Published:Updated:

வலிகளை வீழ்த்தலாம்!

பிசியோதெரப்பியில் பெஸ்ட் சிகிச்சை!

வலிகளை வீழ்த்தலாம்!

பிசியோதெரப்பியில் பெஸ்ட் சிகிச்சை!

Published:Updated:
##~##

உடல் உழைப்பாளி முதல், உட்கார்ந்தே பணிபுரிபவர்கள் வரை அனைவருக்கும் உடல்வலி என்பது பொது சொத்து. வலியிலிருந்து மீள, புத்துணர்ச்சி பெற, மாதம் ஒருமுறை பார்லருக்கு போய் 'ஸ்பா’ செய்து கொள்வதும் இன்று வழக்கமாகிவிட்டது. இதுதவிர எத்தனையோ வலி நிவாரணிகள் வந்தாலும், அவை வலிகளைக் குறைக்கின்றனவே தவிர, நிரந்தரத் தீர்வைத் தருவதில்லை.   

உடல் மற்றும் மனரீதியான பிரச்னைகள், நோய்கள், பாதிப்புகள் என உடல்வலிக்குப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். இத்தகைய வலிகளை நிரந்தரமாக நீக்கும் சிகிச்சை முறைகளில் ஒன்றுதான்... பிசியோதெரப்பி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

யார் யார் பிசியோதெரப்பி சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்? என்ன மாதிரியான வலிகளை நீக்கும் ஆற்றல் பிசியோதெரப்பிக்கு உள்ளது? சென்னையைச் சேர்ந்த பிசியோதெரப்பிஸ்ட் ஞா.விஜய் ஆனந்திடம் கேட்டோம்.

வலிகளை வீழ்த்தலாம்!
வலிகளை வீழ்த்தலாம்!

'நம் உடலின் எலும்புகள், இரண்டு மூட்டுகள் சேரும் இடம், தசைகள், நரம்புகள், கணுக்கள் மற்றும் தசை நாளங்கள் போன்ற இடங்களில் வலி அதிகமாக ஏற்படும்.

இளம் வயதினர் அதிகம் டூ வீலர் ஓட்டுவதாலும், அதிக நேரம் உட்கார்ந்த நிலையில் வேலை பார்ப்பதாலும், முதுகு தண்டு மற்றும் இடுப்பு வலி ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இது மாதிரியான பிரச்னைகளுக்கு மருத்துவரின் ஆலோசனை இன்றி நேரடியாகவே பிசியோதெரப்பிஸ்ட்களை அணுகலாம்.

பெண்களுக்கு கால்சியம் சத்து குறையும்போது, எலும்புகள் வலுவிழந்து, மூட்டுப் பகுதி, தசை சவ்வுகள், எலும்புகளில் வலி ஏற்படலாம். அதேபோல, வயதானவர்களுக்கு கால் மூட்டு, கழுத்துப் பகுதிகளில் அதிக வலி இருக்கும். இந்தப் பிரச்னைகளுக்கு எல்லாம் நேரடியாகவே பிசியோதெரப்பிஸ்டுகளை அணுகலாம்.  ' என்றவர்  சிகிச்சை முறைகளைப் பற்றி சொன்னார்.  

'மூட்டுவலி, கால்வலி, தசைப்பிடிப்பு, பக்கவாதம், முகவாதம், அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள், முதுகுத்தண்டு, மூளைப் பாதிப்பு, மூச்சுத் திணறல், கர்ப்பிணிகளுக்கான உடற்பயிற்சிகள், முதியவர்களுக்கு ஏற்படும் வலிகள், பிறவியிலேயே இருக்கும் குறைபாடுகள், விபத்துகளால் ஏற்படும் பாதிப்புகள், பல்வேறு வலி தொடர்பான பிரச்னைகளுக்கு பிசியோதெரப்பியில் சிகிச்சை இருக்கின்றன. எல்லா வயதினருக்கும் இந்த முறையில் சிகிச்சை அளிக்க முடியும்.

வலிகளை வீழ்த்தலாம்!

வலிகளுக்கான சிகிச்சை மேற்கொண்டவர்கள் சிகிச்சைக்குப் பிறகு வாழ்க்கை முறையிலும், பழக்கவழக்கங்களிலும் சில மாற்றங்கள் மேற்கொள்ள வேண்டும். அவற்றைத் தொடர்ந்து கடைப்பிடிக்காவிட்டால் அந்த வலிகள் மறுபடியும் வரலாம். அப்படி பிரச்னை வராமல் இருக்கவும், தினசரி வேலைகளைச் சரியாகச் செய்யவும் பிசியோதெரப்பி வழிகாட்டுகிறது.

முதுகுவலி சிகிச்சைக்கு வருவார்கள். சிகிச்சைக்குப் பிறகு முதுகுவலி இல்லாமல் போய்விடும். மீண்டும் வலி வராமல் இருக்க எப்படி எழுந்திருப்பது? எடையுள்ள பொருட்களை எப்படித் தூக்குவது என்பதில் தொடங்கி பல்வேறு பயிற்சிகள் அளிப்போம்.

ஆனால், வலி மறைந்ததும், பழையபடி கடினமான வேலைகளைச் செய்வார்கள். பயிற்சிகளை எல்லாம் அப்படியேவிட்டுவிடுவார்கள். இதனால் அவர்களுக்கு மீண்டும் அதே பிரச்னை ஏற்படலாம். இதைத் தவிர்க்க டாக்டர்கள், பிசியோதெரப்பிஸ்ட் சொல்வதை பின்பற்றுவது மிகவும் அவசியம். பிசியோதெரபிஸ்ட்டை நேரடியாகச் சந்தித்து சிகிச்சை பெறுவதுதான் முக்கியம்.

விளையாடுபவர்களுக்கு ஏற்படக் கூடிய தசைப்பிடிப்பு, தசைக் கிழிவு, சவ்வு கிழிதல், தசைச் சோர்வு மற்றும் காயத்தினால் நிரந்தரக் குறைபாடு ஏற்பட்டுவிடாமல் பாதுகாக்க சிகிச்சை அளிக்கப்படும்.  தற்போது 'டேப்பிங்’ என்ற முறையில் விளையாட்டுக் காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால், பாதிக்கப்பட்டவர் விரைவாக விளையாட்டுக்குத் திரும்ப முடியும்.

தற்போது, பிசியோதெரப்பிஸ்ட்டில் எலும்பு, இதயம்-நுரையீரல், குழந்தைகள் நலம், மூளை நரம்பியல், முதுமை போன்ற சிறப்பு பிரிவுகள் உள்ளன' என்ற விஜய் ஆனந்த், சில இயந்திரங்களின் மூலம் அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் பற்றி விவரித்தார்.

அல்ட்ரா சவுண்ட் தெரப்பி:

விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படும் தசைப் பிடிப்பு, குதிகால் வலி, மூட்டு வலி பிரச்னைகளுக்கு இந்தச் சிகிச்சை முறை பயன்படுத்தபடுகிறது. இதில், ஒலி அலைகளைச் செலுத்தி, பாதிக்கப்பட்ட இடத்தில் சிறு அதிர்வை ஏற்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது.

வலிகளை வீழ்த்தலாம்!

வாக்ஸ் பாத்:

மூட்டு வலி, தசைச் சோர்வு, எலும்பு முறிவு போன்ற பிரச்னைகளுக்கு இந்தச் சிகிச்சை முறை கையாளப்படுகிறது.

ட்ராக்ஷன்:

இழுவை சக்தி கொண்ட இயந்திரம் மூலம் இந்தச் சிகிச்சை அளிக்கப்படுகின்றது. முக்கியமாக தண்டு வடத்தில் ஏற்படும் பிரச்னைகளுக்கு இந்தச் சிகிச்சை முறையைப் பயன்படுத்தி சரி செய்யலாம். ட்ராக்ஷன் சிகிச்சையிலேயே 'ட்ரன்ங் ப்ரோலாப்ஸ்’ மற்றும் 'சயாடிக்’ முறைகளில் வலிகளை நீக்கமுடியும்

ஐ.எஃப்.டி:

குறைந்த அளவு மின்சார சக்தியைப் பயன்படுத்தி கழுத்து வலி, முதுகு வலி தோள்பட்டை மற்றும் இடுப்பு போன்ற பகுதிகளுக்கும், எலும்பு மற்றும் எலும்பு மூட்டுகள் சேரும் இடத்திலும் இந்தச் சிகிச்சை முறை பயன்படுத்தப் படுகிறது.  

காலவாளிக் / பேராடிக் ஸ்டிமுலேஷன்:

முகவாதம், மற்றும் பக்கவாத பக்கவாதத்தால் பாதிக்கபட்டவர்களுக்கு நீண்ட நாள் சிகிச்சை தர பயன்படுத்தப்படும் இயந்திரம் இது.  

இந்தச் சிகிச்சை முறைகளுடன் மேலும் சில உடற்பயிற்சிகளையும் குறிப்பிட்ட கால கட்டத்துக்குப் பரிந்துரைக்கப்படும்.

இனி... 'வலி’ அனைத்துக்கும் 'வழி’ உண்டு!

- புகழ்.திலீபன்,

படங்கள்: தி.குமரகுருபரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism