயன்படுத்த வேண்டும். முகப்பரு, எண்ணெய்ப் பசை சருமம் உள்ளவர்கள் அதற்கு ஏற்றதுபோல ஜெல், லோஷன் வடிவில் கிடைக்கும் சன்ஸ்க்ரீன் பயன்படுத்த வேண்டும்' என்கிறார் டாக்டர் கே. பிரியா.

முடி பராமரிப்பு பற்றி கூறும்போது, 'தினசரி நம்முடைய தலையில் இருந்து 40-100 முடிகள் உதிர்வது என்பது இயற்கை. இதற்கு அதிகமாக முடி உதிரும்போது தோல் நோய் சிகிச்சை நிபுணரை அணுகி ஆலோசனை பெற வேண்டிடும்.  70 சதவிகிதம் முடி உதிர்வுக்கு பொடுகுதான் காரணம். பொடுகை முற்றிலுமாக ஒழிக்க முடியாது. அதைக் கட்டுக்குள் வைத்திருப்பதன்மூலம் முடி உதிர்வைத் தவிர்க்கலாம்' என்கிறார் டாக்டர் பிரியா.

இன்று பெரும்பாலானவர்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதியாகும் தைலம், ஸ்டெம் செல் தெரப்பி என்று பல்வேறு சிகிச்சைமுறைகளை செய்துகொண்டு, தலைமுடி முற்றிலும் கொட்டிய நிலையில் தோல் மருத்துவர்களை அணுகுகின்றனர். முடி கொட்ட ஆரம்பிக்கும்போதே மருத்துவர்களை அணுகி, எதனால் முடி கொட்டுகிறது என்பதைக் கண்டறிந்து அதற்கு சிகிச்சை எடுக்கவேண்டும்.'' என்கிறார் டாக்டர் கே.பிரியா.

- பா.பிரவீன் குமார், படம்: பா.சரவண குமார்

நலம், நலம் அறிய ஆவல்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு