Published:Updated:

சிரிப்புக்கு 'கிளிப்'!

சிரிப்புக்கு 'கிளிப்'!

பிரீமியம் ஸ்டோரி
##~##

உதட்டின் அழகு, புன்னகையில் ஜொலிக்கும். புன்னகைக்கு எழில் சேர்ப்பது பற்கள். பலர் சிரிக்க மறுப்பதற்குக் காரணம், வரிசையற்ற பற்களின் அமைப்புதான். 

'பூக்களைத் தொடுத்தது போன்று பற்களை வரிசையாக மாற்றலாம். கவலையை விடுங்கள்!' என்கிறார் புதுக்கோட்டை பல் மருத்துவர் சுதாகர்.

''கோணலான பற்களை நேர்செய்வது, தூக்கலான பற்களை உள்கொண்டு செல்வது, பற்களின் இடைவெளியைச் சரிசெய்வது போன்ற பல் தொடர்பான பிரச்னைகளுக்கு, 'ஆர்தோடான்டிக் ப்ரேசஸ்’ (Orthodontic braces)  எனப்படும் 'டென்டல் க்ளிப்’ பொருத்தப்படுகிறது. குழந்தைகளைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் பல் மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். பல்லின் அமைப்பில் பிரச்னை இருந்தால், ஆரம்ப நிலையிலேயே அதை 'கிளிப்’ போட்டுச் சரிசெய்துவிடலாம். ஆனால், பால் பற்கள் விழுந்த பிறகுதான் இந்த கிளிப் போடப்படும். பெரியவர்களும்கூட கிளிப் போட்டுக்கொள்ளலாம். இருப்பினும், இளம் வயதில் இதைப் பொருத்திக்கொள்ளும்போது நல்ல பலன் கிடைக்கும்.

சிரிப்புக்கு 'கிளிப்'!

தொடர்ந்து குறிப்பிட்ட இலக்கை நோக்கி அழுத்தம் கொடுத்துத் தள்ளும் பணியை, கிளிப் செய்கிறது.

சிரிப்புக்கு 'கிளிப்'!

இதனால், பல் வரிசை அழகாகிறது. இந்த கிளிப்பை அவரவர் பற்களின் வரிசை, வடிவம், இடைவெளிக்கு ஏற்ப குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் முதல் மூன்று வருடங்கள் வரை போடவேண்டி இருக்கும். கிளிப் பொருத்துவதற்கு, தாடை எலும்பும், ஈறும் உறுதியாக இருக்கவேண்டும். போதுமான உறுதி இல்லாதபட்சத்தில் உறுதிப்படுத்துவதற்கு, சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு கிளிப் போடும்போது, பற்களுக்குப் போதுமான அழுத்தம் கிடைக்கும்.

குறிப்பிட்ட காலத்துக்குப் போடக்கூடியது, அவ்வப்போது எடுத்து மாட்டக்கூடியது, வெளிப்புறம் தெரியாமல் உட்புறம் மாட்டக்கூடியது, பற்களின் நிறத்திலேயே இருக்கக்கூடிய மெட்டல், செராமிக், பிளாஸ்டிக் என கிளிப்பில் பல வகைகள் உள்ளன' என்றவர், கிளிப் போட்டவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்களைப் பற்றி விளக்கினார்.

'கிளிப் போடும்போது பல்லுக்கும் கிளிப்புக்கும் இடையே சிறிய இடைவெளி ஏற்படும். இதற்கு உள்ளே உணவுத் துணுக்குகள் புகுந்து பாக்டீரியா உள்ளிட்ட கிருமிகள் வளர ஆரம்பிக்கும். இந்தத் துணுக்குகளை அகற்றாதபோது, பல்லின் எனாமல் பாதிக்கப்படலாம். ஈறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படலாம். மேலும், சொத்தை விழுவதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும். பல் உள்ளே தள்ளப்படுவதால், பல் வேரில் பிரச்னை வரலாம். கிளிப் போட்ட பிறகு பல் மருத்துவரின் அறிவுரைகளைப் பின்பற்றாது போனால், பல் சீரமைப்பு முயற்சியும் தோல்வியடையலாம்' என்றார்.

அழகா இருக்கணும்னா, அக்கறை அவசியம்!

- ந.அபிநய ரோஷிணி

படங்கள்: ர. சதானந்த்

 'கிளிப்’ அணிந்தவர்களுக்கான டிப்ஸ்!

சிரிப்புக்கு 'கிளிப்'!

 ஐஸ்க்ரீம், ஜூஸ் போன்றவற்றை தாராளமாக சாப்பிடலாம்.  

சிரிப்புக்கு 'கிளிப்'!

 ஒரு நாளைக்கு, குறைந்தது இரண்டு முறை பல் துலக்க வேண்டும்.

சிரிப்புக்கு 'கிளிப்'!

 ஒவ்வொரு முறை உணவு உண்டதும், பல் துலக்குவது நல்லது. முடியாதபட்சத்தில்,  தண்ணீரைக்கொண்டு வாய் கொப்பளிக்க வேண்டும்.

சிரிப்புக்கு 'கிளிப்'!

 பல் துலக்கியதும் 'கிளிப்’ சுத்தமாக இருக்கிறதா என்பதை, கண்ணாடியில் பார்த்து உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

சிரிப்புக்கு 'கிளிப்'!

பல்லுக்கும் கிளிப்புக்கும் இடையே 'ஃப்ளாஸ்’ என்ற மெல்லிய மெழுகு நூலைப் பயன்படுத்தி, சுத்தம் செய்ய வேண்டும்.

சிரிப்புக்கு 'கிளிப்'!

 சுவிங்கம், வாயில் ஒட்டிக்கொள்ளக்கூடிய சாக்லெட், மிட்டாய், பாப்கார்ன் போன்ற உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.

சிரிப்புக்கு 'கிளிப்'!

 குறிப்பிட்ட கால இடைவெளியில் பல் மருத்துவரை அணுகி பல், ஈறு ஆரோக்கியத்தை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு