Published:Updated:

பற்களை வரிசைப்படுத்த வழி உண்டா?

பற்களை வரிசைப்படுத்த வழி உண்டா?

பற்களை வரிசைப்படுத்த வழி உண்டா?

பற்களை வரிசைப்படுத்த வழி உண்டா?

Published:Updated:
பற்களை வரிசைப்படுத்த வழி உண்டா?

டி.சிவரஞ்சனி, காரைக்குடி

 'நான் கல்லூரி மாணவி. 12 வயது பெண்ணைப் போல், உடல் மெலிந்து, பலவீனமாக இருக்கிறேன். 'மல்ட்டி விட்டமின்’ மாத்திரைகளை எடுத்துக்கொள்ளச் சொல்லி பலரும் பரிந்துரைக்கிறார்கள். இது சரியா?'

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டாக்டர் வெங்கடேஷ் பாபு, பொது மருத்துவர், திருநெல்வேலி

பற்களை வரிசைப்படுத்த வழி உண்டா?

'இந்தியாவில் பெரும்பாலான டீன் ஏஜ் பெண்களுக்கு ரத்தசோகை நோய் உள்ளது. அதனால்கூட, உங்கள் தேகம் மிகவும் மெலிந்து இருக்கலாம். பெண்களுக்கான சிறப்பு மருத்துவரிடம் காண்பித்து பரிசோதனை செய்யுங்கள். அவரின் ஆலோசனைப்படி, மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்வது நல்லது. சத்தான ஆகாரம், நிறையக் காய்கறிகள், பழங்களை உணவில் சேர்த்துக்கொள்வது உடலை ஆரோக்கியமாக்கும்.  அவசியமானால் அதுவும் மருத்துவரின் பரிந்துரையுடன் மட்டுமே மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். மல்ட்டி விட்டமின் மாத்திரைகளேகூட சிலசமயம் பக்க விளைவுகளை ஏற்படுத்திவிடும் அபாயம் உண்டு. அதனால் டாக்டரின் பரிந்துரை இல்லாமல் எந்த மாத்திரையையும் எடுக்கக் கூடாது.'

பி.தினகரன், மதுரை

'எனக்கு முகத்தில் எண்ணெய்ப் பசை அதிகம். முகத்துக்கு சோப் போடுவதைத் தவிர, வேறு எந்த ஒரு அழகுசாதனப் பொருட்களையும்  பயன்படுத்துவது இல்லை. எண்ணெய்ப் பசையைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?'

டாக்டர் உதயசங்கர், தோல் நல மருத்துவர், புதுச்சேரி

பற்களை வரிசைப்படுத்த வழி உண்டா?
##~##

'நமது சருமத்தில் செபேஷியஸ் (Sebaceous)சுரப்பிகள், கொழுப்பு நிறைந்த சீபம் என்ற எண்ணெய் போன்ற திரவத்தை தோலின் பாதுகாப்புக்காகச் சுரக்கின்றன. இந்தச் சுரப்பிகள் முகம், தலை, மார்பு, மேல் முதுகு போன்ற இடங்களில் அதிக எண்ணிக்கையில் இருக்கும். சீபம் என்ற திரவம், சருமத்தை வறண்டு போகாமலும் பாக்டீரியா மற்றும் பூஞ்சைத் தாக்குதலில் இருந்தும் பாதுகாக்கிறது. 'ஆன்ட்ரோஜென்’ (Androgen) எனப்படும் ஹார்மோன் ஆண்களுக்கு அதிகமாகவும் பெண்களுக்குக் குறைவாகவும் சுரக்கும். ஆணின் விதை, பெண்ணின் கருவகம் மற்றும் அட்ரினல் சுரப்பியி லிருந்தும் இது பூப்படையும் வயதிலிருந்து சுரக்க ஆரம்பிக்கும். இதுதான் 'செபேஷியஸ்’ சுரப்பிகளைத் தூண்டி சீபத்தை சுரக்கவைக்கிறது. நாம் உண்ணும் உணவுக்கும், சுரக்கும் சீபத்துக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. வயது அதிகரிக்கும்போது சீபம் சுரப்பது தானாகவே குறையும். அதிக அளவில் சீபம் சுரப்பதால், முகம் எப்போதும் எண்ணெய்ப் பிசுபிசுப்புடன் காணப்படும்.

எண்ணெய்ப் பிசுபிசுப்பு அதிகமாக உள்ளவர்கள் தினமும் தோலை ஈரப் பசையுடன் வைக்கும் மாய்ச்சரைஸர் க்ரீம்களைத் தவிர்ப்பது நல்லது.

சோப்பைத் தவிர்த்து, மூன்று வேளையும் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவினால், அது எண்ணெய்ப் பிசுபிசுப்பை ஓரளவுக்குக் குறைக்கும்.

ஃபேஸ்வாஷ் மற்றும் க்லென்ஸர்களை ஒரு நாளைக்கு மூன்று முறை பயன்படுத்தலாம். இதன் பிறகும் சருமத்தில் எண்ணெய் அதிகம் இருந்தால், தோல் மருத்துவரை அணுகுவது நல்லது.

எம். சங்கீதா, கோயம்புத்தூர்

'நான் கல்லூரி மாணவி. எனக்கு முன் வரிசை பற்கள் ஒழுங்காக இல்லை. சிரித்தால் அசிங்கமாக இருப்பதாக நண்பர்கள் கேலி செய்கிறார்கள். கிளிப் போடுவதன் மூலம் இதை சரிசெய்யலாம் என்கிறார்கள். கிளிப் போட்டால் இன்னும் அசிங்கமாக இருக்குமோ என்று பயப்படுகிறேன். எப்படி சரிசெய்வது?'

பற்களை வரிசைப்படுத்த வழி உண்டா?

டாக்டர் நரேந்திரன், பல் மருத்துவர், திருச்சி

'பற்கள் வெளியே நீட்டிக்கொண்டிருப்பதைத் தவிர்க்க 'கிளிப்’ போடுவது உட்பட மூன்று வகையான சிகிச்சைமுறைகள் உள்ளன. கிளிப் போடுவது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், அறுவைசிகிச்சைதான் தீர்வு. முன் பற்கள் அனைத்தையும் சீராக்க 'ஆஸ்டியோக்டமி’ (Osteotomy), ஒன்றிரண்டு பற்கள் மட்டும் நீட்டிக்கொண்டிருந்தால் கார்டிசோக்டமி (corticotomy) போன்ற சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. முன்வரிசை பற்களை, அப்படியே பின்னோக்கி நகர்த்துவதை இம்பிளான்ட் அறுவைசிகிச்சை மூலம் செய்யலாம். ஆனால், இதற்கான செலவு சற்று அதிகம். யாருக்கு என்ன மாதிரியான சிகிச்சை சரியாக இருக்கும் என்பது அவரது உடல்நிலை, அவரது பற்களின் வேரின் அமைப்பு, தன்மையை கொண்டே முடிவு செய்ய முடியும். சிறு வயதில் விரல் சூப்புதல், பாட்டில் பால் குடித்தல், வாயைத் திறந்துகொண்டே தூங்குவது, உதட்டைக் கடிப்பது போன்ற காரணங்களால், பற்கள் நீட்டிக்கொண்டு வெளியே தெரியும். இதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சரிசெய்யலாம்.  குழந்தைகளை சிறு வயது முதல் குறைந்தது ஆண்டுக்கு ஒரு முறை கட்டாயம் பல் மருத்துவரிடம் அழைத்துச் செல்வது நல்லது.'

படங்கள் : ஜெ.வேங்கடராஜ், தே.தீட்ஷித்

பற்களை வரிசைப்படுத்த வழி உண்டா?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism