Published:Updated:

ஜீரணத்துக்கு உகந்ததா ஸ்வீட் பீடா?

ஜீரணத்துக்கு உகந்ததா ஸ்வீட் பீடா?

ஜீரணத்துக்கு உகந்ததா ஸ்வீட் பீடா?

ஜீரணத்துக்கு உகந்ததா ஸ்வீட் பீடா?

Published:Updated:
##~##

உப்பு இல்லாத சாம்பாரா...? தாம்பூலம் தரிக்காத கல்யாணமா? - காலம்காலமாக வழக்கத்தில் உள்ள சொலவடை இது. ருசியாக வயிறு நிரம்பச் சாப்பிட்டு, சுண்ணாம்பு தடவிய வெற்றிலையுடன், பாக்கு, சீவலை வைத்து மடித்து வாயில் போட்டு மென்று, வாய் சிவக்கவும், உண்ட உணவு செரிக்கவும் மகிழ்ந்திருந்த காலம் இன்று மறைந்தே போய்விட்டது.   

வெற்றிலை போட்டால் உணவு செரிக்கும் என்ற நமது பாட்டி வைத்தியம், இன்னும் சில காலங்களில் பழங்கதையாகிவிடலாம். கடைகளில், 'கொழுந்து வெற்றிலையும், கொட்டபாக்கும்’கூட கிடைக்காமல் போகலாம். நம் ஊர் வெற்றிலை - பாக்கின் இடத்தை தற்போது கைப்பற்றியிருப்பது வட மாநில இறக்குமதியான பீடாதான்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரஜினிகாந்த் பீடா, ஸ்டூடண்ட்ஸ் பீடா என்று வித்தியாசமான பெயர்களிலும் பீடாக்கள் வலம் வருகின்றன. இவற்றில் சில பொருட்கள் ரகசியமாகவும் சேர்க்கப்படுகின்றன. இதுபற்றி கோவையைச் சேர்ந்த பீடா ஸ்டால் உரிமையாளர் ஜி.ஆர்.சிங்கிடம் பேசினோம்.

ஜீரணத்துக்கு உகந்ததா ஸ்வீட் பீடா?
ஜீரணத்துக்கு உகந்ததா ஸ்வீட் பீடா?

''பட்டர், ஸ்வீட், குல்கந்த், சுபாரி என பீடாக்களில் பலவகை உள்ளன. சுப நிகழ்ச்சிகளில் நாம் மெல்லும் ஸ்வீட் பீடாக்கள் வெற்றிலை, சீவல், ஏலக்காய், கிராம்பு, பதப்படுத்தப்பட்ட தேங்காய்த் துருவல், உலர் பழங்கள் மற்றும் தேன் ஆகியவை கொண்டு தயாரிக்கபடுகிறது. இதில் உடலுக்கு தீங்கு தரும் எந்தவகை பொருட்களும் இல்லை. வாடிக்கையாளரின் கண் முன்னரே தயாரித்துத் தருகிறோம். பீடா சுபாரி, புகையிலை தூள் மற்றும் பாக்கு போன்றவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்தக் கலவை கடைக்குக் கடை தயாரிப்பவர்களை பொருத்து மாறுபடும். இளைஞர்கள் அதிகம் வாங்கி செல்வது பீடா சுபாரியைத்தான்! 'பான் மசாலா பீடாக்கள்’ தற்போது தடை செய்யப்பட்டு விட்டதால், அது  விற்கபடுவதில்லை' என்றார்.

பீடாவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனையின் வயிறு மற்றும் குடல் சிறப்பு மருத்துவர் முருகேஷிடம் கேட்டோம்.  

'நாம் உண்ணும் உணவு செரிமானம் ஆவதற்கு, நமது உடலிலேயே தேவையான அமிலம் சுரக்கிறது. ஆனால், பீடா நமது உணவு செரிமானத்துக்கு இடையூறுதான். பீடா, பாக்கு போன்றவற்றை  உண்ணும்போது, செரிமானத்துக்கான அமில உற்பத்தியும் குறைய வாய்ப்புள்ளது. இவற்றைத் தொடர்ந்து மெல்லும்போதும், வாய்க்குள் வைத்துச் சுவைக்கும்போதும் வாயின் உட்புறச் செல்கள் பாதிப்படைகின்றன. இது வாய்ப்புற்று நோய் வர முக்கிய காரணம். பாக்கு, புகையிலை முதல் நிலை 'கேசினோஜென்’களில் ஒன்று. இது ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல. பீடா மெல்வதைக் கைவிடுதல் மட்டுமே புற்று நோயிலிருந்து தப்பிக்க ஒரே வழி' என்கிறார்.

- ஞா. சுதாகர்,

படங்கள்: ஆர்.சதானந்த்

  கடந்த ஆறு வருடங்களாக பீடா சாப்பிட்டு பாதிப்புக்கு உள்ளான பிரவீன்குமார் என்பவரிடம் கேட்டதற்கு:

பள்ளியில் படிக்கிறப்பவே, பீடா போடுற பழக்கம் இருந்தது. முதன்முதலா வாங்கி மென்றப்ப, ஒருவித மயக்கம் இருந்துச்சு. தொடர்ந்து அதிகமா பயன்படுத்த ஆரம்பிச்சேன். ஒரு கட்டத்துல தினமும் நாலு பீடா போடாம என்னால இருக்க முடியலை. சில மாசங்களிலேயே என்னோட பற்கள் கரைபடிய ஆரம்பிச்சிருச்சு. தொண்டை எரிச்சல், வாய்புண் வந்து ரொம்பவே அவஸ்தைப்பட்டேன். மோசமான அறிகுறிகள் தெரிய, கொஞ்சம் கொஞ்சமா சாப்பிடறதைக் குறைச்சு, இப்ப, பீடா பக்கமே போறதில்லை. இப்ப அரசு தடை செஞ்சாலும், புகையிலை, குட்கா வகைகளை பீடாவுக்குள் வெச்சு இன்னிக்கும் பல கடைகளில் மறைமுகமாக விரும்பிக் கேக்கறவங்களுக்கு விக்கிறாங்க' என்றார்.

 வெற்றிலையின் பயன்கள்:

ஜீரணத்துக்கு உகந்ததா ஸ்வீட் பீடா?

பாரம்பரிய வெற்றிலையின் பயன்கள் பற்றி கோவை சித்த மருத்துவர் வே. சண்முகப்பாண்டியிடம் கேட்டோம்.  

பல நோய்களுக்கு சித்த மருத்துவத்தில் வெற்றிலையே பிரதான மருந்து. பாக்கு கலக்காத வெற்றிலை உடலுக்கு நன்மை பயக்கும்.  வயிறு உப்புசம், வாதம், பித்தம், கபம் எனப்படும் முப்பிணியைக் குணமாக்கும்.

ஜீரணத்துக்கு உகந்ததா ஸ்வீட் பீடா?

வெற்றிலை மற்றும் இஞ்சி ஆகியவற்றின் சாறு எப்பேர்ப்பட்ட நுரையீரல் நோய்களுக்கும் உடனடி நிவாரணமாக அமையும். நாள் பட்ட நுரையீரல் நோய்களுக்கும் தீர்வாகும். வெற்றிலையை உணவுக்குப் பின்பு உண்டால் செரிமானம் ஆகும். வெற்றிலையுடன் மிளகு சேர்த்துத் தயாரிக்கப்படும் கஷாயம் உணவு செரிமானத்துக்கும் சளி, கபம் போன்றவற்றுக்கும், விஷ முறிவுக்கும் அருமருந்து.

குழந்தைகளுக்கு வரும் இருமலை வெற்றிலை சாறு மற்றும் சுண்ணாம்பு கலந்த கலவையை தொண்டை பகுதியில் தடவுவதன் மூலம் குணமாக்கலாம்.