Published:Updated:

தலைமுடிக்கு தீர்வு!

தலைமுடிக்கு தீர்வு!

பிரீமியம் ஸ்டோரி
##~##

புற்றுநோயாளிக்கு கீமோதெரப்பி சிகிச்சை அளிக்கும்போது, முடி கொட்டுதல் என்பது தவிர்க்க முடியாதது. ஒருவருக்கு புற்றுநோய் இருப்பதைக் கண்டறியும்போது, அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி... அவர்கள் முதலில் கவலைக்குள்ளாவது முடிகொட்டுதல் என்ற பக்கவிளைவை நினைத்துத்தான். இப்போது, புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுபவர்களுக்கும் பெற்றவர்களுக்கும் முடி கொட்டுவதால் ஏற்படும் கவலையைப் போக்க நவீனத் தொழில்நுட்பம் வந்துள்ளது. சென்னை 'அட்வான்ஸ்டு ஹேர் ஸ்டூடியோ’வைச் சேர்ந்த டாக்டர் சுபாஷினி கமலக் கண்ணனிடம் பேசினோம். 

'நம் தலையில் லட்சத்துக்கும் மேற்பட்ட முடிகள் உள்ளன. இவை, தொடர்ந்து மிக வேகமாக வளர்ந்துகொண்டே இருக்கக்கூடியவை. புற்றுநோய் சிகிச்சைக்கு கீமோதெரப்பி மற்றும் தலையில் ஏற்படும் புற்றுக்கட்டிக்கு அளிக்கப்படும் கதிர்வீச்சு சிகிச்சை காரணமாக முடி கொட்டுவது தவிர்க்க முடியாதது.

தலைமுடிக்கு தீர்வு!

வேகமாக வளரக்கூடிய புற்றுநோய்த் திசுக்களை அழித்துக் கட்டுப்படுத்தக்கூடியது கீமோதெரப்பி சிகிச்சை. இதற்கு அளிக்கப்படும் மருந்தானது உடல் முழுவதும் பயணிக்கிறது. அப்படிச் செல்லும் மருந்து, வேகமாக வளரக்கூடிய முடி செல்களையும் தாக்குகிறது. இதுவே முடி கொட்ட முக்கியக் காரணம். சிலருக்கு புருவம், இமை உள்பட உடல் முழுவதும் உள்ள முடி கொட்டிவிடும். இது தற்காலிகமானதுதான். சிகிச்சைக்குப் பிறகு முடி வளர ஆரம்பிக்கும். ஆனால், எப்போது வளரும், முன்போலவே இருக்குமா என்றெல்லாம் கணிக்க முடியாது. சிலருக்கு முடி முளைக்கத் தாமதமாகலாம்.  சிலருக்கு முடியின் அடர்த்தி குறைந்து மெலிந்து போகக்கூடும். சிலருக்கு முடி மீண்டும் வளர்வது மிகச் சிரமமாக இருக்கும்.

ஹார்மோன் பிரச்னை காரணமாக மார்பகப் புற்றுநோய் ஏற்பட்ட பெண்களுக்கு முடி மீண்டும் முளைப்பது தாமதமாக இருக்கும். இப்படி, தலைமுடி கொட்டுவதால் தன்னம்பிக்கை இழந்தவர்கள் பலர். இவர்களுக்காகவே, அட்வான்ஸ்டு லேசர் தெரப்பி, ஸ்டாண்ட் பை ஸ்டாண்ட் ஆல்டர்நேட் மற்றும் ஸ்டாண்ட் பை ஸ்டாண்ட் காஸ்மெட்டிக், ஃப்ளாஷ் பாய்ன்ட் என்ற நான்கு வகையான சிகிச்சைகள் அளிக்கிறோம். இதில் இரண்டு மருத்துவ ரீதியானது. மற்ற இரண்டு காஸ்மெட்டிக் தொடர்புடையது.

லேசர்

லேசர் சிகிச்சையில் முடி வேர்க்கால்களுக்குப் போதிய ரத்த ஓட்டம் கிடைப்பதை உறுதிப்படுத்தி, மீண்டும் ஆரோக்கியமாக முடி வளரச் செய்கிறோம். இதனால், முன்பிருந்ததுபோலவே முடி நன்கு அடர்த்தியாக இருக்கும். முடி கொட்டுவது தடுக்கப்படுகிறது. முடியின் நிறத்தை மேம்படுத்துகிறது.

ஸ்டாண்ட் பை ஸ்டாண்ட்

காஸ்மெட்டிக் முறையில், இயற்கையான முடி இருப்பதுபோன்ற நிலையை உருவாக்குகிறோம். இது 'விக்’ அல்ல. தலையில் ஒருவகையான பசையைத் தடவி இதைப் பொருத்திவிடுவோம். அதுவும், 'பேட்ச்’ டெஸ்ட் செய்தே இது பொருத்தப்படுவதால், சருமத்தில் வேறு பிரச்னைகள் வராது. இந்தச் செயற்கை முடியைப் பொருத்திக்கொண்டு நீச்சல் அடிக்கலாம், தலைக்கு ஷாம்பு போடலாம்.

தலைமுடிக்கு தீர்வு!

முடி ஆரோக்கியமாக வளர மருந்துகள் மற்றும் வெளிப்புற க்ரீம்களைத் தவிர்த்து ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களையும் பரிந்துரைக்கிறோம். இது புற்றுநோயால் முடி இழந்தவர்களுக்கு மட்டுமல்ல; முடி மற்றும் சருமம் என்றும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொருவரும் இதைப் பின்பற்றலாம்'' என்றார்.

- பா.பிரவீன்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு