Published:Updated:

4 சொட்டு ரத்தம்... 40 நோய்களுக்குத் தடா!

-மிரட்டும் புதிய பரிசோதனை

4 சொட்டு ரத்தம்... 40 நோய்களுக்குத் தடா!

-மிரட்டும் புதிய பரிசோதனை

Published:Updated:
##~##

நோய் தாக்கிய பிறகு, அதை நிவர்த்தி செய்வதற்குத்தான் மருத்துவர்கள் வாழ்நாள் முழுவதும் போராடுகிறார்கள். ஒரு நோய் வரப்போகிறது என்பதை முன்னரே கண்டுபிடித்துத் தடுக்க முடிந்தால்... அதுவும் குழந்தையாக இருக்கும்போதே, எதிர்கால நோய்களைக் கண்டறிந்து தடுத்துவிட்டால், வாழ்க்கை எத்தனை சுலபமாக இருக்கும்!

 'நோய் இல்லாத வாழ்க்கை எத்தனை ஆனந்தமாக இருக்கும், அப்படி ஒரு வாழ்க்கை அமையுமா?’ என்று இனியும் ஏங்கவேண்டியது இல்லை.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆம், வந்தாச்சு புதிய பரிசோதனை, அதுவும் தமிழகத்தில்!

''4 சொட்டு ரத்தத்தின் மூலம் 40 வகையான எதிர்காலப் பாதிப்புகளைக் கண்டறிய முடியும்!'' என்று ஆச்சர்யப்படுத்துகிறார் மருத்துவர் சுரேஷ். இவர் சென்னை, மெடிஸ்கேன் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் 'முதிர் கரு பாதுகாப்பு ஆய்வு அறக்கட்டளை’ என்ற அரசு சாரா நிறுவனத்தின் இயக்குநர்.

''குழந்தை பிறந்து 72 மணி நேரத்துக்குப் பிறகு, இந்தப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். இதற்கு 'நியூ பார்ன் ஸ்கிரீனிங்’ என்று பெயர். குழந்தையின் உட்பாதத்தில் இருந்து ரத்தம் எடுக்கப்படும். மற்ற இடங்களைவிட உட்பாதத்தில் சதை நிறைய இருப்பதால் எலும்பு அல்லது நரம்புகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது.

4 சொட்டு ரத்தம்... 40 நோய்களுக்குத் தடா!

நம் நாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்குப் பொதுவாக ஐந்து வகையான பாதிப்புகள் இருக்கின்றன. கான்ஜெனிட்டல் ஹைபோ தைராய்டிஸம், கான்ஜெனிட்டல் அட்ரினல் ஹைபர்பலாஸ்யா, ஜி6பிடி, சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ், காலக்டோசீமியா ஆகியவையே அந்த பாதிப்புகள்.

இவற்றில் முதல் இரண்டு வகைப் பாதிப்புகள் தமிழகத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு அதிகமாக

4 சொட்டு ரத்தம்... 40 நோய்களுக்குத் தடா!

இருக்கிறது. கான்ஜெனிட்டல் ஹைபோ தைராய்டிஸம் பாதிப்புடன் பிறந்த குழந்தைக்கு தைராய்டு சுரப்பிகள் வேலை செய்யாமல் போகலாம். இதைத்தான் தைராய்டு சுரப்புக் குறை (ஹைபோ தைராய்டிஸம்) என்போம். அயோடின் உள்ள ஹார்மோன்களின் வளர்ச்சியை முறைப்படுத்தவும், மூளை வளர்ச்சிக்கும் மற்றும் வளர்சிதை மாற்றம் (மெட்டபாலிஸம்) ஆகியவற்றுக்கும் அடிப்படையாக இருப்பது இந்த தைராய்டு சுரப்பிதான். இது வேலை செய்யாமல் போனால், உடல் மற்றும் மூளை வளர்ச்சி தடைபட்டுப் போகும். உலக அளவில் 4,000-த்தில் ஒரு குழந்தைக்கு இந்த பாதிப்பு இருக்கிறது. ஆனால் நம் நாட்டில், குறிப்பாக எழும்பூர் மருத்துவமனையில் நாங்கள் பரிசோதனை நடத்தியபோது, ஆயிரத்தில் மூன்று குழந்தைகளுக்கு இந்தப் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.

அதே அளவில், கான்ஜெனிட்டல் அட்ரினல் ஹைபர்பலாஸ்யா என்ற பாதிப்பு உள்ள குழந்தைகளும் இருக்கின்றன. அண்ணீரகச் சுரப்பி (அட்ரினல்) சம நிலை தவறி அதிக அளவில் சுரக்க ஆரம்பிக்கும். அதனால், கார்டிசோல் மற்றும் அல்டோஸ்டிரோன் ஆகிய ஹார்மோன்களைச் சுரக்கவைக்கும் நொதியம் (என்சைம்ஸ்) தடைபடுகிறது. ஆகவே, ஆண் செக்ஸ் ஹார்மோனான ஆன்ட்ரோஜன் அதிக அளவில் உற்பத்தியாகும். அதன் மூலம் ஆண் குழந்தைகள் மிகவும் சிறு வயதிலேயே அந்த வயதுக்கு உரிய உடல் தன்மைகள் இல்லாது, மிக விரைவாக ஆண் தன்மை அடைந்துவிடுகின்றன. இது அந்தக் குழந்தையை மரணத்துக்கே இட்டுச் செல்லும். இதே பாதிப்புடன் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு, பெண் இனப் பெருக்க உறுப்புடன் சேர்ந்து ஆண் இனப் பெருக்க உறுப்பும் வளரும்.

இதுபோன்ற பாதிப்புகளுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு தினமும் ஸ்டீராய்ட்கள் கொடுத்து தேவையான சுரப்பியைச் சுரக்கச் செய்ய முடியும். இந்த இரண்டு பாதிப்புகளுக்கும், முற்றிலும் குணப்படுத்தக்கூடிய மருத்துவ முறைகள் ஏதும் அறியப்படவில்லை. ஆனால், தகுந்த 'சப்போர்டிவ் கேர்’ மூலம் அவர்கள் சராசரி மனிதர்கள்போல வாழ்க்கையை நடத்த முடியும். இந்த இரண்டு பாதிப்புகள் குறித்த பரிசோதனையை மேற்கொள்ள

4 சொட்டு ரத்தம்... 40 நோய்களுக்குத் தடா!

1,000 முதல்

4 சொட்டு ரத்தம்... 40 நோய்களுக்குத் தடா!

1,500 வரை செலவாகும்.

இந்த 'நியூ பார்ன் ஸ்கிரீனிங்’ பரிசோதனையில் உள்ள இரண்டாவது வகைப் பரிசோதனையை, டான்டம் மாஸ் ஸ்பெக்டோமெட்ரி என்று அழைப்போம். இந்த வகைப் பரிசோதனையில்தான், 40 வகையான பாதிப்புகள் பற்றி அறிந்துகொள்ள முடியும். ஆனால், இதற்கான செலவு கொஞ்சம் அதிகம். குழந்தையிடம் இருந்து எடுக்கப்பட்ட அந்த ரத்தத்தைக்கொண்டு பெற்றோரின் விருப்பத்துக்கு இணங்க 40 பாதிப்புகளில், எத்தனை பாதிப்புகள் குறித்து அவர்கள் அறிய விரும்புகிறார்களோ, அதற்கு ஏற்றபடி பரிசோதனைகள் மேற்கொள்வார்கள். உதாரணத்துக்கு, ஒரு தம்பதி 20 குறைபாடுகளுக்கான பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று நினைத்தால், அந்த அளவுக்கு மட்டுமே பரிசோதனைகள் செய்யலாம்!'' என்கிறார் மருத்துவர் சுரேஷ்.

வெளிநாடுகளில் இந்த 'நியூ பார்ன் ஸ்கிரீனிங்’ முறைப் பரிசோதனை கட்டாயம் ஆகும். இந்தியாவிலும் கட்டாயம் ஆக்குவதற்கான முதற் கட்ட சோதனை முயற்சி நடைபெறுகிறது. மூளை வளர்ச்சி இன்மை போன்ற குறைபாடுகளை ஆரம்பத்திலேயே தடுத்து, அதை முறைப்படுத்துவதற்கான வாய்ப்புகளும் இருக்கும்போது, 'நியூ பார்ன் ஸ்கிரீனிங்’ முறையை ஏன் அரசு கட்டாயம் ஆக்கக் கூடாது?

- ந.வினோத் குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism